Share on Social Media


சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பொடுகு! குறிப்பாக, இளம் வயதினருக்கு தர்மசங்கடத்தைத் தரும் ஒன்று. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், முடி உதிர்வு ஏற்படும்; தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு. அதோடு சில சரும நோய்கள் உருவாகவும் இது வழிவகுக்கும். முகத்தில் பருக்கள் உருவாகலாம்; கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்!

பொடுகு ஏன் ஏற்படுகிறது?

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கிய காரணங்கள்.

`பொடுகு பிரச்னையைப் போக்கலாம்’ என வெளியாகும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஏராளம். அவற்றை நம்பி, கண்ட கண்ட ஷாம்பூக்களை, அதிகப் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால், `இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக் கூடியவை, நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் பொருள்களும்கூட பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு தரக்கூடியவை’ என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

தேங்காய் எண்ணெய்

Also Read: How to Series: முகப்பருக்களுக்கு வீட்டிலேயே தீர்வு காண்பது எப்படி? | How to get rid off pimples?

அப்படி பொடுகை விரட்ட உதவும் வழிகள் இங்கே…

தேங்காய் எண்ணெய்-எலுமிச்சைப்பழச் சாறு மசாஜ்!

எலுமிச்சைப்பழச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையைத் தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

தயிர் குளியல்!

தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி வரும் பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.

பேக்கிங் சோடா பேக்!

ஈரமான தலைமுடியில் சிறிது பேக்கிங் சோடாவைத் தேய்க்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, தலையை அலசவும். பேக்கிங் சோடா, பொடுகுக்கு மிகச் சிறந்த நிவாரணி. இது, தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கவும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடவும் உதவும். பேக்கிங் சோடாவை அதிக நேரம் தலையில் வைத்து இருந்தால் தலைமுடி வறண்டு விடும்… கவனம்!

கூந்தல் ஊட்டத்துக்கு டீ ட்ரீ எண்ணெய் (Tea Tree Oil)

தேயிலை மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுவது, தேயிலை மர எண்ணெய். இது பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்துப் போராடக்கூடியது. கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து, முடி உதிர்வையும் தவிர்க்க உதவும். டீ ட்ரீ எண்ணெயைச் சில துளிகள் எடுத்து, தலை முழுக்கத் தடவி, ஐந்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர்… பொடுகு மருந்து!

ஆப்பிள் சிடர் வினிகர் பெரிய கடைகளில் கிடைக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைக்க வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து தலையை அலசிவிட வேண்டும். இது பொடுகுக்கு சிறந்த மருந்து; முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.

வெந்தயம்… வீரியம்!

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.

வெங்காயம் காக்கும்!

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு, தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வேப்பிலை கசப்பு… பாக்டீரியாவுக்கு எதிரி!

கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட்போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்புத் தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும்.

neem Tamil News Spot
வேப்பிலை

ஆரஞ்சு தோல்… அட்டகாசம்!

ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

மருதாணி இலை மகிமை!

கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை ஆகியோர் தவிர்க்கவும்.

ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால், பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார், சித்த மருத்துவ டாக்டர் தி.வேணி.

* ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து, பேக் போல தலைக்குப் போட்டுக்கொண்டு, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு அலசினால், பேன், பொடுகு நீங்கி தலை சுத்தமாகிவிடும்.

* வேப்பங்கொட்டைகளை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும் அரை மணி நேரம் கழித்து, தலைமுடியை நன்கு அலசிவிடவும்.

* நல்லெண்ணெய் தேய்த்து தலையை வாரி, தலை முழுவதும் வேப்பங் கொழுந்தை அரைத்து தடவவும் போடவும். ஒரு மணி நேரம் கழித்து சீப்பால் வாரினால், பேன், ஈறு வெளியில் வந்துவிடும். பொடுகுத் தொல்லையும் மறையும்.

* ஒரு கப் நல்லெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் மிளகை உடைத்துக் காய்ச்சி, வடிகட்டவும். இந்த எண்ணெயைத் தலை முழுவதும் விடவும். ஒரு காட்டன் துணியால் ஒற்றி எடுத்தால், பேன், பொடுகு வந்துவிடும். பிறகு, சின்ன சீப்பால் வாரவும்.

vikatan 2019 05 c10381e2 40d7 46e0 88e8 17ad0d9dcd53 80435 thumb Tamil News Spot
நல்லெண்ணெய்

* வெந்தயப்பொடி, வேப்பம்பூ பொடி இவற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பேன், பொடுகு, ஈறு தொல்லை இருக்காது.
வாரம் ஒரு முறை இந்த மருந்துகளைப் பயன்படுத்தினால், தலை சுத்தமாகும்.

* வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லது.

இயற்கை முறை தீர்வு!

பொடுகு ஷாம்புவைத் தவிர, இயற்கை முறை தீர்வுகளும் உண்டு என்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

* 2 டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். அதை, இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் எழுந்ததும், இதனுடன் ஃபிரிட்ஜில் வைக்காத மோர் அல்லது தயிர் கலக்கவும். ஸ்கால்ப்பில் படுவதுபோல தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊறவிடவும். வெந்தய பேஸ்ட்டைத் தலையில் தடவுவதற்கு முன்பு, தலையை நன்கு வாருங்கள். அப்போதுதான் தளர்வாக இருக்கும் பொடுகுத் துகள்கள் உதிரும். ஆனால், சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் இதை ஃபாலோ செய்யாமல் இருப்பது நல்லது.

* தலையில் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயைத் தடவுங்கள். பிறகு, எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி, முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவிட்டு அலசுங்கள். ஒரே வாஷில் பொடுகு குறைந்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். ஆனால், எலுமிச்சம் சாற்றை எண்ணெய் தடவாத தலையில் அப்ளை செய்யவே கூடாது.

60abbacd74188 Tamil News Spot
கற்றாழை

Also Read: Doctor Vikatan: பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் சருமப் பிரச்னை; என்ன தீர்வு?

* சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து, நல்ல தண்ணீரில் போட்டு வாஷ் செய்யவும். தண்ணீரின் மேலாக வெள்ளைப் படலம் ஒன்று படியும். இது அமிலத்தன்மை கொண்டது என்பதால் அதைப் பயன்படுத்தக் கூடாது. கீழே தங்கிவிட்ட ஜெல்லை மட்டும் எடுத்து, அதனுடன் கால் டீஸ்பூன் வால் மிளகு சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையைத் தலையில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்யவும். இது, பொடுகை நீக்குவதுடன் முடிக்கும் நல்ல பளபளப்பு தரும்.

* சிலருக்கு ஷாம்பூ பயன்படுத்தினால் தலையில் பொடுகு வரும். அப்படிப்பட்ட பெண்கள், கைப்பிடி செம்பருத்தி இலைகள், 10 செம்பருத்திப் பூக்கள், இவற்றுடன் ஊறவைத்த 10 பூந்திக்காய்களைச் சேர்த்து, அரைத்து தலையில் தடவிக் குளிக்கலாம். தலைமுடி ஷாம்பூ போட்டது போலவும் இருக்கும்; பொடுகு வராது, பொடுகு இருந்தாலும் சரியாகிவிடும்.

* நாட்டு மருந்துக் கடைகளில் நெல்லிக்காய் பவுடர் கிடைக்கும். அதில் 4 டீஸ்பூன், தயிர் 4 டீஸ்பூன் இரண்டையும் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, வாஷ் செய்யவும். பொடுகு படிப்படியாகக் குறைந்து, ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும்.

* 4 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் கலந்துகொள்ளவும். தலைக்குக் குளித்த பிறகு, இந்தக் கலவையைத் தலையின் ஸ்காப்பில் தடவி, 5 நிமிடம் கழித்து வாஷ் செய்துவிடுங்கள். இதுவும் பொடுகை விரட்டும். பொடுகுப் பிரச்னைக்கு காஸ்மெட்டிக் வினிகரும் பயன்படுத்தலாம். வினிகர் வேண்டாம் என்பவர்கள், ஆப்பிளைத் துருவி சாறெடுத்து, அந்தச் சாற்றை ஸ்கால்ப்பில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்துவிடவும்.

78654 thumb Tamil News Spot
விளக்கெண்ணெய்…

* 10 மில்லி விளக்கெண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் 10 கிராம் தனியா பவுடரைக் கலந்து, தலையில் தடவி ஊறவைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து தலையை வாஷ் செய்துவிடவும். விளக்கெண்ணெயும் தனியாவும் பொடுகையும் போக்கும்; முடியையும் வளர்க்கும்.

* 10 மில்லி விளக்கெண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் கைப்பிடி துளசியைப் போட்டு அந்த எண்ணெய்யையும் பொடுகு நீக்கப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: இந்த முறைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி பொடுகுப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். அதேநேரத்தில் மனஅழுத்தம் போன்ற பொடுகு உருவாவதற்கான காரணங்களைக் களையாவிட்டால், இதனால் முழுமையான பலன் கிடைக்காது.

– கே.ஆர்.ராஜமாணிக்கம்Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *