Share on Social Media


இந்த காலத்தில் தலைமுடி சார்ந்த பிரச்சினைகள் அதிகம் வருகின்றன. குறிப்பாக, தலையில் பொடுகு உருவாகுதல் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஒரு ஆய்வின்படி உலக அளவில் பாதி பேருக்கு இந்த பொடுகு பிரச்சனை பாலினம், வயது, நாடு, இனம் என எந்த பாகுபாடுமின்றி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

​ஏன் இந்த பொடுகு உருவாகிறது

நமது தலையில் ஏற்படக்கூடிய பாக்டீரியா போன்றவற்றின் தாக்குதலினால், நீர்ச்சத்து குறைவாக இருப்பதினால், இறந்த தோல் செல்கள் இருப்பதால், இந்த பொடுகு பிரச்சனை தலையில் உருவாகிறது

இவை இயற்கையாகவே நம் தலையில் இருக்கக் கூடியது தான் என்றாலும் அதிகமாகும் பொழுது நிறைய பிரச்சனைகள் வருகின்றன. அவை தலையில் எரிச்சலை அதிகப்படுத்துவது, சொரிவது போன்ற பல்வேறு இன்னலுக்கு உருவாக்குகின்றன. இந்த கட்டுரையில் பொடுகு நீக்குவதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம்.

​தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது

samayam tamil Tamil News Spot

நாம் இயல்பாகவே தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து தலையில் பயன்படுத்த தான் செய்கிறோம். அதனை தினமும் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமானதாகும். பொடுகை நீக்குவதற்கு இயற்கையான மருத்துவ பொருள் தேங்காய் எண்ணெய் ஆகும். உங்களுடைய தலையில் நீர்ச்சத்து அதிகரிப்பதோடு வறண்ட பகுதி உருவாகாமல் பாதுகாத்துக் கொள்கிறது. இதனால் பொடுகு பிரச்சனை வராமல் தடுக்கப்படுகிறது. பொடுகு உருவாவதற்கு முக்கிய காரணமான நோய்களை வராமல் தடுக்க தேங்காய் எண்ணெய் மிக முக்கியமான மருத்துவ முறையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் சருமத்தில் என்னென்ன விஷயங்களைச் செய்யக் கூடாது…

​கற்றாழை பயன்படுத்துதல்

samayam tamil Tamil News Spot

தற்காலத்தில் ஆலோவேரா கொண்டு எண்ணெய்கள் ஷாம்புகள் வரத் துவங்கிவிட்டன. ஏனெனில் அவை நம்முடைய தலையில் நிறைய ஆரோக்கியத்தை தருகின்றன. அவை தலைக்கு குளிர்ச்சியை மட்டும் உருவாக்குவதில்லை மேலும், தலையில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு அவை பணிபுரிகின்றன. சந்தையில் கிடைக்கக்கூடிய கற்றாழை ஷாம்புகள், தைலங்கள் உண்மையானது தானா என பரிசோதித்து கொள்ளவும். இல்லை என்றால் நீங்கள் நேரடியாகவே கற்றாழை செடியிலிருந்து எடுத்து உங்கள் தலையில் தேய்ப்பது இன்னும் நல்ல பலனைக் கொடுக்கக் கூடியது. பின் 20 முதல் 30 நிமிடங்கள் காத்திருந்து பின் நன்றாக தலைக்கு தேய்த்து குளிக்கலாம். ஏதேனும் ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு தேய்த்து குளிப்பது இன்னும் நல்லது.

​பேக்கிங் சோடா

samayam tamil Tamil News Spot

பேக்கிங் சோடா கூட பொடுகை நீக்குவதற்கு பயன்படும் என்று நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஆனால் அதுதான் உண்மை. இதனை உங்கள் தலையில் தேய்ப்பதன் மூலம் தலையில் இருக்கக்கூடிய இறந்த தோல் செல்களை நீக்குவதற்கு இவை பயன்படுகின்றன. இவற்றினை தொடர்ந்து செய்து வந்தால் தலையில் பொடுகு பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. ஈரத் தலையில் பேக்கிங் சோடாவினை தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் காத்திருந்து ஏதேனும் ஷாம்பு பயன்படுத்தி நன்றாக தலைக்கு குளிக்க வேண்டும். நல்ல ரிசல்டினை நீங்கள் உணர்வீர்கள்.

அரிசியை சமைக்கும்முன் ஏன் ஊறவைக்க வேண்டும்… ஊறவைக்காமல் சமைத்தால் ஏற்படும் ஆபத்துகள் என்ன…

​டீ ட்ரீ ஆயில்

samayam tamil Tamil News Spot

உங்களுடைய தோலுக்கும் தலைக்கும் தேயிலை செடி எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியது. தலையில் இருக்கக்கூடிய பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் நோய் தொற்றுகளை அழிப்பதற்கு சரியான தேர்வு இதுதான். உங்கள் ஷாம்பூவுடன் ஒரு துளி சேர்த்து பின் தலைக்கு தேய்த்து நன்றாக குளித்து வரவும். பின் சொல்லுங்கள் எந்த அளவிற்கு பயன் இருக்கிறது என்று!

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் 10 விஷயங்கள் இதோ…

​பூண்டு

samayam tamil Tamil News Spot

இது என்னடா ஆச்சரியமாக இருக்கிறது!. பூண்டு கூடவா பொடுகு பிரச்சனைக்கு பலனளிக்கும் என்று நீங்கள் கேட்கலாம்! பூண்டு எதற்கு தான் பல வலிக்காது? அத்தனை மருத்துவ சத்துக்கள் கொண்ட மிகச் சிறந்த இயற்கை பொருள் பூண்டு ஆகும். பொடுகு உருவாவதற்கு காரணமான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை அழித்து மீண்டும் வராமல் பாதுகாப்பதில் பூண்டு மிகச்சிறந்த பங்கு வகிக்கிறது. இரண்டு துண்டுகளை எடுத்துக் கொண்டு அதனை தண்ணீருடன் நன்றாக கலந்து பின் உங்கள் தலைக்கு தேய்த்து குளித்து வரலாம். உங்களுக்கு அதன் மணம் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதனுடன் தேன் மற்றும் சிறிது கொஞ்சமாக சேர்த்து பயன்படுத்தலாம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *