Share on Social Media

IPL 2021: சில விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள், சிலர் மீது பாசம் காட்டுகிறார்கள். சிலரையோ தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதத் தொடங்குகிறார்கள். அப்படி ரசிகர்களின் குடும்பத்தில் ஒருவராகிவிட்டவர்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி.

தற்போது எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜீவா ஆகியோருடன் தனக்கு கிடைத்துள்ள நேரத்தை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் செலவழித்து வருகிறார். இமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சிம்லாவுக்கு சென்றுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் 2021 இன் (IPL 2021) 14 வது பதிப்பில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் CSK அட்டகாசமாக ஆடி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி தற்போது IPL-லில் மட்டும் விளையாடி வருவதால், அவர் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் IPL 2021-ன் மிச்சமிருக்கும் போட்டிகள் மீண்டும் நடக்கவுள்ளன. இதில் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்தியாவில் அதிகரித்த COVID-19 தொற்று காரணமாக, ஐபிஎல் 2021 மே மாதத்தில் பாதியில் நிறுத்தப்பட்டது. 

தோனி விளையாடுவதை இன்னும் சில மாதங்களில் காண முடியும் என்ற உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள் தற்போது மற்றொரு விஷயத்தால் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆம்!! தல தோனியின் சமீபத்திய தோற்றம்தான் அதற்கு காரணம். 

ALSO READ: MS Dhoni: நண்பரின் உயிர் காக்க ஹெலிகாப்டரை அனுப்பினார் தோனி, உயிர் பிழைத்தாரா நண்பர்?

சிம்லாவில் தோனி (MS Dhoni) கழித்த பசுமையான நேரங்களின் சில படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. இவற்றில் முன்னாள் இந்திய கேப்டன் சிம்லாவின் பாரம்பரிய டோப்பி (தொப்பி) அணிந்திருப்பதைக் காண முடிகிறது. இந்த பாரம்பரியமான மற்றும் ஸ்டைலான தலைக்கவசம் ‘குலு டோபி’ என்று அழைக்கப்படுகிறது.

தோனியின் தற்போதைய சிம்லா பயணத்தின் சில புதிய படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

தோனி ஒரு புதிய வகை மீசையுடன் காணப்படுகிறார். மீசையின் இப்படிப்பட்ட ஸ்டைலுடன் இதற்கும் முன் நாம் தோனியை பார்த்ததில்லை. பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த படங்கள் வைரலாகிவிட்டன. தோனியின் ஸ்டைலை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகிறார்கள். 

தோனியின் சமீபத்திய ஸ்டைலில், அவர் ஒரு அசத்தலான மீசையுடனும் ஒரு அமர்க்களமான தாடியுடன் அட்டகாசமாக இருக்கிறார். சமீப காலங்களில் சி.எஸ்.கே கேப்டன் தோனி ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார். அவர் சமீபத்தில் தனது மகள் ஜிவாவுக்கு ஒரு புதிய குதிரையை வாங்கியுள்ளார். குதிரைகள் மற்றும் நாய்களை வளர்ப்பதில் தோனி அதிக நாட்டம் காட்டுவது அனைவரும் அறிந்ததே. 

ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஏற்கனவே அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு IPL பதிப்பு CSK-வுக்கு மிக மோசமான பதிப்பாக இருந்தது. அதை மாற்றும் வகையில், IPL 2021-யின் முதல் பாகம் இருந்தது. UAE-யில் நடக்கும் இரண்டாம் பாகத்திலும் CSK அதே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

ALSO READ: MS Dhoni-யின் மறைந்த முன்னாள் காதலியின் போட்டோ வைரல்: அவர் இறந்தது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *