Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி.
  • கார்த்தி தற்போது பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • கைதி 2 திரைப்படம் உருவாகும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல்.

கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கைதி’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

‘மாநகரம்’ படத்திம் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் கைதி. விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் போட்டி போட்டு வந்த இந்த திரைப்படத்திற்கு பிகில் திரைப்படத்தின் அளவுக்கு கைதி படத்திற்கும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த வந்த கார்த்திக்கிற்கு, கைதி திரைப்படம் நல்ல கம்பேக்காக அமைந்தது.

இந்தப் படத்தின் வெற்றிக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தியும் ‘கைதி 2’ கண்டிப்பாக உருவாகும் என்று உறுதிப்படுத்தினார். முதல் பாகத்தின் கிளைமேக்ஸிலும், இரண்டாம் பாகம் தொடங்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் கைதி 2 திரைப்படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், அதன் பிறகு ‘கைதி 2’ திரைப்படம் குறித்து எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது.
மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தவித்த பிரபல நடிகர்: வெளியான பகீர் தகவல்!
இதனிடையில், ட்விட்டரில் பிரபலமாகி வரும் ஸ்பேஸ் உரையாடல் பக்கத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கலந்துகொண்டார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது கைதி 2 திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கார்த்தி சார், லோகேஷ் கனகராஜ் இருவருமே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன் கண்டிப்பாக ‘கைதி 2’ உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ’விக்ரம்’ திரைப்படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த இரண்டு படங்களும் முடிந்தவுடன் ‘கைதி 2’ திரைப்படத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *