Share on Social Media


​ஆயில் மசாஜ் செய்தால் மார்பக அளவு அதிகரிக்குமா

எண்டோகிரைன் சொசைட்டி 2018 ஆம் ஆண்டு ஆய்வில் பொதுவான அத்தியாவசிய எண்ணெய்களில் காணப்படும் சில கலவை பாலியல் ஹார்மோன்களை பாதிக்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. அதே நேரம் லாவெண்டர் மற்றும் டீ ட்ரீ ஆயில் போன்றவை ஆண்களில் மார்பக திசுக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது .

இயற்கையான மார்பக வளர்ச்சிக்கு எண்ணெய் பயன்படுத்துபவர்கள் உங்களுக்கு கீழ்க்கண்ட இந்த எண்ணெய்களை பரிந்துரைக்கலாம்.

retinopathy: சுகர் கரெக்டா இருந்தாலும் கண் கோளாறு வரும், எப்படி தவிர்ப்பது மருத்துவர் சொல்வது என்ன?

பாதாம் எண்ணெய், கிராம்பு எண்ணெய், தேங்காயெண்ணெய், ஈமு எண்ணெய், வெந்தய எண்ணெய், ஆளிவிதை எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், ஆலிவ் எண்ணெய், ப்ரிம்ரோஸ் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், டீ ட்ரீ, போன்றவை மார்பகங்கள் உறுதியானதாகவும் பெரியதாகவு மாற்றுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த எண்ணெய் மூலம் தோல் மென்மையாக்கும் இந்த கூற்றுக்கள் எதுவும் அறிவியல் சான்றுகளால் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

​மார்பகங்களில் எண்ணெய் எப்படி பயன்படுத்துவது

samayam tamil Tamil News Spot

மார்பக அளவை அதிகரிக்க நீங்கள் எண்ணெய் பயன்படுத்தும் போது எண்ணெய் எப்படி இருக்க வேண்டும்.

அறைவெப்பநிலை அல்லது சூடான அளவில் பொருத்தும் சூட்டில் இருக்க வேண்டும்.

மார்பகத்தில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து மார்பகத்தின் உட்புறத்தில் வெளியில் இருந்து நகரும் இரத்த ஓட்டட்தை அதிகரிக்க செய்யும்.

படிப்படியாக மார்பக அளவை அதிகரிக்கவும் நாளைக்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடங்களுக்கு மார்பகங்களில் மசாஜ் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

​மார்பக எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

samayam tamil Tamil News Spot

எண்ணெய்களின் மேற்பூச்சு பயன்பாடு மார்பகங்களை வலுவாக்காது. மார்பக அளவை அதிகரிக்காது என்றாலும் , பல எண்ணெய்கள் உங்கள் சருமத்துக்கு நல்லது.

பாதாம் எண்ணெய்: வைட்டமின் ஈ உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.

தேங்காயெண்ணெய் : வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை உங்கள் சருமத்தில் ஈரப்பதம் மற்றும் ஈரப்பதத்தை வைத்திருக்க உதவுகின்றன. இது இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு.

ஜோஜோபா எண்ணெய்: வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கி ஆற்றும் ஒரு மென்மையாக்கும் பொருள்

லாவெண்டர் எண்ணெய்: சருமத்தை ஈரப்பதமாக்ககூடிய அழற்சி எதிர்ப்பு

ஆலிவ் எண்ணெய்: வைட்டமின் நிறைந்த ஆன்டி- ஆக்ஸிடண்ட் மற்றும் ஆன்டி பாக்டீரியல் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.

டீ ட்ரீ ஆயில்: அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு.

​அபாயங்கள் மற்றும் முன்னெச்சரிகைகள் என்ன?

samayam tamil Tamil News Spot

எண்ணெய் மார்பகங்களை உறுதி செய்யும் அல்லது பெரிதாக்கும் என்று எதிர்பார்த்தால் அது ஏமாற்றத்தின் அபாயமாகும்.

மார்பில் தோலை அதிகரிக்க எண்ணெயை பயன்படுத்தினால் ஒரே ஆபத்து ஒவ்வாமை எதிர்வினையாக இருக்கலாம். ஆலிவ் மீது ஒவ்வாமை இருந்தால், ஆலிவ் எண்ணெயில் ஒவ்வாமை ஏற்படலாம்.

எண்ணெய் ஒவ்வாமை குறித்து தெரியவில்லை எனில் பேட்ச் டெஸ்ட் செய்ய்யுங்கள்.

பரிசோதிக்கும் முறை:

இலேசான வாசனையற்ற சோப்பு மற்றும் தண்ணீரால் உங்கள் கைகளை கழுவவும். தோலின் சிறிய பகுதியை தேர்ந்தெடுத்து அந்த பகுதியில் சிறிது எண்ணெய் தடவவும். அந்த பகுதியை மூடி, 24 மணி நேரம் காத்திருக்கவும். அசெளகரியமாக உள்ளதா என்பதை பரிசோதியுங்கள். 24 மணி நேரத்துக்கு பிறகு சிவத்தல் அல்லது கொப்புளங்கள் போன்ற எரிச்சலின் எந்த அறிகுறிகளையும் கவனிக்கவில்லை எனில் எண்ணெய் பாதுகாப்பானது.

​மார்பகங்களை எப்படி பெரிதாக்குவது?

samayam tamil Tamil News Spot

உங்கள் மார்பகங்களை உறுதியானதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றுவதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. மார்பகங்கள் வளர்ச்சி இல்லை எனில் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

Hyperthyroidism in ayurveda : உங்களுக்கு ஹைபர் தைராய்டா, எப்போதும் கட்டுக்குள் வைக்க இதெல்லாம் சாப்பிடுங்க!

கருத்தில் கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சை விருப்பங்களில் மார்பகத்தை உயர்த்துதல் உங்கள் மார்பகங்கள் தொய்வடைந்திருப்பதாக உணர்ந்தால் உறுதியாக இருக்க மார்பகத்தை உயர்த்தும் அறுவை சிகிச்சை செய்யலாம்.

மார்பக பெருக்குதல் பெரிய மார்பகங்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நீங்கள் உணர்ந்தால் அதை மாற்றுவதற்கான வழிகளை பார்க்கலாம். மார்பக அளவு மற்றும் வடிவத்தை மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே நிரூபிக்கப்பட்ட வழி. அதே நேரம் சருமத்தை மேம்படுத்த எண்ணெய்கள் உதவும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *