Share on Social Mediaஆரோக்கியமான வாழ்வுக்கு நீர், உணவு போன்று உடற்பயிற்சியும் அவசியம். நோய் வந்த பிறகு ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்துவதை காட்டிலும் வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப உணவு முறையிலும், உடல் உழைப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

​நடைபயிற்சி ஏன் அவசியம்

இன்றைய நிலையில் சரியான உணவு, சரியான தூக்கம் போன்று சரியான உடல் உழைப்பும் அவசியம் என்கிறார் சித்த மருத்துவ நிபுணர் மரு. வி. விக்ரம் குமார்.

நடைபயிற்சி செய்தால் மட்டுமே வாழ முடியும் என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் தினசரி நடைப்பயிற்சி அவசியம்.

அஜீரணக்கோளாறா? தினமும் உங்க சமையல்ல கொஞ்சம் நல்லெண்ணெய் சேருங்க, வேறு நன்மைகள் என்ன?

நமது முன்னோர்கள் காலத்தில் உடற்பயிற்சி என்பதற்கு பெரிதும் முக்கியத்துவம் இல்லை. எனினும் நடைபயிற்சியும் வீட்டு வேலையும் அவர்கள் வேலையும் இயற்கையாகவே உடற்பயிற்சியை காட்டிலும் அதிகமான பயிற்சியாக இருந்தது. அதனால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தனிப்பட்ட உடற்பயிற்சி தேவையில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நடைப்பயிற்சி என்பது அத்தியாவசியமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

​ஏன் நடைப்பயிற்சி அவசியம்

samayam tamil Tamil News Spot

உடலுக்கு தேவையான அசைவுகளை கொடுக்க வேண்டும். இல்லையெனில் உடல் உபாதைகள் அதிகமாகவே எதிர்கொள்ள நேரிடும். உடல் உழைப்பு இல்லாத நிலையில் அது ரத்தக்குழாய்களில் கொழுப்பை படியவைக்கும், வயிற்றுப்பகுதியில் தேக்கி தொப்பையை உண்டாக்கும். சூரிய ஒளி படாத நிலையில் வைட்டமின் டி பற்றாக்குறை உண்டாகும். மூட்டுபகுதிகள் நெகிழ்வு தன்மை மாறி கடினமாக மாறும்.

உடலின் முக்கிய உறுப்புகளின் திறன் குறைபாடு உண்டாகலாம். மன அழுத்தத்தால் உறக்கமின்மை, கடுமையான உடற்சோர்வு இயற்கையாக நடக்க வேண்டிய கழிவு நீக்கத்தில் தடை, செரிமானம் போன்ற பல பிரச்சனைகள உண்டாக்கலாம். இன்று பலரும் இதில் ஒன்றையாவது எதிர்கொள்ள காரணமே உடல் உழைப்பின்மை தான். குறைந்தது நடைப்பயிற்சி கூட இல்லாத நிலை.

​இளவயதில் நோய் தாக்கம்

samayam tamil Tamil News Spot

உடல் உழைப்பின்மை என்பது சிறுவயதில் இருப்பவர்களையும் விட்டு வைக்கவில்லை. அதனால் இளவயதிலேயே முறையான உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாமல் இளம் பருவத்திலேயே அதீத உடற்பருமன், மாரடைப்பு, நீரிழிவு நோய், திருமணத்துக்கு பிறகு குழந்தையின்மை பிரச்சனை, மூட்டு வலி போன்றவற்றை எதிர்கொள்வது அதிகரித்துவருகிறது.

உடல் உழைப்பு குறைபாட்டை எதிர்கொள்ளும் தலைமுறையினர் கண்டிப்பாக மேற்சொன்ன பிரச்சனைகளில் ஒன்றையேனும் எதிர்கொள்வார்கள் என்பதில் மறுப்பில்லை. அதனால் இதற்கான விழிப்புணர்வை கண்டிப்பாக இன்றைய தலைமுறையினருக்கு கொடுக்க வேண்டும்.

​பாஸிட்டிவ் எண்ணங்கள்

samayam tamil Tamil News Spot

நடைப்பயிற்சி செய்வதன் மூலம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். அதிகாலை வேளையில் நடைப்பயிற்சி செய்வதால் தூய்மையான காற்று கிடைக்க செய்யும். இதனால் அன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளை சரியான முறையில் செய்வீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றியடையும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆயுர்வேதம் சொல்லும் வைத்தியம்! பலன் கிடைக்க எதை எப்படி எடுக்கணும்?

மனதுக்குள் எவ்வித குழப்பமும் இல்லாமல் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தினசரி நடைப்பயிற்சியை பழக தொடங்கினால் எத்தகைய சிக்கலையும் சமாளிக்கும் தனித்திறன் உங்களுக்கு கிடைத்து விடும். இதை ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன.

​நடைப்பயிற்சியால் பறக்கும் நோய்கள்

samayam tamil Tamil News Spot

நடைப்பயிற்சி செய்வதால் பலவிதமான நோய்களும் பறந்துவிடுகிறது. உடல் எடையை குறைக்க பக்கவிளைவில்லாத முறையாக நடைப்பயிற்சியை மட்டுமே பரிந்துரைக்கிறார்கள். நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க நடைப்பயிற்சி அவசியம் என்கின்றன. இரத்த அழுத்தம் சீராக வைத்திருக்க நடைப்பயிற்சி பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்கின்றன ஆய்வுகள்.

நடைப்பயிற்சியை விடாமல் செய்வதன் மூலம் இரவில் ஆழ்ந்த தூக்கம் பெறலாம்.நடைபயிற்சியால் எலும்புகள், தசைகள் வலிமை அடைகின்றன. சுவாசப்பாதை புத்துணர்வு பெறுகின்றன. செரிமான மண்டலத்தில் கழிவுகள் தேங்காமல் தடுக்கப்படுகிறது. தினசரி இல்லையென்றாலும் வாரத்தில் ஐந்து நாட்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனை அளிக்கும்.

​நடைப்பயிற்சியின் போது இதை செய்யாதீங்க

samayam tamil Tamil News Spot

நடைப்பயிற்சி என்பது உடலை போன்று மனதையும் வலிமையாக்கும் பயிற்சி. நடைப்பயிற்சி அலுப்பு தெரியாமல் இருக்க பாட்டு கேட்டபடி நடப்பது, பேசிக்கொண்டு நடப்பது கண்டிப்பாக கூடாது. செல்ஃபோன் சகிதமாக நடைப்பயிற்சி கூடவே கூடாது. இவையெல்லாம் நடைப்பயிற்சியில் குறுக்கிடக்கூடும்.

இடையூறு இல்லாத நடைப்பயிற்சி உத்வேகத்தை அளிக்க கூடும். அதோடு உங்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கும். நடக்கும் போதெல்லாம் உங்களை புதியதாக உணர்வீர்கள். மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக நாளை கடக்க இடையூறு இல்லாத நடைப்பயிற்சி அவசியம். வயதானவர்களும், பலவீனமானவர்களும் தொலைதூர நடைப்பயிற்சியின் போது தொடர்புக்காக செல்ஃபோன் பயன்படுத்தலாம்.

​நடைப்பயிற்சியின் போது

samayam tamil Tamil News Spot

நடைப்பயிற்சியின் போது உடல் உள்ளுறுப்புகளின் நலனை காட்டுகிறது. நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இயல்பை விட அதிகமாக மூச்சு வாங்குவது, மார்பு பகுதியில் படப்படப்பாக இருப்பது, வேறு அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இந்த அறிகுறிகளை நமக்கு தெரியப்படுத்தவாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

வெயிட் லாஸ் : வேகமா வெயிட் குறையுதா, அது உடம்புல இருக்கிற நீரா, இல்ல கொழுப்பா எப்படி கண்டுபிடிப்பது!

நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே இனி நோயில்லா வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்று சொல்வது கூட மிகையில்லாமல் இருக்கும். இனி கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்வது அவசியம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *