எபிலேட்டர்ஸ் (Epilators):
எபிலேட்டர்ஸ் என்பது சிறிய மெஷின். இதனைக் கொண்டு ரோமத்தின் வேர் வரை சென்று அதை நீக்க முடியும். ஆனால் இது மிகவும் வலி நிறைந்ததாக இருக்கும் என்பதால் யாரெல்லாம் வலி பொறுக்க முடியுமோ அவர்கள் பயன்படுத்தலாம். இந்த முறையில் தோற்று ஏற்படாமல் கவனமாகக் கையாள வேண்டும்.
கிளிப்பிங் மற்றும் ட்ரிம்மிங்:
ரொம்பவே எளிதான, பாதுகாப்பான முறை என்பதால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால், இதில் முழுமையாக ஹேரை நீக்க முடியாது. பொதுவாக, ரோமத்தை முழுமையாக நீக்கும் முறைகளைப் பயன்படுத்தும்போது சிறு சிறு கொப்புளங்கள், எரிச்சல் போன்றவை ஏற்படும் என்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். பக்க விளைவுகள் மிகவும் குறைவு.
லேசர் ஹேர் ரிடெக்சன் (Laser hair reduction)
இது ரொம்பவே பாதுகாப்பான முறை. இதை மேற்கொள்ளும்போது ரோம வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். 5 முதல் 6 சிட்டிங் தேவைப்படலாம். 6 முறைக்கு மேல் தொடர்ந்து மெயின்டெயின் செய்தால் போதுமானது. தேவைப்பட்டால் வருடத்திற்கு ஒருமுறை, அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மறுபடியும் இந்த முறையை மேற்கொள்ளலாம்” என்றார்.