Share on Social Media

இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 16) உலகக் கோப்பை டி20 போட்டிக்கான பிரிவுகள் குறித்து தகவலை வெளியிட்டுள்ளது. இதில், “சூப்பர் 12” சுற்றில் இரண்டு பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் “பி” குரூப்பில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது மற்றும் இதே பிரிவில், பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

ஒரே பிரிவில் இந்திய (India)அணியும், பாகிஸ்தான் (Pakistan) அணியும் இடம் பெற்றிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பரம எதிரிகளான இரண்டு அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

2021 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி நிலவரப்படி அணி தரவரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏற்கனவே எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு இடங்களுக்கு தகுதி சுற்று நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்றில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா,  ஓமன் மற்றும் பப்புவா நியூகினி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. தகுதி சுற்றுப்போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை டி20 போட்டியில் விளையாட தகுதி பெரும்.

தகுதிச்சுற்று 1:

குழு ஏ: இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா

குழு பி: பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஓமான்

சூப்பர் 12 அணிகள்:

குழு 1: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஏ 1 மற்றும் பி 2.

குழு 2: இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஏ 2 மற்றும் பி 1

ALSO READ | ICC on T20 World Cup 2021: அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை UAE-Omanல் நடைபெறும்

ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் உலகக் கோப்பை டி20 போட்டியில் பங்கேற்கும். குறிப்பாக டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய அனைத்து ஆட்டங்களும் விறுவிறுப்பாக இருந்தது. அதில் முக்கியமானது 2007 டி 20 உலகக் கோப்பை இறுதி போட்டியின் கடைசி ஓவரை யாராலும் மறுக்கமுடியாது. 2007 டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இறுதியாக எம்.எஸ். தோனியின் தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றது.

ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெறுகின்றன.இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14 வரை போட்டிகள் நடைபெறும். ஏற்கனவே முடிவு செய்தது போல இந்த போட்டிகளை பி.சி.சி.ஐ (BCCI) நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Breaking News: T20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் இருந்து UAEக்கு மாறியது – BCCI

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *