Share on Social Media


சென்னை: கொரோனா பெருந்தொற்று நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலதரப்பட்ட மக்களும் இந்த தொற்றின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொற்றின் பாதிப்பை அதிகமாக உணர்ந்தாவர்களில் மாணவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

பள்ளிக்கு செல்லாமலேயே கல்வி ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. முன்னர் அறிமுகமே இல்லாத ஆன்லைன் கல்வி முறையில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். தேர்வு எழுதும் முறைகளிலும் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுத் தேர்வுகள் (Public Exams) கூட ரத்து செய்யப்படும் நிலையையும் நாம் பார்த்து விட்டோம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்  தேர்வுகள் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக்கு சற்று முன்னரே12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்த நிலையில், இந்த ஆண்டு அதையும் நடத்த முடியாமல், தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தற்போது நாடு முழுவதிலும் தொற்றின் (Coronavirus) எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகத்திலும் படிப்படியாக தொற்று எண்ணிக்கை வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியே அனைவர் மனதிலும் மேலோங்கி உள்ளது.

பள்ளிகள் திறப்பது குறித்து துறை சார்ந்த நிபுணர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரிடம் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

ALSO READ: பக்ரீத் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆகஸ்ட் மாதம் பள்ளிகளை திறக்கலாம் என கூறப்பட்ட நிலையில், மூன்றாவது அலைக்கான அச்சமும் உள்ளது. இந்த நிலையில், இது குறித்த முடிவு ஒரு சிக்கலான விஷயமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இதற்கிடையில், பள்ளிக் கல்வித்துறை (School Education Department) சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தற்போது ஆன்லைன் முறையிலும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த பாடங்களில் மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி மாத இறுதியில் 50 மதிப்பெண்களுக்கு அலகுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் இந்த அலகுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: Tamil Nadu: ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர யாரும் இருந்தால் கிரிமினல் குற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *