Share on Social Mediaகுளிர்காலம் சருமத்துக்கு தொல்லை தரும் காலம் ஆகும். முகத்தில் தோல் நீண்டு வெடித்து இறுதியில் செதில்களாக வெடித்து இருக்கும். வரவிருக்கும் கொண்டாட்ட காலங்களில் சருமம் ஜம்மென்று ஜொலிக்க வேண்டாமா? உங்களுக்கு அழகியல் நிபுணர் ரீது தன்வார் சொல்லும் குறிப்புகள் உதவும்.

வறண்டசருமமும் குளிர்காலமும்

குளிர்காலத்தில் வறண்ட சருமத்தினர் தங்கள் சருமத்தை ஈரப்பதமூட்டும் க்ரீம்களால் சரி செய்ய வேண்டும். வாரத்தில் இரண்டு முறை முகத்துக்கு ஃபேஸ் பேக் போட வேண்டும். சில துளிகள் கிளிசரின், ஆலிவ் எண்ணெய், தேன் மற்றும் பன்னீர் உடன் ஒரு டீஸ்பூன் முழு பால் அல்லது க்ரீம் பால் கலக்கவும்.

Podugu Oil : பொடுகு அதிகரிக்காம பார்த்துக்கும் டீ ட்ரீ ஆயில் யூஸ் பண்ணியிருக்கீங்களா? எப்படினு தெரிஞ்சுக்கங்க!

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் இலேசான வட்ட இயக்கத்தில் தடவவும். மீதியை உங்கள் கைகள் முழுவதும் தடவி கொள்ளவும். சருமத்துக்கு ஃபேஸ் வாஷ் அதிகம் பயன்படுத்தாமல் காலையில் குளிர்ந்த நீரால் சருமத்தை சுத்தம் செய்யவும். வறண்ட சருமத்தை எதிர்த்து போராட இது அவசியம் உதவும். இது நாள் முழுக்க இழந்த ஈரப்பதத்தை நிரப்புகிறது என்கிறார் அழகியல் நிபுணர் ரீது தன்வார்

குளிர்காலத்தில் முழு சருமப்பராமரிப்பு

samayam tamil Tamil News Spot

அழகுக்கலை நிபுணர் டாக்டர் ஜமுனா பாய் ஒவ்வொரு நாளும் உடல் முழுவதும் எண்ணெய் மசாஜ் செய்வது வறட்சியை உண்டாக்காமல் தடுக்கும். எளிய தேங்காய் எண்ணெய் கூட சருமத்துக்கு அற்புதங்களை செய்யும். இந்த பருவத்தில் ஒரு மாதம் வரை அல்லது அதற்கு மேற்பட்ட முறை ஸ்பா அல்லது வீட்டில் சரியான முறையில் மசாஜ் செய்ய முயற்சிக்கவும்.

மசாஜ் செய்வது சருமத்தை ஹைட்ரேட் செய்து மிருதுவாக மென்மையாக மாற்றுவதோடு சருமத்தில் இருக்கும் நச்சு பொருள்களையும் வெளியேற்றுகிறது. உங்கள் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் பராமரிப்பு முகத்தில் பிரதிபலிக்கும். தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறீகள் உட்கொள்வதை அதிகரித்தால் உங்கள் செரிமான அமைப்பு சரியாக செயல்படும். இது சருமம் வறட்சியாவதை தடுக்கும்.

இவை தவிர அடிப்படை சுத்திகரிப்பு, டோனிங் மற்றும் ஈரப்பதமூட்டும் வழக்கமான தினசரி தோல் பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும்.

​வறட்சியான தோலுக்கு ஏற்ற மாஸ்க்

samayam tamil Tamil News Spot

பப்பாளிப்பழம் – அரை கப்

குங்குமப்பூ இழைகள் – சிறிது

இஞ்சி சாறு – சில துளிகள்

ஃப்ரெஷ் க்ரீம் – கால் டீஸ்பூன் அளவு

அனைத்தையும் நன்றாக சேர்த்து மசிக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். வெள்ளரிக்காய் அல்லது கிவி துண்டுகளை எடுத்து கண் இமைகளில் வைக்கவும். பிறகு அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும். வாரத்தில் ஒரு நாள் இதை தவிர்க்காமல் செய்து வர வேண்டும்.

​பாதாம் தேன் மாஸ்க்

samayam tamil Tamil News Spot

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த மாஸ்க் பயன்படுத்துங்கள்.

பாதா பருப்பு – ஐந்து முதல் ஏழு

தேன் – 1 டீஸ்பூன்

தயிர் – அரை டீஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் – சில துளி (ஆர்கன் எண்ணெய் சேர்க்கலாம்)

பாதாம் பருப்புகளை எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் அரை டீஸ்பூன் தயிர் கலக்கவும். இதில் சில துளி ஆலிவ் எண்ணெய் அல்லது ஆர்கன் எண்ணெய் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை விட்டு பின்னர் சுத்தம் செய்யவும்.

​தயிர், பால் பவுடர்

samayam tamil Tamil News Spot

வாரம் ஒரு முறை இதை செய்யலாம்

தயிர் – அரை கப்

பால் பவுடர் – 1 டீஸ்பூன்

தேன் – 1 டீஸ்பூன்

பப்பாளி மசித்தது – 2 டீஸ்பூன்

அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி விடவும். பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யவும். இந்த மாஸ்க் உங்கள் நிறத்தை மேம்படுத்தும். பளபளப்பாக காட்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க்.

​உதடுகள்

samayam tamil Tamil News Spot

வறண்ட சருமம் போன்று வறட்சியான உதடுகளும் மோசமானவை. உதட்டில் இருக்கும் இறந்த சருமத்தை நீக்க உதடுகளை ஸ்க்ரப் செய்யவும். எப்பொழுதும் தரமான தீவிர ஈரப்பதமூட்டும் பொருள்களை உதட்டில் பயன்படுத்துங்கள். பெட்ரோல்யம் ஜெல்லிக்கு மாற்றாக லிப் பாம் உதவும். அடிக்கடி லிப் பாம் பயன்படுத்துங்கள்.

குளிர்காலத்தில் வறண்ட சருமத்தை எதிர்த்து போராட மென்மையாக க்ளென்சிங் லோஷன் பயன்படுத்தலாம். சருமத்தின் ஈரப்பதத்தை அடைக்க மாய்சுரைசர் பயன்படுத்தலாம். ஆல்கஹால் சார்ந்த சரும பொருள்களில் விலகி இருங்கள் இது சருமத்தை நீரிழப்பு செய்யும்.

இயற்கையான அழகை அள்ளித்தரும் ஆவாரம்பூ, எதற்கு எப்படி பயன்படுத்தலாம்?

ஒவ்வொரு இரவும் கால்களை சுத்தம் செய்து இரவுக்கு முன்பு நல்ல ஃபுட் க்ரீம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி தடவலாம்.

நாள் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடியுங்கள். வறுத்த உணவுகள் மற்றும் இனிப்புகளை தவிருங்கள்.

தினசரி 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதை உறுதி செய்யுங்கள். மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *