Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • லாக்டவுனில் ஓவியம் வரையும் ஜான்வி கபூர்
  • ஜான்வியின் ஓவியங்களை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்
  • ஜான்விக்கு குவியும் வாழ்த்துக்கள்

ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி தன் அம்மா வழியில் நடிகையாகிவிட்டார். அவர் நடித்த முதல் படமான தடக்கின் ஷூட்டிங் துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி பட ரிலீஸின்போது உயிருடன் இல்லை. தடக் படப்பிடிப்பு இருந்ததால் ஜான்வி தன் அம்மாவுடன் துபாய்க்கு செல்லவில்லை.

அம்மா இறந்ததில் இருந்து அவ்வப்போது அவர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் ஜான்வி. அதை பார்க்கும் சமூக வலைதளவாசிகளோ, ஸ்ரீதேவியை வைத்து விளம்பரம் தேட வேண்டாம் என்று ஜான்வியை விளாசுகிறார்கள்.

அம்மா செல்லமான ஜான்வி லாக்டவுனில் வீட்டில் சும்மா இருக்காமல் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார். அவர் தான் வரைந்த ஓவியங்களை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, என்னை ஓவியர் என்று அழைக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜான்வி வரைந்த ஓவியங்களை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

தாராளமாக ஓவியர் என்று அழைக்கலாம். உங்களின் ஓவியங்கள் அருமை. ஸ்ரீதேவியின் மகளுக்கு இப்படி ஒரு திறமையா?. உங்களுக்கு கைவசம் வேறு ஒரு தொழில் இருக்கிறது.

அம்மா நடிகை என்பதால் நீங்களும் நடிகையாகத் தான் ஆக வேண்டும் என்றில்லை. ஓவியம் வரைவதில் கூடுதல் கவனம் செலுத்தினால் உலக அளவில் பிரபலமாகலாம். வாழ்த்துக்கள் ஜான்வி என தெரிவித்துள்ளனர்.

ஜான்வியின் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த பாலிவுட் நடிகை தியா மிர்சாவோ, தாயைப் போன்று பிள்ளை என்று கமெண்ட் போட்டுள்ளார்.

ஜான்வியுடன் சேர்ந்து ரூஹி படத்தில் நடித்த வருண் சர்மாவோ, இதில் எந்த ஓவியத்தை எனக்கு பரிசளிக்கப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

வழக்கமாக ஜான்வி ஏதாவது போஸ்ட் போட்டால் சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்வார்கள். ஆனால் இந்த போஸ்ட்டை பார்த்த அனைவரும் ஜான்வியை பாராட்டியிருக்கிறார்கள்.
காதலி நடிகையின் வீட்டிற்கு அருகே ரூ. 20 கோடிக்கு வீடு வாங்கிய வாரிசு நடிகர்





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *