Share on Social Media


கள்ளக்குறிச்சி:  இன்றைய நவீன காலம் பல முன்னேற்றங்களை தந்தாலும் மக்களிடம் பெரும்பாலும் அதிக மன உளைச்சலையே ஏற்படுத்துகிறது. தற்கொலை செய்து கொள்வது என்பது இப்போது சாதாரண செயலாக மாறிவிட்டது என்றேதான் சொல்ல வேண்டும்.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எதற்கெடுத்தாலும் தற்கொலை என்ற ஆயுதத்தையே கையில் எடுக்கின்றனர்.பரீட்சையில் தோல்வி,காதல் தோல்வி அல்லது வேலையின்மை என்று இதுபோன்ற இன்னும் பல காரணங்களால் தற்கொலைகள் நம் நாட்டில் அரங்கேறி வருகின்றது ஒரு கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.  அதிலும் குறிப்பாக மிகக் குறுகிய காலகட்டத்தில் காவலர்களில் அதிகமாகமானோர் பணிச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து வருவது தொடர்கதையான ஒன்றாக மாறிவிட்டது.

அந்தவகையில் கள்ளக்குறிச்சி வெள்ளாளர் தெருவில் வசித்து வருபவர் தேவராஜ் மனைவி தீபா(35). இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 7 மாதத்திற்கு முன்னன்,காவலர் தீபா தற்காலிகமாக வரஞ்சரம் காவல்நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  கடந்த 4 நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, காவலர் தீபாவை தொடர்பு கொண்டு மகளிர் காவல்நிலையத்திற்கு பணிக்கு வருமாறு அழைத்துள்ளார்.ஆனால் அவர் தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்ட வரஞ்சரம் காவல்நிலையத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை.

ALSO READ மாணவரை அடித்த ஆசிரியர் கைது!

இந்நிலையில் மீண்டும் மகளிர் ஆய்வாளர் மற்றும் அதே கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர் ஒருவர், தீபாவை தொடர்பு கொண்டு மகளிர் காவல்நிலையத்திற்கு பணிக்கு வராவிட்டால் உனக்கு மெமோ தந்து விடுவோம் என்று மிரட்டலுடன் எச்சரித்துள்ளனர்.  இதனால் என்ன செய்வதென்று அறியாமல் தவித்த தீபா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர்,காவலர் தீபா வழக்கம்போல் நேற்று வரஞ்சரம் காவல் நிலையத்துக்கு பணிக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவ் அந்த காவல்நிலையத்தில் இருந்தபடியே தனது கணவரிடம், தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

அதில்,”நமது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளை நல்லமுறையில் பார்த்து கொள்ளுங்கள்.எனக்கு அதிகாரிகள் பணிசுமை கொடுப்பதால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வருகிறேன்” என்று சற்று கனத்த குரலில் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார்.  போன் இணைப்பை துண்டித்த சில மணி நேரங்களுக்கு பின்னர் பெண் காவலர் ஒருவர், தீபாவின் கணவர் தேவராஜை தொடர்பு கொண்டு உங்கள் மனைவி தீபா விஷம் குடித்துவிட்டதாகவும், சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அடுத்து வருவதாகவும் கூறினார்.  இதனால் அதிர்ச்சியடைந்த தேவராஜ் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர்.மேலும்,தகவலறிந்த எஸ்பி ஜியாவுல்ஹக், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி ஆகியோர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு சென்று பெண் காவலரின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ ஒரே வாரத்தில் இரண்டாவது என்கவுண்ட்டர்; துரைமுருகன் சுட்டுக்கொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *