Share on Social Media

கடந்தாண்டு துபாயில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ரெய்னா திடீரென அணியில் இருந்து விலகினார். ரெய்னா இல்லாததால் ப்ளேயிங் லெவனுக்குள் வெளிநாட்டு வீரரை விளையாட வைக்க வேண்டிய நிலை சிஎஸ்கே-வுக்கு உருவானது. அதனால், பௌலிங்கில் அதற்கு முந்தைய சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இம்ரான் தாஹிரை வெளியே உட்கார வைத்தது. அதன் முடிவாக, பல போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது சிஎஸ்கே.

அணியில் ரெய்னா தொடர்வார் என்ற தகவல்கள் மகிழ்ச்சியளித்தாலும், ரெய்னாவின் ஆட்டத்திறன் எந்த நிலையில் உள்ளது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. ஏனெனில், 2019 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு, ரெய்னா எந்தவொரு முக்கியப் போட்டியிலும் பங்கேற்கவே இல்லை. சிஎஸ்கேவுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில், மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி பெற்ற, அந்த ஃபைனல் மற்றும் இரண்டு ப்ளே ஆஃப் போட்டியிலும் சேர்த்து, ரெய்னா சேர்த்திருந்த ரன்கள் 24 மட்டுமே. இதைத் தவிர்த்து, தனது ஃபார்ம் குறித்து தனக்கே நிரூபித்துக் கொள்வதற்காக, சமீபத்தில் நடந்துமுடிந்த, சையத் அலி முஷ்தாக் தொடரில், உத்தரப்பிரதேசத்தின் சார்பில், ஐந்து போட்டிகளில் பங்கேற்ற ரெய்னா, திரிபுராவுக்கு எதிரான ஒரு போட்டியில், அரை சதம் அடித்தார் அவ்வளவே!

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

ஆனால், இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின், சிஎஸ்கே ஜெர்ஸியில், டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில், ரெய்னாவை முதல்முதலாகப் பார்க்க, ரசிகர்கள் காத்திருந்தனர்‌. முதலில் பேட்டிங் செய்ய சிஎஸ்கே இறங்க, கெயிக்வாட்டும் டுப்ளெஸ்ஸியும் முதலில் களமிறங்கினர்‌. கெயிக்வாட்டின் விக்கெட் விழ, ரெய்னாவின் வரவையே அனைவரும் எதிர்பார்க்க, மொயின்அலி வந்தார். எனினும், ரெய்னா வர ரசிகர்கள் வெகுநேரம் காத்திருக்கவில்லை‌. டுப்ளெஸ்ஸி விக்கெட்டும் உடனே விழ, ரெய்னா ரீ என்ட்ரி. வோக்ஸின் ஓவரில் சந்தித்த முதல் நான்கு பந்துகளிலும் ரெய்னா ரன் சேர்க்கத்தவற, பழைய ரெய்னாவை கண்கள் தேட, சந்தித்த ஐந்தாவது பந்தை, பவுண்டரிக்கு அனுப்பி, வெல்கம் பவுண்டரி மூலமாக, ‘வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என அழுத்தம் திருத்தமாக நிரூபித்தார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *