Share on Social Media


பல்ஸ் ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்தும் வழிமுறை

* விரலை நன்றாகத் துடைத்துவிட்டு, விரலில் கிளிப் போன்ற பல்ஸ் ஆக்ஸிமீட்டரை பொருத்த வேண்டும். ஆக்ஸிமீட்டர் பொருத்தப்படும் விரலில் நகப்பூச்சு (Nail Polish) இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் டிஸ்பிளேயில் காட்டப்படும் ஆக்ஸிஜன் அளவு தவறாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

* ஆக்ஸிமீட்டரை விரலில் பொருத்திய பிறகு, அதில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும். ஒரு நிமிடத்திற்குள்ளாகவே நாடித்துடிப்பின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜனின் அளவும் டிஸ்பிளேயில் நமக்குத் தெரியும்.

* ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிந்த பிறகு, இந்தக் கருவியை விரலில் இருந்து அகற்றிவிட்டால் அது தானாகவே ஆஃப் ஆகிவிடும்.

* இதன் மூலம் கண்டறியப்பட்ட, நம் உடலின் ஆக்ஸிஜன் அளவு 95 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தாலோ, நாடித்துடிப்பின் அளவு 60-க்கு குறைவாகவும், 100-க்கு அதிகமாகவும் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

Pulse Oximeter

Pulse Oximeter
Photo by Towfiqu barbhuiya from Pexels

தரம் குறைந்த, போலி ஆக்ஸிமீட்டரை எவ்வாறு கண்டறிவது?

“பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்க நினைப்பவர்கள் நேரடியாக நம்பகமான மருந்தகங்களில் அதை வாங்குவது நல்லது. ஆன்லைனில் வாங்க நினைத்தால் நீங்கள் வாங்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும், வாங்கும் கருவியைப் பற்றித் தரப்பட்டுள்ள தகவல்களையும் பரிசோதித்துச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படும் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வாங்க வேண்டாம்.

ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் டெக்னிக்கலாகப் பெரிய தவறுகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. ஒரு குடும்பத்தில் வெவ்வேறு வயதுடைய நால்வர் இருக்கும்போது அவர்கள் பயன்படுத்தும் ஆக்ஸிமீட்டர் நால்வருக்கும் ஒரே மாதிரியான அளவீடுகளைக் காட்டினாலோ, எப்போதும் ஒரே மாதிரியான அளவைக் காட்டினாலோ அந்தக் கருவியில் ஏதாவது குறைபாடு இருக்கலாம். மற்றபடி இது அதிகம் சிக்கல் இல்லாத எளிய எலெக்ட்ரானிக் கருவிதான்” என்றார் மருத்துவர் குழந்தைசாமி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *