Share on Social Media


இஸ்ரேலில் (Isreal) தற்போது அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.அங்கு இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு முறை தேர்தல்கள் நடைபெற்ற போதிலும் தெளிவான பெரும்பான்மை முடிவுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், 12 ஆண்டுகளாக தொடர்ந்து பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) பதவியிலிருந்து நீக்க, தற்போது  எதிர்கட்சிகள் கை கோர்த்துள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் (Israel – Hamas) இடையிலான மோதல்கள் மே மாத தொடக்கத்தில் தொடர்ந்து 11 நாட்களுக்கு கடும் சண்டை தொடர்ந்தது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், கடந்த மே 21ம் தேதி, இஸ்ரேல்- ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், தற்போது அரசியல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இஸ்ரேலில், நெதென்யாகுவை (Benjamin Netanyahu) பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன், வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட எதிர் கட்சிகள், கை கோர்த்துள்ளன. 

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தொழில்நுட்பத் துறை தொழில் அதிபரான,  நஃப்டாலி பென்னட் பிரதமராக இருப்பார் என கூறப்படும் நிலையில், சில வலது சாரி குழுக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளன. ஏனென்றால், தேர்தலுக்கு முன்னர், பென்னட்  அளித்த வாக்குறுதியில், மையவாத லாப்பிட்  கட்சி அல்லது எந்த அரபு கட்சியிலும் கூட்டணி வைக்கப்படாது என்று உறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது அதற்கு மாறாக  தற்போது, வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலின் அரசாங்கத்தில்  இடது சாரி கட்சிகள், தேசியாவாத கட்சிகள், அரேபிய இஸ்லாமிய கட்சி ஆகியவை கை கோர்த்துள்ளன. 

ALSO READ | Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு

இந்நிலையில், இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சனிக்கிழமையன்று (ஜூன் 5) ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்தார்.  பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu)  பதவியிலிருந்து நீக்குவதால், மிகப்பெரிய அளவில் வன்முறை வெடிக்கலாம் என எச்சரித்துள்ளார்.

பென்னட், கூட்டணி தொடர அறிவிப்பு வெளியிட்டதிலிருந்து, அவரது கட்சி உறுப்பினர்களின் வீடுகளுக்கு அருகே, வலது சாரி கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் வன்முறை சம்பவத்தில், பாலஸ்தீனர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த முயன்ற, அப்போதைய பிரதமர் யிட்சாக் ராபின், யூத தீவிர தேசியவாதி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நெதன்யாகு மீது பல முறை குற்றசாட்டு வைக்கப்பட்ட போது, இந்த குற்றச்சாட்டை நெத்தன்யாகு கடுமையாக நிராகரித்ததோடு, ராபின் கொலைக்கு பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று (ஜூன் 5) இஸ்ரேலின்  N12 தொலைக்காட்சியின் மீட் தி பிரஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் 46% இஸ்ரேலியர்கள் பென்னட்-லாப்பிட் அரசாங்கத்தை ஆதரிப்பது தெரிய வந்துள்ளது. 38% பேர் மற்றொரு தேர்தலை நடத்தலாம் என்றனர் – சுமார் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது  தேர்தலாக அது இருக்கும்- 15% கருத்து ஏதும் கூறவில்லை.

இந்த வாரம் ஒரு யூத வலதுசாரி ஜெருசலேமின் பழைய நகரத்தின் டமாஸ்கஸ் வாயில் வழியாக aனிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் பதட்டங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எனினும், லாபிட் மற்றும் பென்னட் தங்கள் “ஒற்றுமை அரசாங்கம்” இஸ்ரேலியர்களிடையே நிலவும் ஆழமான அரசியல் பிளவுகளை தீர்க்கும் என்றும்,  வெறுப்பை முடிவுக்குக் கொண்டு வரும் என்றும் நம்புகின்றனர்.

ALSO READ | Israel: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நாற்காலியை அசைத்து பார்க்கும் பென்னட்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *