Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • காத்து வாக்குல ரெண்டு காதல் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ஏமாந்த ரசிகர்கள்
  • விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்பொழுது தான் வரும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.
இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். படம் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது. போஸ்டரில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா ஆகிய மூவரும் இருப்பார்கள் என்று ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆனால் போஸ்டரில் விஜய் சேதுபதி மட்டும் தான் இருக்கிறார். போஸ்டரில் விஜய் சேதுபதியை ராம்போ என்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அதாவது ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹூந்திரன் என தெரிவித்துள்ளனர்.
போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

தலைவி நயன்தாரா எங்கய்யா. இதுக்கு பெயர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா?

ரசிகர்கள் டிசைன் செய்த போஸ்டரே இதை விட நன்றாக இருக்கிறது. அது என்ன ஓஹூந்திரன்னு ஒரு பெயர். நிறைய எதிர்பார்த்தோம், இப்படி ஏமாற்றிவிட்டீர்களே விக்னேஷ் சிவன். போச்சா இதுவும் போச்சா என தெரிவித்துள்ளனர்.
ராஜாக்கண்ணு மனைவி பெயரில் வங்கியில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்யும் சூர்யா



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *