Share on Social Media

அன்றாட வேலைகளை செய்ய முடியாத அளவுக்கு அசெளகரியம் உண்டாக்கும். உடலில் நீரிழப்பு அதிகரிக்க செய்யும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வயிற்றுப்போக்குக்கு பாதிப்பு அடைவார்கள். இதை இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.

வயிற்றுப்போக்கு

தளர்வான மலம் கழித்தல் அதிக நீர்ச்சத்தோடு வெளியேறக்கூடும். இது வலுவான துர்நாற்றத்தை கொண்டிருக்கலாம். பகலில் பல முறை மூன்று முறைக்கு மேல் உண்டானால் அது வயிற்றுப்போக்கு என்றழைக்கப்படுகிறது. உடலில் இருந்து திரவங்கள் மற்றும் தாதுக்கள் இழப்பது உடலுக்குள் நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

மாதவிடாய் வயிறு வலி, அதிக உதிரபோக்கு இரண்டுக்கும் தீர்வாகும் அருகம்புல் மாதுளை இலை கஷாயம்!

வைரஸ் தொற்றுகள் பெரியவர்களின் வயிற்றுப்போக்குக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம். கோடையில் உஷ்ணம் தாண்டி, பாக்டீரியா தொற்று, பெருங்குடல் அழற்சி மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, குடல் நோய்கள், உணவு ஒவ்வாமை போன்றவை மலமிளக்கி விளைவை உண்டாக்கும்.

குழந்தைகள் பெரும்பாலும் தளர்வான மலத்தை உருவாக்குகிறார்கள். இது பெரும்பாலும் மென்மையாக இருக்கும். காய்ச்சல் உடன் இருந்தால் அது வயிற்றுப்போக்கு ஆகும். வயிற்றுப்போக்கு இருக்கும் போது செய்ய வேண்டிய எளிமையான கை வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

இளநீர்

samayam tamil Tamil News Spot

வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு இளநீர் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. சிறுநீரக பிரச்சனை இருக்கும் நோயாளிகள் இதை பயன்படுத்த கூடாது. இளநீர் – 1 முதல் 2 டம்ளர் வரை குடிக்கலாம். தினமும் இரண்டு முறை இதை குடிக்கலாம்.

இளநீர் நல்லது. ஆனால் இது ரத்தத்தில் சோடியத்தின் அளவு அதிகரிக்க செய்யும். அதனால் வயிற்றுப்போக்கு அறிகுறீகள் குறைந்தவுடன் அதை நிறுத்திவிட வேண்டும். தேங்காய் முற்றிய பிறகு பயன்படுத்தினால் அதன் பொட்டாசியம் சோடியம் அளவு மாறுபடலாம். அதனால் இளநீராக தேர்வு செய்யுங்கள்.

​தயிர்

samayam tamil Tamil News Spot

தயிர் ஒரு புரோபயாடிக் ஆகும். இது குடல் பாக்டீரியாக்களை சீராக்க உதவும். இது வயிற்றுப்போக்கு சிகிச்சை மற்றும் தடுப்புக்கு உதவும்.

மென்மையான உணவுக்கு பிறகு ஒரு கப் தயிர் சேருங்கள். தயிர் குடல் அசைவுகளை சீராக்கும். வயிற்றுப்போக்கு இருக்கும் போது தினமும் ஒரு வாரம் வரை இரண்டு கப் தயிர் சேர்ப்பதை உ றுதி செய்யுங்கள். வயிற்றுப்போக்கு கட்டுக்குள் வரும்.

​சீரக நீர்

samayam tamil Tamil News Spot

சீரகம் இரைப்பைக்கு சிகிச்சைக்கு பயனளிக்க கூடும். இது அஜீரணம் மற்றும் தளர்வான இயக்கத்துக்கு உதவக்கூடும்.

சீரகம் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 1 டம்ளர்

ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து சீரகம் சேர்த்து இறக்கவும். இது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது குடிக்க வேண்டும். தினமும் 3 முதல் 4 முறை வரை குடிக்க வேண்டும். உணவுக்கு பிறகு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் இதை குடிக்க வேண்டும். செரிமானத்துக்கும் நல்லது வயிற்றுப்போக்கால் உண்டாகும் நீரிழப்புக்கும் நன்மை செய்யும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

samayam tamil Tamil News Spot

ஆப்பிள் சீடர் வினிகர் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை வெளிப்படுத்துகிறது என்று ஆய்வு சொல்கிறது. நோய்த்தொற்றுகள் மற்றும் தளர்வான இயக்கத்தை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராட உதவக்கூடும்.

ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டீஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்

சுவைக்கு – தேன்

ஒரு டம்ளர் நீரில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து நன்றாக கலக்கி எடுக்கவும். சுவைக்கு சிறிது தேன் சேர்த்து மீண்டும் கலக்கி குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே எடு த்துகொண்டால் அது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கி உடலில் பொட்டாசியம் அளவை அதிகரிக்கும். இது மோசமான நிலையை உண்டாக்கும்.

இஞ்சி

samayam tamil Tamil News Spot

இரப்பை அழற்சி போன்ற சில குடல் கோளாறுகள் பாக்டீரியாவால் உண்டாக கூடும். அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட பயோ ஆக்டிவ் சேர்மங்கள் இஞ்சியில் நிறைந்துள்ளன. இது இரைப்பை அமைப்பை சீராக்க செய்யும். மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும் தொற்றுநோயை எதிர்த்து போராட செய்யும்.

இஞ்சியை தோல் நீக்கி அரைத்து எடுக்கப்பட்ட சாறு – 2 டீஸ்பூன்

தேன் – ருசிக்கு

அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் இஞ்சி சாறை சேர்த்து அதில் தேன் கலந்து விடவும். இந்த கலவையை அப்படியே குடிக்கலாம். இஞ்சி சாறு தொண்டைக்கு செருமலை உண்டாக்கினால் இன்னும் வெதுவெதுப்பான நீர் சேர்த்து குடிக்கலாம். வயிற்றுப்போக்கு நிற்கும் வரை தினமும் 2 முதல் 3 முறை வரை இதை செய்யலாம்.

4

4

​இலவங்கப்பட்டை மற்றும் தேன்

samayam tamil Tamil News Spot

இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸினேற்ற மற்றும் ஆண்டி மைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது. தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தி வயிற்றுக்கும் குடலுக்கும் ஓய்வு கொடுக்கும்.

இலவங்கப்பட்டை – கால் டீஸ்பூனில் பாதி அளவு

தேன் – ருசிக்கேற்ப

வெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்

அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் உடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து இளஞ்சூட்டில் இருக்கும் போது குடிக்கவும்.

தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை இதை குடிக்கலாம். வயிற்றுப்போக்கு கட்டுக்குள் வரும் போது இதை நிறுத்திவிடலாம்.

சரும அரிப்புக்கும், நமைச்சலுக்கும் குளிக்கும் போது இதை செய்யுங்க, சரும வியாதியும் வராது!

இலவங்கப்பட்டை அதிகமாக எடுத்துகொள்வது கல்லீரல் பாதிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. அதனால் கொடுக்கப்பட்ட அளவுகள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு:

தளர்வான வயிற்றுப்போக்கு தொடர்ந்து இருந்தால் அது உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லையெனில் பெரும் ஆபத்தை உண்டாக்கும். மலத்தில் இரத்தம் இருந்தால் மருத்துவ உதவி தேவை. நீரிழிப்பு பிரச்சனை இருந்தால் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். வயிற்றுப்போக்கு அறிகுறி வந்த உடன் தாமதிக்காமல் கை வைத்தியம் அல்லது மருத்துவரை அணுகுவது நல்லது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *