Share on Social Media

​டெஸ்டோஸ்டிரான்

இது ஆண்களுக்கான பாலியல் ஹார்மோன். இருப்பினும் டெஸ்டோஸ்டிரான் பெண்களிலும் மிக குறைவான அளவுகளில் உள்ளது. மோசமான உணவு. மரபியல் மற்றும் பி.சி.ஓ.எஸ் போன்ற அடிப்படையான பிரச்சனைகள் காரணமாக, சில நேரங்களில் பெண்கள் அதிக அளவு டெஸ்டோஸ்ட்ரான் உருவாக்குவார்கள்.

இதனால் முகத்தில் தேவையற்ற முடி, உடல் பருமன் மற்றும் முடி உதிர்தல் போன்றவை டெஸ்டோஸ்ட்ரானில் அதிகப்படியான உற்பத்தியால் உண்டாகும் பொதுவான அறிகுறிகளாகும்.

மேக்- அப் : இந்த சின்ன மிஸ்டேக் கூட உங்க வயசை இன்னும் அதிகரிச்சு காட்டும், இனிமே கவனமா இருங்க!

டெஸ்டோஸ்ட்ரான் -5 ஆல்பா ரிடக்டேஸ் என்ற நொதியால் வினையூக்கப்படுத்தப்ப்ட்ட டி.ஹெ.சி ஆக மாற்றப்படுகிறது. அதிகப்படியான டி.ஹெச்.டி பெண்களில் முடி உதிர்தலை உண்டாக்குகிறது.

எப்படி தவிர்ப்பது

டெஸ்டோஸ்ட்ரானை இயற்கையாகவே குறைப்பதற்கான வழிகளில் ஒன்று உடல் எடையை குறைப்பதாகும். இது குறித்து மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.

​கர்ப்ப ஹார்மோன்கள்

samayam tamil Tamil News Spot

கர்ப்பகாலத்தில் சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகப்படியான முடி உதிர்தலை அனுபவிக்கின்றனர். டெலோஜென் எஃப்ளூவியம் என அழைக்கப்படும் இந்த முடி உதிர்தல் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் அளவுகளில் உண்டாகும் மாற்றங்களால் ஏற்படுகிறது. ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு உண்டாகிறது. இது முடி உதிர்தலை ஊக்குவிக்க கூடியவை.

​தைராய்டு ஹார்மோன்

samayam tamil Tamil News Spot

தைராய்டு ஹைர்ப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் முடி உதிர்தலை உண்டாக்கும். இது பெண்களில் அலோபீசியா அரேட்டா எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலையை ஏற்படுத்தும். அலோபீசியா அரேட்டா வட்ட வடிவ முடி உதிர்தலால் வகைப்படுத்தப்படுகிறது.

‘பி.சி.ஓ.எஸ் (பாலி சிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்) ஒரு ஆட்டோ இம்யூன் தைராய்டு நிலை பரவலான முடி உதிர்தலை உண்டாக்குகிறது. தைராய்டு பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள் அதிகமான முடி உதிர்தலை ஏற்படுத்தகூடும்.

​மெனோபாஸ் காலம்

samayam tamil Tamil News Spot

மெனோபாஸ் என்பது பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் ஆகும். இது பெண்களின் முடி வளர்ச்சியையும் சுழற்சியையும் பாதிக்கும். குறிப்பாக மாதவிடாய் நிறுத்தப்படுவதற்கு முன்பு ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா இருப்பதை கண்டறிந்தால் இந்த முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.

பாலியல் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஹார்மோன்களின் அதிகரிப்பு மாதவிடாய் நிறுத்தத்தின் போது முடி வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் மெனோபாஸ் கால அறிகுறி முதல் அவை நின்ற பிறகும் கூட முடி உதிர்தல் உண்டாகிறது.

​மன அழுத்த ஹார்மோன்கள்

samayam tamil Tamil News Spot

இது ஒருபெண்ணின் பிரசவம், கர்ப்பம், மாதவிடாய் நிற்கும் காலம் அல்லது வேறு காரணங்களுடன் தொடர்புடைய மன அழுத்தம் கார்டிசோலின் சுரப்புக்கு வழிவகுக்கும். இந்த அழுத்தமான ஹார்மோன்கள் மயிர்க்கால்களின் செல் சுழற்சியை பாதிக்கிறது. இதனால் முடி உதிர்வு அதிகரிக்கிறது.

முடி உதிர்தலுக்கு காரணமான பல்வேறு ஹார்மோன்கள் இவை தான். முடி வளர்ச்சி ஊக்குவிக்கவும். தலைமுடி வளர்க்கவும் ஹார்மோன் சமநிலையை சமன்படுத்துவது அல்லது தீவிரத்தை குறைப்பதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

​எப்படி தவிர்ப்பது

samayam tamil Tamil News Spot

இயற்கையாகவே ஹார்மோன் முடி உதிர்தலை கட்டுப்படுத்துவதற்கு உணவு முறை நிச்சயம் உதவும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், உணவு முறையை மாற்றுவது மிகவும் முக்கியம். சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவு எப்போதும் உடலிலும் மனதிலும் ஆரோக்கிய மாற்றத்தை உண்டு செய்கிறது.

அதிக சர்க்கரை, உப்பு நிறைந்த உணவுகள், டிரான்ஸ் கொழுப்புகள் (சாக்லேட், பர்கர், பீட்ஸா) போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது முற்றிலும் அவசியம். அதற்கு மாற்றாக கீரைகள், முட்டை கோஸ், முள்ளங்கி கீரைகள், பீட்ரூட், கேரட், ப்ரக்கோலி, தக்காளி, வெள்ளரி, டர்னிப் மற்றும் பூசணி போன்றவை சேர்க்கலாம்.

வெயில் : முகத்துக்கு ஐஸ் க்யூப் போட்டா இவ்ளோ பிரச்சனை தீரும், இப்படி யூஸ் பண்ணுங்க, ஆண்களும் தான்!

பழங்களில் ஆப்பிள் பீச், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், ஆப்ரிகாட், கத்தரிக்காய், பப்பாளி, அன்னாசிப்பழம், தர்பூசணி, மஸ்க்மெலான், வெண்ணெய் போன்றவை எடுக்கலாம்.

புரத வகைகளில் முட்டை, கானங்கெளுத்தி டுனா, சால்மன், வான்கோழி. மெலிந்த இறைச்சி, கோழி, விலங்குகளின் உறுப்பு இறைச்சி, சிறுநீரக பீன்ஸ், பயறு வகைகள், சோயா பீன் மற்றும் டோஃபு பால் பொருள்களில் பால், தயிர், மோர், சீஸ், விதைகள், கொட்டைகள் ஆளி விதைகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள், அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி போன்றவை சேர்க்கலாம்.

கொழுப்புகள் மற்றும் எண்ணெய் வகைகளில் ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், எண்ணெய், நெய் போன்ற ஆரோக்கியமான உணவை சேர்ப்பதன் மூலம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை சமன் செய்ய முடியும். முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *