Share on Social Media

இது முகம், கழுத்து, கைகள் மற்றும் கால்களில் வரலாம். வெகு அரிதாக அவை உச்சந்தலை மற்றும் கால்விரல்களிலும் ஏற்படலாம். மச்சத்தின் நிறம் மற்றும் வடிவமானது ஒவ்வொருவருக்கும் இடையில் மாறுபடும். இது சிவப்பு, கருப்பு, பழுப்பு, இளஞ்சிவப்பு என பல வண்ணங்களில் இருக்கலாம். இதை போக்கும் எளிமையான வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் – தேவைக்கேற்ப

ஆப்பிள் சீடர் வினிகரை பருத்தி பஞ்சில் நனைத்து மச்சம் இருக்கும் இடத்தில் வைக்கவும். பிறகு அந்த பஞ்சு கீழே விழாமல் இருக்க அதன் மேல் டேப் ஒட்டி விடுங்கள். 5 அல்லது 6 மணி நேரம் வரை வைத்திருந்து பிறகு டேப் நீக்குங்கள். மச்சம் மறைந்து வடுவை உண்டாக்கும் வரை அந்த பகுதியை சுத்தம் செய்து விடவும்.

மேக்- அப் : இந்த சின்ன மிஸ்டேக் கூட உங்க வயசை இன்னும் அதிகரிச்சு காட்டும், இனிமே கவனமா இருங்க!

ஆப்பிள் சீடர் வினிகர் என்பது வீட்டு வைத்தியத்தில் முதன்மையானது. வினிகரில் உள்ள அமிலத்தன்மை மச்சத்தை உலர்த்தி வடுவாக்கி இறுதியில் மறையக்கூடும்.

​பேக்கிங் சோடா உடன் விளக்கெண்ணெய்

samayam tamil Tamil News Spot

பேக்கிங் சோடா அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதில் விளக்கெண்ணெய் சேர்த்து பேஸ்ட் தயாரிக்கவும். இதை மச்சம் மேல் தடவி அதன் மேல் பேண்ட் எய்ட் போடவும். இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை பேண்ட் எய்ட் எடுக்கவும். தினமும் இதை செய்து வரலாம்.

விளக்கெண்ணெய், சமையல் சோடா இரண்டுமே மச்சத்தை உலர்த்தக்கூடியது. விளக்கெண்ணெய் மச்சம் நீங்கிய சருமத்தை வடுக்கள் இல்லாமல் இருக்க செய்கிறது. எனினும் இந்த முறை பயன்படுத்தும் போது சிலருக்கு சருமத்தில் வீக்கமும் சிவப்பும் தோன்றலாம். எனினும் அவை தற்காலிகமானவை என்பதால் பயப்பட வேண்டியதில்லை.

​வாழைப்பழத்தோல்

samayam tamil Tamil News Spot

வாழைப்பழத்தோலை சிறிய துண்டாக நறுக்கி மச்சம் இருக்கும் இடத்தில் வைத்து அதன் மேல் டேப் போட்டு விடவும். இது இரவு முழுவதும் இருக்கட்டும். மச்சம் மறையும் வரை இதை வைக்கலாம்.

வாழைப்பழத்தோலில் இயற்கையான என்சைம்கள் மற்றும் அமிலங்கள் உள்ளன. ஆக்சாலிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் சருமத்தில் தேவையற்ற இந்த தோல் நிறமியை வெளியேற்ற உதவுகிறது. இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் செய்யும்.

பூண்டு

samayam tamil Tamil News Spot

பூண்டு ஒரு பல் எடுத்து அதை தோல் உரித்து இடிக்கவும் சாறு வெளியேறாமல் இருக்கும் போதே அதை மச்சம் மீது வைத்து மெல்லிய சுத்தமான வெள்ளைத்துணியை மச்சத்தின் மேல் உள்ள பூண்டின் மீது வைத்து ஒட்டி விடவும். இதையும் இரவு முழுக்க விட வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்யலாம். மச்சம் விழும் வரை தொடர்ந்து செய்து வரலாம்.

பூண்டின் தொடர்ச்சியான பயன்பாடு விரைவான முடிவை தரும். பூண்டு விழுது வடு உருவாவதை தடுக்கு மச்சத்தை மறைக்க செய்யும். பூண்டு சருமத்தில் இலேசான எரிச்சலை தரலாம்.

​மஞ்சள்

samayam tamil Tamil News Spot

மஞ்சள் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வைட்டமின் சி மாத்திரை வாங்கி பொடித்து மஞ்சளுடன் கலந்து தேன் ஒரு துளி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை மச்சத்தின் மீது தடவி 20 நிமிடங்கள் அப்படியே உலரவிடவும். பிறகு வெற்றுநீரில் கழுவிஎடுக்கவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வரை இதை செய்து விடவும்.

வைட்டமின் சி மாத்திரை மச்சத்தை வெளியேற்றும். மஞ்சள் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவும். இது வீட்டில் இருக்கும் எளிதாக கிடைக்கும் பொருளும் கூட

​கொத்துமல்லி இலைகள்

samayam tamil Tamil News Spot

கொத்துமல்லி இலைகளை வாங்கி சுத்தம் செய்து அரைத்து பேஸ்ட் போல் ஆக்கவும். இதை மச்சம் மீது தடவி இரண்டு மணீ நேரம் கழித்து வெற்றுநீரில் கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு முறை இதை செய்யலாம். இது முகத்தையும் பொலிவாக்க செய்யும்.

கொத்துமல்லி இலைகளை மேற்பூச்சுடன் பயன்படுத்தும் போது சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும். பிறகு அவை மச்சம் இருக்கும் பகுதியில் உஷ்ணத்தை உண்டாக்கி மச்சத்தை வெளியேற்றுகின்றன.

​தேன்

samayam tamil Tamil News Spot

சுத்தமான தேனை எடுத்து மச்சம் மீது தடவி அதன் மேல் டேப் போட்டு ஒட்டவும். ஒரு மணீ நேரம் கழித்து டேப்பை நனைத்து பொறுமையாக அகற்றவும். இந்த பகுதியை தண்ணீரில் கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வரை செய்யலாம்.

அந்தரங்க பகுதியை சுற்றி இருக்கும் கருமையை போக்க இந்த ஆறில் ஒன்றை பயன்படுத்துங்க, ஆண்களும்!

தேன் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. தேன் சரும நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. விரைவில் மச்சத்திலிருந்து விடுதலை அளிக்கும். ஆனால் தேன் சுத்தமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது சருமத்தை சேதப்படுத்திவிடும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *