Share on Social Mediaஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறு வேறான முடி வகைகள் என்றில்லை. ஆண்களும் பெண்களை போன்று தங்கள் முடியை நிர்வகித்து வந்தால் முடி உதிராமல் பாதுகாக்கலாம். உலர்ந்த உச்சந்தலை முடி உதிர்தல், பொதுவான கூந்தல் பிரச்சனைகளை தவிர்க்க ஆண்கள் முடி பராமரிப்பு செய்ய வேண்டிய முக்கியமான குறிப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

​உச்சந்தலை ஆரோக்கியம்

முடி பராமரிப்பில் முக்கியமானது உச்சந்தலை ஆரோக்கியம். சுத்தமான உச்சந்தலை இல்லையெனில் நுண்ணுயிர் சமநிலையை சீர்குலைக்கும். இது நுண்ணுயிரிகளின் அதிகரிப்பு செய்து வீக்கத்தை உண்டாக்கும்.

சருமத்துல அழுக்கு சேர கூடாதே, இந்த விஷயத்துல மட்டும் கவனம் செலுத்துங்க, ஆண்களுக்கும் பொருந்தும்!

இது நுண் துளைகளை எதிர்மறையாக பாதிக்கிறது. அதற்காக அதிகமாக தேய்த்து உச்சந்தலையை சுத்தம் செய்ய வேண்டாம். ஏனெனில் இது உச்சந்தலை எண்ணெயை அகற்றிவிடலாம்.

​சரியான பொருளை பயன்படுத்துங்கள்

samayam tamil Tamil News Spot

நீங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தும் ஷாம்பு, கண்டிஷனர், ஸ்டைலிங் கருவி அனைத்தையும் சரியானதை தேர்ந்தெடுக்கவும். முடியின் தன்மை சுருளாக உள்ளதா, அலை அலையாக உள்ளதா, மெல்லிய தன்மை கொண்டதா, உலர்ந்த தன்மை கொண்டதா என்பதை அறியுங்கள். தலைமுடியை கவனிக்க அதிக நேரம் இல்லையென்றாலும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். முடியை சரியான காலத்தி வெட்டி விட்டு சீர்படுத்துவது நல்லது.

​கருப்பு முடி

samayam tamil Tamil News Spot

உங்கள் முடி கருப்பாக இருந்தால் அதற்கு தனிபராமரிப்பு செலுத்துங்கள் நரை வராது. ஷாம்புவை வாரத்தில் இரண்டு அல்லது ஒரு முறை பயன்படுத்தினாலும் போதும். அதோடு கண்டிஷனர் தவிர்க்க வேண்டாம். உங்கள் முடியின் தன்மைக்கேற்ப ஷாம்பு வகைகளை பயன்படுத்துங்கள்.

ஷியாபட்டர், அவகேடோஒ எண்ணெய் போன்ற ஈரப்பதமூட்டும் பண்புகள் உங்கள் கூந்தலை பளபளப்பாக வைத்திருக்கும். முடியை ஆரோக்கியமாக அழகாக காட்டும்.

​முடியை சற்று நீளமாக வைத்திருந்தால்

samayam tamil Tamil News Spot

முடியை சற்று நீளமாக வைத்திருந்தால் நீங்கள் அடிக்கடி ட்ரிம் பண்ண வேண்டிதில்லை. ஆனால் ஒவ்வொரு 12 வாரங்களுக்கு ஒரு முறை ட்ரிம் செய்வது அவசியம். இது பிளவு முடியை அகற்றும். இதை சுயமாக செய்யாமல் முடி நிபுணரிடம் சென்று செய்து கொள்வது சரியான அளவை வெளியேற்றுவதை உறுதி செய்யும்.

நீளமான முடிக்கு ஸ்டைலிங் உறுதியாக இருக்கும் தயாரிப்பை தவிர்க்கவும். மென்மையான ஹோல்ட் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். மென்மையாக இலேசான துள்ளலோடு அலை அலையான அழகு தோற்றத்தை பெறுவதற்கு ஜெல் பயன்படுத்தலாம்.

முடிக்கு அடிக்கடி ட்ரையர் கர்லர் போன்ற சூடான ஸ்டைலிங் கருவிகளை தவிர்ப்பது நல்லது. இயற்கையாக முடியை உலரவிடுங்கள்.

​. நரைமுடி கொண்டிருந்தால்

samayam tamil Tamil News Spot

நரைமுடி இயற்கையாக முதுமை பகுதியில் வருகிறது. பெரும்பாலான மக்கள் 50 வயதுக்கு முன்னர் நரைமுடி பெறுகிறார்கள். கூந்தலில் மெலனின் தன்மை குறைவதே இதற்கு காரணம். தோல் முடி, கண் நிறத்தை கருமையாக மாற்றும் இந்த நிறமி முடியை உலர்ந்த மற்றும் உடையக்கூடிய அமைப்பாக மாற்றும்.

ஆண்கள் : ஆல் டைம் முகம் ஃப்ரெஷ்ஷாவே இருக்க இந்த 5 விஷயங்கள் மட்டும் செய்தாலே போதுமாம்!

முடிக்கு கண்டிஷனர் மற்றும் ஊட்டமளிக்கும் சிகிச்சை மூலம் இவை விரைவாகாமல் தாமதப்படுத்தலாம். நீங்கள் கருப்பு நிறத்தை எதிர்பார்க்காமல் சாம்பல் நிற கலவையை ஹேர் டையாக தேர்வு செய்யலாம். இது இயற்கையாக தொன்றும்.

நல்ல பாதுகாப்பான கலரிங் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம். வீட்டிலேயே செய்து கொள்வதும் பாதுகாப்பானது.

​முடி சுருளாக இருந்தால்

samayam tamil Tamil News Spot

சுருள் முடி இருந்தால் அதை நிர்வகிப்பது சற்று சிரமமான காரியம். உலர் முடி முடி உடைதல் ஆகியவற்றை சமாளிக்க வேண்டும்.

இயற்கையான அமைப்பு மற்றும் ஈரப்பதம் போன்ற வெளிப்புற காரணிகளால் வரக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாக முடி ஃப்ரீஸ் ஆகவும் வாய்ப்புண்டு.

சுருள் முடி அமைப்பை மேம்படுத்தும் தயாரிப்புகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். சுருட்டைகளில் நீரேற்றம் இருக்க கண்டிஷனர் அவசியம். சுருட்டை முடிக்கு எண்ணெய் பயன்பாடு செய்யும் போது அதன் முனைகளை அடைவது கடினம் என்பதால் கூடுதல் பராமரிப்பு தேவை.

​முடிக்கு நீரேற்றம் செய்வது அவசியம்

samayam tamil Tamil News Spot

முடியை ஈரப்பதமாக்கும் குறிப்புகள் மிகவும் முக்கியம், உங்கள் கூந்தல் எந்த வகையாக இருந்தாலும் அனைத்து முடி வகைகளுக்கும் எதிரான முதல் பாதுகாப்பு முடியை அலசி எடுக்கும் முறை தான்.

ஊட்டச்சத்து நிறைந்த ஷாம்பு செய்தாலும் அவை முடியை வறட்சியாக்கி உலர்த்த செய்யலாம். அதற்கு முடியை அலசிய பிறகு மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். கண்டிஷனருக்கு பதிலாக ஆழமான கண்டிஷனிங் கூந்தலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதற்கு உணவுகளும் உதவும்.

​வறட்​சியான முடி

samayam tamil Tamil News Spot

உச்சந்தலை வறட்சியை கொண்டிருந்தால் அரிக்கும் தோலழற்சி தீவிரமாகலாம். போதுமான தண்ணீர் குடிக்காததும் ஒரு காரணம்.

வலுவான ஆண்டிசெப்டிக் காளான் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ள டீ ட்ரீ ஆயில் பயன்படுத்தலாம். வறட்சி நீங்கும் வரை இதை பயன்படுத்தலாம். இயற்கை முறையில் தேயிலை எண்ணெய், கற்றாழை போன்ற இயற்கை பொருள்களை பயன்படுத்தி வறட்சியை போக்கலாம்.

​எண்ணெய்பசையுள்ள முடி

samayam tamil Tamil News Spot

எண்ணெய் கூந்தல் உச்சந்தலை அதிக எண்ணெய் உற்பத்தி செய்வதன் மூலம் உண்டாகலாம். தலை முடியை சுத்தம் செய்வது, தீவிர உடற்பயிற்சி சுகாதார பழக்கம் போன்றவற்றால் இவை உண்டாகலாம். அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த புதினா ஷாம்பு பயன்படுத்தலாம். இது உச்சந்தலையை உலர வைக்க செய்கிறது.

​முடி உதிர்தல் பிரச்சனை

samayam tamil Tamil News Spot

முடி உதிர்தல் பிரச்சனை தீவிரமாகும் போது அது வழுக்கையை உண்டாக்குகிறது. ஆண்ட்ரோஜெனடிக் அலோபீசியா என்று அழைக்கப்படுகிறது. இது 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பாதிக்கிறது.

ஆண்களது முகத்தில் பெரும்பாலும் எண்ணெய் வடியுமே, அதை சரி செய்ய வீட்டிலேயே என்ன செய்யணும்?

அதனால் முடி உதிர்தல் இருக்கும் போது சரியான சிகிச்சை முறை, இயற்கை பராமரிப்பு, உணவு முறை, வாழ்க்கை முறை போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் ஓரளவு முன்கூட்டிய வழுக்கையை தடுக்க முடியும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *