Share on Social Media


சைனஸ் என்று சொல்லப்படக்கூடிய `Sinusitis’ குறித்த தெளிவான புரிந்துணர்வு பெரும்பாலானோரிடம் இல்லை. சாதாரணமாக சளி பிடித்தால் கூட சைனஸ் பிரச்னையாக இருக்குமோ என்று பதறிப்போய்விடுகிறார்கள். இச்சூழலில் சைனஸ் என்றால் என்ன? அப்பிரச்னை ஏன் ஏற்படுகிறது? அதனை வீட்டிலேயே குணப்படுத்த இயலுமா? இதுபோன்ற அடிப்படைக் கேள்விகளை காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ப்ரீத்தியிடம் கேட்டோம். அவர் அளித்த விளக்கம் இங்கே…

“நம் தலையின் எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மூக்கை சுற்றியிருக்கும் பகுதிகளில் காற்று நிரம்பி இருக்கும்.

காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர் ப்ரீத்தி

அப்படி இல்லையென்றால் தலையின் எடை கனமாகி அதனைக் கழுத்தால் பேலன்ஸ் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதற்காக இயற்கையில் அமைந்திருக்கும் அம்சம் இது. அப்படியாக காற்று நிரம்பியுள்ள பகுதிகளுக்குப் பெயர்தான் சைனஸ்.

மூக்கின் ஈரப்பதத்துக்காக உற்பத்தியாகிற mucus படலம் மூக்குக்கு வராமல், உள்ளேயே காற்று இருக்கும் இடத்தில் அடைத்துக்கொண்டு அதனால் நீர் கோத்தால் அதுதான் சைனஸ் பிரச்னையாக மாறுகிறது. இதன் விளைவாக தலையின் கனம் கூடுதல், தலைவலி, கண் வலி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

சாதாரணமாக சளி பிடித்தால் கூட சைனஸில் நீர் கோத்துக்கொள்ளும். இதனால் மூக்கைச் சுற்றியுள்ள இலகுவான தசைகள் வீங்கிக்கொள்ளும். இதன் காரணமாகத்தான் சளி பிடித்தால் தலைவலி ஏற்படுகிறது.

சாதாரணமான சளித்தொந்தரவால் ஏற்படும் சைனஸ் பிரச்னை நிரந்தரமானதல்ல. இதனை வீட்டிலேயே குணப்படுத்த முடியும். ஆவி பிடிப்பதன் மூலம் இப்பிரச்னையை வீட்டிலேயே சரி செய்யலாம். வெறும் தண்ணீரைக் கொதிக்கவைத்து இறக்கி ஆவி பிடித்தாலே போதும்.

வெந்நீருக்குள் தைலம், ஆவி பிடிக்கும் மாத்திரை, மஞ்சள் என எதுவும் கலக்கத் தேவையில்லை. 5 நிமிடங்கள் பிடித்தாலே போதும். இப்பிரச்னை குணமாகிவிடும். ஆவி பிடிக்கும் இயந்திரத்தை இப்போது பலரும் வாங்கி வருகின்றனர்.

vikatan 2020 12 196ae0d6 bee3 4f39 a456 9004be17930e iStock 500756664 Tamil News Spot
Steam Inhalation

Also Read: How to Series: மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து தப்பிப்பது எப்படி? | How to get rid of Constipation?

அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்றுதான் சொல்வேன். ஏனென்றால் அது அதிக கொதிநிலையில், அதிவேகத்தில் நீராவியை வெளியிடுவதால் மூக்கில் வேறு சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

10 பேர் சைனஸ் தொந்தரவு என்று வந்தார்கள் என்றால் அவர்களில் 8 பேருக்கு சைனஸ் பிரச்னை இருக்காது. சுவாச ரீதியாக ஒவ்வாமை (அலர்ஜி) அவர்களுக்கு இருக்கும். அதன் விளைவாக அவர்கள் தொடர்ச்சியாக தும்மல் ஏற்படுவது போன்ற காரணங்களால் சைனஸ் பிரச்னைக்கு ஆளாகியிருப்பார்கள். ஒவ்வாமையை ஏற்படுத்தும் தூசி, புகை, வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை தவிர்க்கச் சொல்லிவிட்டு ஒவ்வாமைக்கான சிகிச்சையை அளித்தால், இவர்களுக்கு சைனஸ் பிரச்னை தானாக சரியாகிவிடும்.

உண்மையான சைனஸ் பிரச்னை என்பது நாள்பட்ட வியாதியாக தொடர்ந்து வருவது. அவர்களுக்கு தொடக்கத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுப்போம். அதன் வழியாகவே அப்பிரச்னையை குணப்படுத்தி விடலாம். சிலருக்கு மருந்து, மாத்திரைகளால் சைனஸ் குணமாகவில்லையெனில் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை எளிமையானதுதான் என்பதால் அதற்காக பயப்படத் தேவையில்லை.

Tamil News Spot
Cold (Representational Image)

Also Read: How to series: ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் – உபயோகிப்பது எப்படி? | How to use finger pulse oximeter?

முதலில் எது சைனஸ் என்கிற புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். சளி பிடித்து சற்றே முகம் வீங்கி விட்டாலோ, மூக்கிலிருந்து நீர் வடிந்தாலோ நீங்களாகவே உங்களுக்கு சைனஸ் பிரச்னை இருப்பதாக நினைத்துக் கொள்ளக்கூடாது. சிலர் மருத்துவரைச் சந்திக்க வரும் முன்னர் அவர்களாகவே முடிவு செய்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்துக்கொண்டு வருவார்கள். அது தேவையே இல்லை. மருத்துவரை அணுகிய பிறகு மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி நடந்தாலே போதும் இப்பிரச்னையை குணப்படுத்தி விட முடியும். இது எளிதில் குணப்படுத்தக்கூடிய பிரச்னைதான்“ என்றார்.

– ஜிப்ஸிSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.