Share on Social Media


உடல் உறுப்புகள் அதிக நேரம் செயல்பாட்டில் இருந்தாலோ அல்லது அதிக நேர உடல் உழைப்பு சம்மந்தமான வேலையில் ஈடுபட்டாலோ ஏற்படும் பிரச்சனை தான் தசை வலி ஆகும். அனைவருமே இதனை அனுபவித்து இருப்போம். சில சமயங்களின் அதனை சரி செய்ய போதுமான ஓய்வே சிறந்தது. மருத்துவ முறைப்படி இந்த தசை வலியை மயால்ஜியா என்று அழைக்கலாம்.

​தசை, மூட்டு வலி ஏன் ஏற்படுகிறது ?

ஏன் தசை வலி ஏற்படுகிறது என்றால், பொதுவான பதட்டம், மன அழுத்தம், அதிகப்படியான உடலியல் பயன்பாடு மற்றும் சிறிய காயம் போன்றவற்றால் ஏற்படும்.

இது லேசான வலியாக இருந்தால், அது உங்களைத் தொந்தரவு செய்யாது. ஆனால் சில சமயங்களில் வலி மிகவும் கடுமையானதாக இருக்கும்.

இதனால் உங்களால் அன்றாட நடவடிக்கைகளைக் கூட சரிவர மேற்கொள்ள முடியாது. பெரும்பாலான தசை வலியை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தி விடலாம். அப்படிப்பட்ட வீட்டு வைத்தியங்கள் என்ன என்று பார்ப்போம் வாங்க.

​நீரேற்றமாக இருங்கள்

samayam tamil Tamil News Spot

உடலில் போதுமான தண்ணீர் இல்லாதபோது, உங்கள் தசைகள் இறுக்கமாக மாறும். அதனால் அடுத்த முறை தசை வலி ஏற்பட்டால் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தீர்களா என்பதை யோசித்துப் பாருங்கள்.

தண்ணீரைக் குடியுங்கள். போதுமான அளவு தண்ணீர் இல்லையென்றால் தசை இறுக்கமாகி வலி ஏற்பட்டு அதனால் காயம் ஏற்படும்.

ரத்தசோகையை விரட்ட ஆயுர்வேதம் சொல்லும் எளிய வழிகள் என்ன…

​வாழைப்பழம்

samayam tamil Tamil News Spot

தசைவலியைப் போக்க வாழைப்பழம் உதவும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆம், வாழைப்பழம் தசை வலியைப் போக்கும். பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் இந்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

இது தசைப்பிடிப்பு காரணமாக ஏற்படும் தசை வலியைத் தீர்க்க உதவும். உடலில் பொட்டாசியம் அளவு குறைந்தால் தசை பலவீனம், சோர்வு மற்றும் தசைப் பிடிப்புகள் ஏற்படலாம்.

எனவே தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது தசை வலிக்கு சிகிச்சையளிக்க உதவும்.

உயர் இரத்த அழுத்தம் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான விஷயங்கள் என்னென்ன…

​கடுகு எண்ணெய்

samayam tamil Tamil News Spot

கடுகு எண்ணெய் சருமத்தின் மேற்பரப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதனால் தசை வலியைப் போக்க முடியும். நான்கு தேக்கரண்டி கடுகு எண்ணெயை சூடாக்கி அதில் பத்து பல் நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.

பூண்டு பொன்னிறமாக மாறும் வரை சூடாக்கி, அதில் கற்பூரவல்லி இலையைப் போடவும். பின் இதனை குளிரவிட்டு வடிகட்டிக் கொள்ளுங்கள்.

வடிகட்டிய எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இதனை ஒரு நாளைக்கு பல முறை கூட செய்யலாம்.

பூண்டில் உள்ள சல்பர் மற்றும் செலினியம் இரண்டும் தசை வலியைப் போக்க உதவும்.

என்னென்ன தலைமுடி பிரச்சினை உள்ளவர்கள் எந்த எண்ணெயை பயன்படுத்துவது நல்லது…

​ரோஸ்மேரி

samayam tamil Tamil News Spot

இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தசை வலியை அகற்றவும், தசைப் பிடிப்புகளை குறைக்கவும் உதவும்.

இரண்டு சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் உடன், 2 சொட்டு பெப்பர்மின்ட் எண்ணெய், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

கலந்த எண்ணெயை தசை வலி உள்ள பகுதிகளில் தடவவும். அல்லது, உலர்ந்த ரோஸ்மேரி இலைகளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் பாதிக்கப்பட்ட பகுதியை ஊறவைத்தும் பயன்படுத்தலாம்.

protein rich food: கருப்பு கொண்டைக்கடலை சூப் சாப்பிட்டா இந்த பலனெல்லாம் கிடைக்கும்… செய்வது எப்படி? ரெசிபி உள்ளே…

​சிவப்பு மிளகாய்

samayam tamil Tamil News Spot

வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள சிவப்பு மிளகாய் அல்லது கெய்ன் மிளகு தசை வலிக்கு ஒரு அற்புதமான மருந்தாகும். இது தசை விறைப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

ஒரு தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை ஒன்றாகக் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி அதன்மேல் மெல்லிய துணி கொண்டு கட்டு போட்டு விட்டு, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் எழுந்ததும் அதனை கழுவி விடுங்கள்.

cooling foods: குளிர்காலத்தில் ஜில்லுனு இருக்கும் உணவுகளை சாப்பிட்டா என்னென்ன பிரச்சினைகள் வரும்…

இதனை நீங்கள் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

மேலே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்திய முறைகளை மேற்கொண்டும் தசைவலி நீங்கவில்லை எனில் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நாள்பட்ட தசை வலி அதிலும் குறிப்பாக 3 மாதங்களுக்கு மேல் இந்த தசை வலி நீடித்தால் அது நாள்பட்ட சோர்வு நோய்க்குறி, தைராய்டு பிரச்சனை, லூபஸ், டெர்மடோமயோசிடிஸ் மற்றும் பாலிமயோசிடிஸ் போன்ற பிரச்சனைகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.