Share on Social Media


அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்‘ அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் ‘ஜெய் பீம்’ படம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளதை கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட அப்டேட்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
‘ஜெய் பீம்’ படம் வரவேற்பை பெற்ற அதே வேளையில் பலவித சர்ச்சைகளையும் கிளப்பியது. படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்கங்கள் போராட்டங்கள் நடத்தினர். மேலும் படத்திற்கு விருதுகள் எதுவும் வழங்கக்கூடாது என்று ஒன்றிய, மாநில அரசுக்கு வழக்கறிஞர் பாலு கடிதம் எழுதினர். இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி ‘ஜெய் பீம்’ படம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் ‘ஜெய் பீம்’ படம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது கடந்தாண்டு இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் பிரபல தமிழ் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கிய பாலிவுட் படமான ‘ஷேர்ஷா’ உள்ளது. இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில்உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிலீஸ் முதல் சர்ச்சை வரை ”ஜெய் பீம்” ஆட்டம்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *