Share on Social Media

ஏற்கெனவே இருந்த பழைய இணையதளத்தில், சில பயன்பாட்டுக் குறைபாடுகள் இருந்தன. வருமான வரி தாக்கல் செய்வோருக்கு சில வசதிகள் இல்லாமல் கூட இருந்தது. அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய இணையதளம் இருக்கும் என நம்புகிறேன். வரித்தாக்கல் செய்துவிட்டு, அது பெண்டிங்கில் வைக்கப்பட்டால், அதற்கான காரணம் என்ன என்பதை பழைய இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் இந்த புதிய இணையதளத்தில் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும் என வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆடிட்டர் சத்யநாராயணன்

ஆடிட்டர் சத்யநாராயணன்

படிவம் 1 மற்றும் 2-க்கு சாஃப்ட்வேர் இலவசமாக தயாரித்திருப்பது வரவேற்கத்தகக் விஷயம். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை மேலும் எளிமையாக்குவதற்காக, இந்த புதிய இணையதளம் கொண்டுவரப்பட்டிருப்பதாக, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த இணையதளத்தை பயன்படுத்த, பயன்படுத்தத்தான்அதிலிருக்கும் விஷயங்கள் புரியவரும். இந்த இணையதளத்திலும் குறைபாடுகள் இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு சரி செய்ய இன்னும் ஒரிரு மாதங்கள் ஆகலாம்” என்றார்.

பலரும் இன்று புதிய இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்னும் தளம் செயல்படாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *