Share on Social Media


அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்‘ அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் பொது வெளியில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ‘ஜெய் பீம்’ படம் திரையிடப்பட்டுள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

அடடே… வேற லெவல் ரியாக்சன் கொடுக்கும் அமலா பால்: வைரலாகும் வீடியோ!
இதற்கு முன்பு திரையில் சொல்லப்படாத இருளர், பழக்குடியினர் வாழ்வியலை மிக நேர்த்தியாக ‘ஜெய் பீம்’ படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். படத்தை பார்த்துவிட்டு சூர்யாவை நெகிழ்ந்து பாராட்டிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அம்மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைபடுத்தியும் வருகிறது.

தமிழ் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் குறிப்பாக கேரளா, மகாராஷ்டிராவில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் பொதுவெளியில் ‘ஜெய் பீம்’ படம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திரையிட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“விநோதய சித்தம்” நாடகம் – உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டு!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *