Share on Social Media


​கருவுறுதலுக்கு முன் ஆரோக்கியமான எடை

கர்ப்பகாலத்தில் வழக்கமான உடற்பயிற்சி முக்கியம் என்று அறிவுறுத்த இதுவும் ஒரு காரணம். கருத்தரிக்க விரும்பும் பெண் கருவுறுதலை எதிர்நோக்கும் போதே உடல் எடையை பராமரிக்க வேண்டும். அதற்கேற்ப வாழ்க்கை முறைகளை அமைத்து கொள்ள வேண்டும்.

2018 ஆம் ஆண்டு இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் கர்ப்பகால நீரிழிவு நோய் குறித்த 10 வருட முடிவுகளை பார்த்து அதிக எடையுடன் இருப்பது ஆபத்துக்கான காரணியாக முடிவு செய்தார்கள்.

Postpartum Vaginal Dryness : தாய்ப்பால் கொடுக்கும் வரை பெண் உறுப்பு வறட்சியாகவே இருக்குமாம்? ஏன்? எப்படி தவிர்ப்பது?

மற்ற நம்பகமான ஆராய்ச்சி பிஎம்ஐ- 25 ஐ விட அதிகமாக இருப்பது பெண்ணுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்பதை இன்னும் உறுதிப்படுத்துகிறது. எனினும் உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஆபத்து குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். இந்த உணவு திட்டத்தில் ஜங்க் ஃபுட் தவிர்ப்பது, இனிப்புக்கு மாற்றாக பழம், மீன், டோஃபூ போன்ற மெலிந்த புரதத்தை உண்பது நல்லது. நிறைய காய்கறிகள், முழு தானியங்கள் சாப்பிடுவதன் மூலம் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க செய்யலாம். மேலும் பழச்சாறுகள் ( அரிதாக எடுக்கலாம். பழமாக சாப்பிடுவது பலன் அளிக்கும்) பால், எலுமிச்சை நீர் போன்றவை சேர்க்கலாம்.

​உடற்பயிற்சி செய்வது நல்லது

samayam tamil Tamil News Spot

கர்ப்பகாலத்துக்கு முன்னும் சரி, கர்ப்பகாலத்திலும் சரி உடற்பயிற்சி செய்வது கர்ப்பகால நீரிழிவு நோயை தடுக்க உதவும். கர்ப்பகாலத்துக்கு முன்பிருந்து கர்ப்பகாலம் முழுவதும் உடற்பயிற்சி செய்வது கர்ப்பகால நீரிழிவு நோயை தடுக்க உதவும். கணையம் உருவாக்கும் இன்சுலினுக்கு உடல் அதிக உணர்திறன் பெற உடற்பயிற்சி உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

எளிமையான நீண்ட கால வாழ்க்கை முறை மாற்றங்களை செய்தாலும் கர்ப்பம் தரிக்கும் முன்பே உடலை சுறுசுறுப்பாக செயல்பட தொடங்குவது நல்லது. குறிப்பாக உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம். கடினமாக இல்லாமல்

நடைப்பயிற்சி

சைக்கிள் ஓட்டுதல்

படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல்

தோட்டங்களில் நேரம் செலவிடுதல்

சுறுசுறுப்பாக இருப்பது

யோகா செய்வது

இயன்றால் நீச்சல் பழகுவது போன்றவை கர்ப்பகால நீரிழிவு நோயை தடுக்க உதவும். வாரத்தில் 5 நாட்கள் வரை சுமார் 30 நிமிடங்களில் மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சியை செய்ய முயற்சிப்பது நல்லது.

உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகு உடற்பயிற்சி நிபுணர் வழியாக செய்யலாம்.

​கர்ப்பகாலத்தில் உணவு

samayam tamil Tamil News Spot

கர்ப்பகாலத்தில் நன்றாக சாப்பிடுங்கள். முழு தானியங்கள் மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை சாப்பிடுவது கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை குறைக்க உதவும். ஏனெனில் கர்ப்பகாலத்தில் காலை சுகவீனம், பசி மற்றும் உணவு வெறுப்பு போன்றவை சத்தான உணவு சாப்பிடுவதை சவாலாக மாற்றும்.

ஒவ்வொரு மூன்று மாதத்திலும் கர்ப்பகால நீரிழிவு நோயை தடுக்க ஆரோக்கியமான உணவு தேர்வு செய்ய வேண்டும்.

பீன்ஸ், மீன், டோஃபு மற்றும் வெள்ளைக்கோழி போன்ற ஒல்லியான புரதங்கள், கொட்டைகள், ஆலிவ் எண்ணெய், தேங்காயெண்ணெய் மற்றும் பிற தாவர அடிப்படையிலான கொழுப்பு மூலங்களிலிருந்து பெறப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள், பழுப்பு அரிசி, பாஸ்தா, ஓட்ஸ் மற்றும் ரொட்டி போன்ற முழு தானியங்கள், தயிர் குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள் மாவுச்சத்து இல்லாத காய்கறிகள், பழங்கள் எடுக்கலாம்.

தவிர்ப்பது நல்லது

பதப்படுத்தப்பட்ட உணவுகள், காஃபி பானங்கள், கடையில் வாங்கும் பானங்கள், ஆற்றல் பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் மற்றும் சோடாக்கள் உட்பட சர்க்கரை பானங்கள் தவிர்க்க வேண்டும்.

​வழக்கமான ஆலோசனை திட்டமிடுங்கள்

samayam tamil Tamil News Spot

கர்ப்பத்தை உறுதி செய்ததும் மகப்பேறு மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் வழக்கமான பரிசோதனைகள், சீரான இடைவெளியில் வேண்டிய ஆலோசனைகள், அறிகுறிகள் போன்றவற்றை மருத்துவர் கேட்பார்.

இடுப்பு பரிசோதனை, வளரும் கருவை பார்க்க அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். அதோடு ஆரம்ப கால நீரிழிவு அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் அதற்கான பரிசோதனையும் அதை தடுக்கும் வழிகளையும் பரிந்துரைக்கலாம்.

பொதுவாக கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில் கர்ப்பிணி பெண்ணுக்கு கர்ப்பகால நீரிழிவு பரிசோதனை செய்யப்படும். முடிவில் நீரிழிவு உறுதியானால் அதன் சிக்கல்களை தடுக்க மருத்துவர் ஆலோசனை செய்வார்.

​நீரிழிவு ஆபத்து யாருக்கு

samayam tamil Tamil News Spot

கர்ப்பிணி பெண்கள் நீரிழிவு நோய் வராமல் தடுக்க பார்த்துகொள்ள வேண்டும் என்று சொல்ல காரணமே அதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் தான்.

அதிக எடை அல்லது உடல் பருமன்

முந்தைய கர்ப்பத்தில் நீரிழிவு இருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் நீரிழிவு வருவது

டைப் 2 நீரிழிவு வரலாறு கொண்ட குடும்பத்தினருக்கு இந்த பாதிப்பு வரலாம்

​நீரிழிவு அறிகுறிகள்

samayam tamil Tamil News Spot

தீவிர தாகம் ஆரம்பகால நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். கர்ப்பகால நீரிழிவு கொண்டிருக்கும் பெண்கள் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை அனுபவிப்பதில்லை. கர்ப்பகாலத்தில் வழக்கமான மாற்றங்கள் காரணமாக உண்டாகும் அறிகுறிகளிலிருந்து வேறுபடுத்துவது கடினமாக இருக்கலாம்.

IVF Success Rates: செயற்கை முறை கருத்தரிப்பு எந்த வயதினருக்கு பலன் கொடுக்கும்?

தீவிர தாகம், சோர்வு, பெரிய அளவு சிறுநீர் கழித்தல் சிறுநீரில் சர்க்கரை அளவு அதிகரிப்பது, பெண் உறுப்பு அல்லது சரும தொற்றுகள் மங்கலான பார்வை, குமட்டல் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. இவையெல்லாம் எளிமையான குறிப்புகள் என்றாலும் சரியான முறையில் கடைப்பிடித்தால் நீரிழிவு வருவதை தடுக்கலாம். அல்லது தீவிரமாகாமல் தடுக்கலாம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *