Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • கமலின் விக்ரம் படத்தில் ஃபஹதுக்கு வில்லத்தனமான கதாபாத்திரம்
  • கமலுக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி
  • விக்ரம் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் படத்தை அடுத்து உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு கமலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக விக்ரம் பட டீஸரை வெளியிட்டார்கள். தமிழக சட்டசபை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டதால் விக்ரம் படப்பிடிப்பை உடனே துவங்க முடியவில்லை.

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை மோசமாக இருப்பதால் படப்பிடிப்பை துவங்காமல் இருக்கிறார்கள். கொரோனாவின் தீவிரம் சற்று குறைந்ததும் படப்பிடிப்பை துவங்குவார்களாம். விக்ரம் படத்தில் தான் நடிப்பதாக மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்திருந்தார்.

வழக்கமாக ஃபஹத் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் தானே நடிப்பார். அப்படி இருக்கும்போது கமல் படத்தில் நிச்சயம் நல்லவராக நடிக்க வாய்ப்பே இல்லை என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தான் ஃபஹத் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

வில்லதனமான அரசியல்வாதியாக நடிக்கிறாராம் ஃபஹத் ஃபாசில். ஏற்கனவே விஜய் சேதுபதி எனும் மொரட்டு வில்லன் வேறு இருக்கிறார். அவரையும் சமாளித்து, ஃபஹதையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் கமலுக்கு. ஃபஹதின் கதாபாத்திரம் குறித்து அறிந்த ரசிகர்களோ, ஆண்டவர் பாவம் என தெரிவித்துள்ளனர்.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதில் பிரச்சனை இல்லை. லோகேஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதி வில்லத்தனம் செய்யப் போவது தான் கமல் ரசிகர்களுக்கு கவலையே. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியை வைத்து லோகேஷ் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
போடா அந்த ஆண்டவனே என் பக்கம்: ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் விஜய் சேதுபதிஇதற்கிடையே கமலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற விஜய் சேதுபதியின் ஆசை நிறைவேறிவிட்டது. தன் நீண்ட கால ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி.

விக்ரம் படப்பிடிப்பை துவங்க தயாராகி வரும் நேரத்தில் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் விலகிவிட்டார். இதையடுத்து கிரிஷ் கங்காதரனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *