Share on Social Media

​முடி வளர்ச்சிக்கு ஏன் ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் என்பது புதிய மருத்துவ முறை அல்ல. இது காலங்காலமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. இதில் பல்வேறு மூலிகைகள் மருத்துவ சிகிச்சையிலும், அழகு சார்ந்த பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயுர்வேதம் தோல் பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, முடி பிரச்சனைகளுக்கும் அதிக பயன் தரக்கூடும்.

மூலிகை ஹெர்பல் பேக். முகம் அழகா இருக்கணும்னா இதை பயன்படுத்துங்க!

தலைமுடி பிரச்சனையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கூந்தலை கருமையாகவும் அடர்த்தியானதாகவும் மாற்றும். அப்படி உங்கள் கூந்தலுக்கு உதவக்கூடிய ஆயுர்வேத மூலிகைகள் என்னென்னெ என்பதை பார்க்கலாம். இது முடி வளர்ச்சியை இரண்டு மடங்காக மாற்றவும் செய்யும். அப்படியான மூலிகைகள் குறித்து பார்க்கலாம்.

ஜடாமாசி

samayam tamil Tamil News Spot

ஜடாமாசி என்பது பொடுகு தன்மையை குறைக்க செய்யும். முடி உதிர்வதை தடுக்க உதவும். இது முடி வளர்ச்சியை வேகமாக ஊக்குவிக்கும். முடி வறட்சியாக இருந்தால் அதை மென்மையாக்கி பொலிவை தரும்.

ஜடாமாசி என்பது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்ட சிறிய தாவரம். நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் ஜடாமாசி எண்ணெயை வாங்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து இரண்டு விரல்களால் தொட்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.

தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் கூந்தலுக்கு நேரம் ஒதுக்கி மசாஜ் செய்து வந்தால் தலைமுடி வேகமாக வளரும்.

​திரிபலா

samayam tamil Tamil News Spot

திரிபலா பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு காளான் பண்புகள் கொண்டுள்ளது. இது பொடுகு தன்மையை குறைத்து முடி வளர்ச்சியை துரிதப்படுத்தும். திரிபலா பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வீட்டில் தயாரிக்கும் முறைகுறித்தும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

திரிபலா பொடியை தேங்காயெண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் தடவலாம். இந்த திரிபலாவை வெறும் வயிற்றில் காலை எடுப்பதன் மூலம் செரிமான மண்டலம் சீராகும். உடல் நச்சுக்கள் வெளியேறும்.

​நெல்லிக்காய்

samayam tamil Tamil News Spot

நெல்லிக்காய் முடி டானிக் என்று சொல்லலாம். நெல்லிக்காய் எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து வைக்கவும். உச்சந்தலையில் இதை மென்மையாக தடவி 30 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

வாரம் ஒருமுறை இந்த எண்ணெயை கொண்டு கூந்தலுக்கு மசாஜ் செய்து விடவும். பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி எடுக்கவும். இது மயிர்க்கால்களை வளர்க்கும். பொடுகு தன்மையை குறைக்கும். முடியின் பி.ஹெச் அளவை பராமரிக்கும். முடி வளர்ச்சியை வேகமாக ஊக்குவிக்கும்.

வெந்தயம்

samayam tamil Tamil News Spot

பிரபலமான மசாலா பொருள் வெந்தய்ம். ஆயுர்வேதத்தில் அதிகமாகவே இவை பயன்படுத்தப்படுகிறது. நம் உணவில் இது அத்கம் இடம்பிடித்திருந்தாலும் ஊட்டச்சத்துமிக்க இது கூந்தல் வளர்ச்சியிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

இது கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் ஏ, வைட்டமின்கள் சி, நிகோடினிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

வெந்தய விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் வெந்தய எண்ணெய் வாங்கி இலேசாக சூடு செய்து கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தலின் வளர்ச்சியில் வித்தியாசத்தை பார்க்கலாம். வாரம் இரண்டு முறை கூட இந்த மசாஜ் செய்யலாம்.

​பிரிங்கிராஜ் இலைகள்

samayam tamil Tamil News Spot

மருத்துவ மூலிகை. இது ஈரமான பகுதிகளில் வளரக்கூடும். முடியின் மயிர்க்கால்களை வளர்க்கும். அதன் வளர்ச்சியை ஊக்குவிக்க செய்யும். பிருங்கிராஜ் எண்ணெய் கூந்தலுக்கு செய்யும் நன்மைகள் குறித்து பார்த்திருக்கிறோம். இதை வீட்டில் தயாரிக்கும் முறை குறித்தும் கொடுத்திருக்கிறோம்.

தினமும் தலைக்கு குளிச்சா கூந்தல் நீளமா வளருமா ? அவசியம் தெரிஞ்சுக்கங்க!

பிரிங்கிராஜ் எண்ணெய் கடைகளில் வாங்கி கூந்தலுக்கு பயன்படுத்தலாம். பிருங்கிராஜ் இலைகள் கிடைத்தால் அதை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கண்ணாடி பாட்டிலில் வைத்து வாரம் ஒரு முறை இதை தயிருடன் கலந்து குழைத்து பேஸ்ட் ஆக்கி கூந்தலுக்கு மசாஜ் செய்து விடவும். 3 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.

மேற்கண்ட பொருள்கள் எல்லாமே ஆயுர்வேத மூலிகையில் முக்கியமானவை. இவை கூந்தலின் ஒட்டுமொத்த பிரச்சனையையும் தீர்க்கும். இதை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் கூந்தலின் வளர்ச்சி இரண்டு மடங்காக இருக்கும் என்பதை உணர்வீர்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *