Share on Social Media

பௌலிங் லைன் அப்!

”11 பேருமே பேட்ஸ்மேனா இருந்தா என்னப்பா பண்றது!” என ப்ளேயிங் லெவன் முழுவதையும் பேட்டிங் ஆடக்கூடிய வீரர்களாக வைத்திருக்கிறது சிஎஸ்கே. கடந்த சீசனில் வாங்கிய அடி அப்படி யோசிக்க வைத்திருக்கலாம். ஆனால், இதனால் பேட்டிங் சரியாகி பௌலிங்கில் பெரிய ஓட்டை உண்டாகிவிட்டதுபோல் தெரிகிறது. தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், சாம் கரண், பிராவோ என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், யாராலும் 140+ கிமீ க்கு மேல் வீச முடியாது. இதுவே மிகப்பெரிய பின்னடைவு.

அதேபோலத்தான், ஸ்பின்னிலும் ஜடேஜா, மொயின் அலி என இரண்டு ஆல்ரவுண்டர்கள்தான் இருக்கிறார்கள். பிரதான ஸ்பின்னரான இம்ரான் தாஹிர் பென்ச்சிலேயே இருக்கிறார். கடந்த சீசனிலும் இம்ரான் தாஹிரை ப்ளேயிங் லெவனில் கொண்டு வர முடியாமல் தடுமாறியிருந்தார் தோனி. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் சிஎஸ்கேவுக்கு உடனடி தீர்வு வேண்டும். 140+ வேகத்தில் வீச லுங்கி இங்கிடியும் பிரதான ஸ்பின்னராக இம்ரான் தாஹிரும் அணிக்குள் வந்தாக வேண்டும்.

டுப்ளெஸ்சி, மொயின் அலி, பிராவோ, சாம் கரண் இந்த நால்வரில் யாரை பென்ச்சில் வைத்துவிட்டு இங்கிடி, இம்ரான் தாஹிர் இருவரையும் தோனி அணிக்குள் கொண்டு வரப்போகிறார் என்பது சர்ப்ரைஸாக இருக்கும். கெயிலுக்காக இந்த போட்டியில் ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலி கட்டாயம் இருக்க வேண்டும் என தோனி நினைக்கலாம். அப்படியிருக்கும்பட்சத்தில் இம்ரான் தாஹிருக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. அதேப்போல் லுங்கி எங்கிடி க்வாரன்டைன் விதிகளால் இன்றும் விளையாடமுடியாதே சூழலே நிலவுகிறது.

சாம் கரண்

சாம் கரண்

பவர்ப்ளே முக்கியம்!

பேட்டிங்கிலும் சரி, பௌலிங்கிலும் சரி சென்னை அணியின் பவர்ப்ளே பர்ஃபாமென்ஸ் என்பது மிகவும் மோசமாகவே இருக்கிறது. கடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக பவர்ப்ளேவில் சென்னை அணி 33 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 36 பந்துகளில் 22 பந்துகளை டாட் ஆக்கியிருந்தது சென்னை அணி. இது கவலைக்குரிய விஷயம். கடந்த சீசனிலிருந்தே பவர்ப்ளேவில் அதிகம் டாட் ஆடும் அணியாக சென்னை அணியே இருக்கிறது. மேலும், கடந்த சீசனிலிருந்து டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குப் பிறகு பவர்ப்ளேவில் அதிக விக்கெட்டுகளை இழந்தது சென்னைதான்.

பவர்ப்ளேவில் மட்டும் 23 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது சென்னை அணி. மேலும், கடந்த போட்டியில் பௌலிங்கிலும், பவர்ப்ளேவில் 65 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டைக்கூட எடுக்கவில்லை. பேட்டிங்கில் பவர்ப்ளேவில் சொதப்புவதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தம் கூடுகிறது.

வெற்றி தோல்வி என போட்டியின் முடிவை கூட பவர்ப்ளே சொதப்பல்கள் மாற்றிவிடுகிறது. டெல்லிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ”ஒரு 15-20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என தோனி கூறியிருந்தார். அந்த கூடுதல் 15-20 ரன்கள் பவர்ப்ளேவில் வந்தே ஆக வேண்டும். பௌலிங்கிலும் குறிப்பாக இன்றைய போட்டியில் பவர்ப்ளேவில் விக்கெட் எடுத்தே ஆக வேண்டும். கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கெயில் எல்லாம் நின்றுவிட்டால் பிரித்து மேய்ந்துவிடுவார்கள்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *