Share on Social Media

ஹைலைட்ஸ்:

  • கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாகி இருக்கிறது.
  • கொரோனா தொற்று தீவிரமடையும் போது ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே போகிறது.
  • ஆக்சிஜன் அளவை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்ய வீட்டிலேயே என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

நந்திகா கோயல் மற்றும் அவரது பெற்றோர்கள் (60 வயது) கொரோனா காரணமாக ஏப்ரல் மாதத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் அறிகுறிகள் எல்லாம் கொரோனாவிற்கானதாக துவங்கி இருந்தாலும் அவர்கள் இதில் இருந்து மீண்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர். வீட்டிலேயே அவர் தனது ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க என்ன செய்தார் என்பதை நம்மிடம் விளக்குகிறார்.

எனது தந்தை கொரோனா காரணமாக காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறியை அடைந்தார். பிறகு அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. அவர் உடனே என்னிடமிருந்தும் எனது தாயிடம் இருந்தும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள் எனது அம்மாவுக்கும் கொரோனா அறிகுறிகள் தோன்றின. அம்மாவுக்கு காய்ச்சலுடன் லேசான தொண்டை வலியும் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலை காரணமாக நான் உடனடியாக மருத்துவரை அணுகினேன். அவரிடம் ஆன்லைனில் கலந்து ஆலோசித்தேன். எங்களுக்கான சோதனைகளை நான் முன்பதிவு செய்தேன்.

எனது பெற்றோருக்கு 65 வயதுக்கு மேல் இருப்பதால் அவர்களுக்கு தேவையான மருந்துகளை அளிக்க துவங்கினேன். அதற்குள் நானும் காய்ச்சலுக்கு உள்ளானேன். எனக்கு மூட்டு வலியும் ஏற்பட்டது.

விரைவில் எங்களது அறிகுறிகள் மோசமடைய துவங்கின. என் அம்மாவுக்கும் எனக்கும் செய்த பரிசோதனையின் முடிவுகள் வருவதற்கு முன்பே நாங்கள் மோசமான அறிகுறிகளை பெற்றிருந்ததை நாங்கள் அறிந்தோம். எங்களுக்கு மோசமான அளவில் காய்ச்சல் இருந்தது. அது 100 முதல் 101 வரை இருந்தது. மேலும் இந்த காய்ச்சல் 8 முதல் 9 நாட்கள் வரை நீடித்தது.

எனது தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. அவருக்கு காய்ச்சல் குணமாகி ஆறாம் நாள் முழுதாக குணமானார். இந்த சமயத்தில் அவருக்கு லேசான சளி மற்றும் இருமல் மட்டுமே இருந்தது.

ஆனால் எனக்கு பல விதமான அறிகுறிகள் அப்போது இருந்தன. அவை என்னை முற்றிலும் பலவீனமாகவும் சோர்வாகவும் ஆக்கின. இப்படி ஒரு உடல்நிலை எனக்கு ஏற்படும் என நான் கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை. இதுவரை இப்படியொரு அறிகுறிகளை நான் கண்டதில்லை. இரவுகளில் நான் மிகவும் அமைதியற்று இருந்தேன். அப்போதெல்லாம் எனக்கு தூக்கமே வரவில்லை.

எனது ருசி பார்க்கும் இயல்பும் வாசனை பார்க்கும் உணர்வும் நீங்கவில்லை என்றாலும் நான் உண்ட உணவுகளின் சுவை இப்போது சற்று குறைவாக தெரிந்தது. அவை முன்பு போல சுவைக்கவில்லை. எனக்கு 30 வயதுதான் ஆகிறது என்பதாலும் நான் ஆரோக்கியமாக இருப்பதாலும் இந்த வலிகளை நிர்வகிப்பதும் கொரோனாவை எதிர்த்து போராடுவதும் எனது பெற்றோரை விடவும் எனக்கு எளிதாக இருக்கும் என நான் நினைத்தேன்.

ஆனால் இது ஒரு முட்டாள்தனமான யோசனை. ஏனெனில் எனக்கு ஏற்பட்ட உடல் பாதிப்பு என்னை முழுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் இப்போது மற்ற வைரஸில் இருந்து கொரோனா தொற்று எவ்வளவு வித்தியாசமானது என்பது தெரிந்திருக்கும். எனவே தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவில் இருந்து பாதுக்காப்பாக இருந்துக் கொள்ளுங்கள். இதனால் ஏற்படுகின்ற தசை வலி சாதரண வலி அல்ல. அது மிகவும் தீவிரமாக இருக்கிறது.

நான் மிகவும் பலவீனமாக இருந்தேன். நான் ஐந்து முதல் 7 நிமிடங்கள் எனது அறையில் தினமும் நடக்க முயல்வேன். ஆனால் அதுவே எனக்கு மிகவும் கடுமையான வலியை ஏற்படுத்தியது. இதனால் அடிக்கடி நான் கீழே விழுந்தேன்.

எனது ஆக்ஸிஜன் நிலையும் கவலைக்கிடமாக இருந்தது. முக்கியமாக மாலை நேரங்களில் எனது ஆக்ஸிஜன் அளவானது 90 இல் இருந்து 92 வரை குறைந்தது. அப்போதெல்லாம் நான் 6 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொண்டேன்.

அதிர்ஷ்டவசமாக நாங்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டோம். எங்கள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு நாங்கள் இப்போது நலமாக இருக்கிறோம். ஆனாலும் சில சமயங்களில் எனக்கு திடீரென தலைவலி அல்லது மூட்டு வலி ஏற்படுகிறது.

எனது கொரோனா அனுபவம் காரணமாக நான் உங்களிடம் சில விஷயங்களை பகிர்ந்துக்கொள்ள நினைக்கிறேன்.

உங்கள் வீட்டில் தெர்மோமீட்டர், ஆக்சி மீட்டர், இரத்த அழுத்தம் பார்க்கும் இயந்திரம் ஆகியவை இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்

ஆபத்து உதவிக்கான அவசர எண்கள், அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவரின் விவரங்கள் ஆகியவற்றை வைத்து கொள்ளுங்கள். இந்த விவரங்கள் அனைத்தையும் உங்கள் குழந்தைகளிடம் சொல்லி வையுங்கள்.

கொரோனா தனிமைப்படுத்தலின்போது உங்களுக்காக ஒரு திட்டத்தை வைத்துக்கொள்ளுங்கள். யாருடைய ஆரோக்கியமாவது மிகவும் மோசமடைந்துவிட்டால் நாம் பாதிப்படைந்து நமது அன்பிர்குரியவர்களையும் பயமுறுத்த கூடாது. இது அவர்களின் சிகிச்சையில் பயத்தை ஏற்படுத்தும்.

கொரோனா தொற்று உள்ள நபர் தனிமையில் இருக்கிறார். இந்த நிலையில் அவருடைய மனநிலை மோசமாக இருக்கலாம். இந்த தீவிரமான சூழ்நிலையை சமாளிக்க அவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே உங்கள் அன்பிற்குரியவர்கள் கொரோனா தொற்றில் இருக்கும்போது அவர்களை அணுகவும். அவர்களிடம் ஆதரவாக பேசவும். நீங்கள் அவர்களுக்கு துணையாக இருப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். மருத்துவமனையில் உள்ள நோயாளி மாறுப்பட்ட மன நிலையில் இருப்பார். அவரது மனநிலையை புரிந்து நடப்பது மிக முக்கியமாகும்.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நமக்கு அறிகுறிகளில் எப்படியான வித்தியாசம் இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். எனக்கு காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி மற்றும் இருமல் இருந்தது. எனது அம்மாவுக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் அவர்களது உடல் பலவீனமாக இருந்தது. அவரது கண்கள் சிவந்து இருந்தன.

எனது அப்பாவுக்கு காய்ச்சல், சளி, இருமல் மட்டுமே இருந்தது. எனவே கொரோனா அறிகுறியானது ஆளுக்கு ஆள் மாறுப்படுகிறது. எனவே உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்.

உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ள துவங்கவும். பாதுக்காப்பாக இருங்கள். எப்போதும் முக மூடி அணியவும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *