Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும்
  • மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பேரழிவை உருவாக்கும் திட்டங்களும், தொழிற்சாலைகளும் ஏன் வளரும் நாடுகளில் உருவாக்கப்படுகின்றன என, ஒரு செனட் சபை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மூன்றாம் உலக நாடுகளில் தான் உயிரின் விலை மலிவானது என பதில் வந்தது.

ஐரோப்பாவில் இயற்கை வளங்களை சீரழிக்கும் ஒரு திட்டம் வரும் என்றால் அதற்கு மிகப்பெரிய விலையை அபராதமாக கொடுக்க நேரிடும். ஆகவே சூழலை பாதிக்கும் எந்த உற்பத்தியையும் மூன்றாம் உலக நாடுகளில் தான் ஊக்குவிப்பார்கள். இந்த மனோபாவத்திற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதன் அடையாளங்களில் ஒன்று ஸ்டெர்லைட். பின்தங்கிய பகுதிகளில் பேராபத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகளை அனுமதித்து செயல்படுகிறார்கள்.
காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள்: அனைத்து பகுதிகளும் சுற்றி வளைப்பு!
பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி தேவை தான். ஆனால் அது மக்களின் வாழ்வை அழித்து தான் நிகழ வேண்டுமென்றால் அது பிள்ளைக்கறி கேட்பதற்கு ஒப்பானது. இந்த ஆலை இங்கே அமைய வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை. வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு என அவர்கள் எளிதாக ஏமாற்றப்பட்டார்கள்.

ஆலையால் ஏற்பட்ட பொருளாதார அனுகூலங்களை விட ஆலை வெளிப்படுத்திய மாசுகளும், கழிவுகளும், இயற்கைக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படுத்திய பாதிப்புகள் மிக மிக அதிகமாக இருந்தன. எதை விலையாக கொடுத்து எதை பெற்றிருக்கிறோம் என்பதை மக்களே உணர்ந்து ஒன்று திரண்டு போராடும் போது அந்தக் குரல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

சுதந்திர தின உரையில் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புகள் என்ன?

அந்த இரும்புக் கரம் ஓய்ந்து விடவில்லை. எப்படியாவது ஆலையை திறந்து மீண்டும் உற்பத்தியை துவங்கி விட முடியாதா என அது சகல வழிகளிலும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறது.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை சந்தித்த, சந்திக்கும், சந்திக்கப் போகும் துயரங்கள் அனைவரும் அறிந்தவை. தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளில் உறுதி அளித்தபடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்த உயிர்க்கொல்லி ஆலையை நிரந்தரமாக அகற்றும் சிறப்பு தீர்மானத்தை இயற்ற வேண்டும்.

தீர்மானத்தின் நகல் உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். அத்துடன் சொந்த ஆதாயங்களுக்காக விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு ஸ்டெர்லைட் ஆலை சர்வ சுதந்திரமாக சூழலை சீரழிக்க அனுமதித்த அரசு அதிகாரிகள் மீதும் நீள்துயிலில் இருந்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும் இப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிரே இறந்தவர்களுக்கு தூத்துக்குடியிலேயே நினைவகம் அமைத்திடவும் தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *