Share on Social Mediaமுடி கருப்பு நிறத்தில் இருந்து பழுப்பு, சிவப்பு, பொன்னிறம் என எப்படி இருந்தாலும் காலப்போக்கில் சாம்பல், வெள்ளை அல்லது வெள்ளி நிறமாக மாறுவது இயல்பானது. ஆனால் இது முன்கூட்டியே நரைக்க தொடங்குவது ஏற்க கூடியது அல்ல. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டால் தவிர்ப்பதற்கு எளிதாக இருக்கும்.

​இளவயதில் நரைமுடி

இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ட்ரைக்காலஜி செப்டம்பர் 2019 ஆராய்ச்சியின்படி முதன்மையான காரணங்களில் ஒன்றாக மரபியல் பற்றி கூறூகிறது. மரபணுவை தாண்டி புகைபிடித்தல், உணவு குறைபாடுகள் மற்றும் ஆட்டோ இம்யூன் நிலைமைகள் உள்ளிட்ட பிற காரணிகளும் முன்கூட்டிய நரைக்கு பங்களிக்கலாம்.

முடி நிறத்தை இழக்க மெலனின் முக்கிய பங்கு வகிக்கிறது. சாயல், கருப்பு, சிவப்பு, பொன்னிறம், பழுப்பு போன்ற எந்த கலரையும் உருவாக்கும் தன்மைக்கு இதுதான் பொறுப்பாகிறது. மயிர்க்கால்களில் அல்லது முடி வேரை சுற்றியுள்ள செல்கள் மற்றும் திசுக்களின் உறையில் காணப்படும் இந்த நிறமி, முடி உருவாக்கும் செயல்பாட்டில் மூலப்பொருள் ஆகும்.

காலப்போக்கில் முடி வளர்ச்சியின் போது குறைவான மெலனின் கிடைக்கிறது மேலும் இந்த நிறமி இழப்பு முடியை சாம்பல், வெள்ளி நிறம் இறுதியில் வெள்ளை நிறமாக மாற்றுகிறது.

Strawberry legs : சொரசொரப்பான தொடையும், காலும் சரி செய்யும் அருமையான வீட்டு வைத்தியம்!

நரை அல்லது வெள்ளி முடி என்பது குறைந்த அளவிலான நிறமியால் உண்டாகுகிறது. வெள்ளை முடி என்பது முழுமையான நிறமி இழப்பு என்று அர்த்தம்.

பிக்மெண்ட் இண்டர்நேஷனல் ஜூன் 2017 மதிப்பாய்வின்படி காகசியன் மக்கள் 20 வயதுக்கு முன்பும் ஆசிய மக்களில் 25 வயதுக்கு முன்பும், ஆப்பிரிக்க மக்களில் 30 வயதுக்கு முன்பும் ஏற்படும் முடி நிறமி இழப்பு என முன்கூட்டிய நரைத்தல் வரையறுக்கப்படுகிறது.

ஏறத்தாழ 50% சதவீத மக்கள் 50 வயதுக்குள் நரை முடி கொண்டிருப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. இளவயதில் நரைமுடிக்கு என்ன காரணம்.

​மரபியல் காரணங்கள்

samayam tamil Tamil News Spot

மரபியல் அடிப்படை வழிமுறைகள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றாலும் முன்கூட்டிய வெள்ளை முடி நரைக்க பொதுவான காரணங்களில் மரபியல் ஒன்று.

மரபணுக்கள் மெலனின் உற்பத்தி செய்யும் உயிரணுக்களில் குறைபாடுகளை ஏற்படுத்தலாம். அல்லது சிறு வயதிலேயே இந்த மெலனின் உற்பத்தி நிறுத்தலாம்.

இளம் வயதினரிடம் கூட இந்த மரபு வேலை செய்யலாம். 15 வயதிலேயே வெள்ளை முடிக்கு காரணம் இதுவாக இருக்கலாம். மரபியல் வழியாக முடி நிறம் மாறும் போது, மாற்றத்தை அதிகம் செய்ய முடியாது.தற்காலிகமாக முடி நிறத்தை மாற்றம் செய்ய முடியும். நரை முடியின் தோற்றத்தை விரும்பாதவர்களுக்கு உதவும் வழிகள் சில உண்டு.

​ஆட்டோ இம்யூன் நிலைமைகள்

samayam tamil Tamil News Spot

உடலில் அசாதாரண நோய் எதிர்ப்பு சக்தியால் உண்டாக கூடியவை. இவை முடியை வெண்மையாக்கலாம். ஜர்னல் ஆஃப் பிக்மெண்டரி டிஸ் ஆர்டர் ஆராய்ச்சியின் படி முடி உதிர்தலை உண்டாக்கும் அலோபீசியா அரேட்டாவால் உச்சந்தலை பாதிக்கப்பட்ட பிறகு மீண்டும் வளரும் முடியானது நிறமாற்றம் அல்லது வெண்மையாக இருக்கலாம் என்று வழக்கு அறிக்கைகள் வெளிப்படுத்துகிறது.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் ராயல் சொசைட்டியின் ஜர்னல் ஆஃப் தி ராயல் சொசைட்டியின் ஆய்வின்படி, அலொபீசியா டோட்டலிஸ், உச்சந்தலையில் முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். அலொபீசியா அரேட்டாவின் ஒரு வடிவம் சில சமயங்களில் முடி நிறமியை பாதிக்கலாம்.

விட்டிலிகோ என்பது மற்றொரு ஆட்டோ இம்யூன் கோளாறு. இது நிறமி உருவாக்கும் செல்களை அழிக்கிறது. இது தோலை பாதிப்பது போன்று முடியின் வெள்ளை திட்டுகளுக்கும் வழிவகுக்கும்.

​தைராய்டு கோளாறு

samayam tamil Tamil News Spot

இது பொதுவானது அல்ல என்றாலும் முன்கூட்டிய இளநரைக்கு காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

இந்தியன் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜி வெனராலஜி மற்றும் லெப்ராலஜியின் மதிப்பாய்வு ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தைராய்டு கோளாறுகள் ஆரம்ப கால வயதான நோய்க்குறிகள் அல்லது மருந்துகளின் பக்கவிளைவுகள் முடி நிறமி இழப்பை ஏற்படுத்தும்.

தைராய்டு கோளாறு சில சமயங்களில் முடி உதிர்தலுடன் தொடர்புடையது. எண்டோகிரைனாலஜி மற்றும் மெட்டபாலிசம் இதழில் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில் இது முன்கூட்டிய நரைத்தலுடன் தொடர்பு கொண்டது என்றாலும் இது குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை.

​வைட்டமின் குறைபாடுகள்

samayam tamil Tamil News Spot

முடி நரைத்தலுக்கு வைட்டமின் குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு தெரிவிக்கின்றன.

ஜர்னல் ஆஃப் ட்ரைக்காலஜி 2013 ஆம் ஆண்டு நடத்திய அய்வில் ஆரம்ப கால இளநரை ஃபெரிடின் , கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை குறைவாக கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. முன்கூட்டிய நரை மற்றும் குறைந்த தாமிரம் துத்தநாகம் மற்றும் இரும்பு குறைபாடுடன் தொடர்பு கொண்டது.

ஜர்னல் ஆஃப் ட்ரைக்காலஜியில் ஜனவரி 2017 ஆண்டு வெளியிட்ட ஆய்வின் படி வைட்டமின் பி 12 குறைபாடுகள் பெரும்பாலும் ஃபோலிக் அமிலம் மற்றும் பயோட்டின் குறைபாடுகளுடன் ஒத்துப்போகின்றன என்று ஆராய்ச்சிகள் சுட்டிகாட்டுகின்றன.

​புகைப்பிடித்தல்

samayam tamil Tamil News Spot

மிகச்சிறுவயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை சிறுவர்கள் சிலர் கொண்டிருக்கிறார்கள். இது முன்கூட்டிய இளநரையுடன் தொடர்பு கொண்டுள்ளது. குறிப்பாக சாம்பல் நிறத்தை அளிக்கும். ஏப்ரல் 2013 ஆம் ஆண்டு இந்தியன் டெர்மட்டாலஜி ஆன்லைன் ஜர்னலில் ஒரு ஆய்வின் படி புகைப்பிடிப்பதற்கும் 30 வயதுக்கு முன் நரை முடி தோன்றுவதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளது.

winter foods: குளிர்கால சருமத்தை பாதுகாக்கும் ஐந்து வித காய்கறிகள்! ஆண்களும் சேர்க்கலாம்!

மேற்கண்டவற்றில் மரபணு தவீர மற்ற காரணங்களை சரி செய்வதன் மூலம் வெள்ளை முடி தடுக்க செய்யலாம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *