Share on Social Mediaஅந்த காலத்தில் 40 வயதில் இளநரை வந்தாலே என்ன இது இவ்வளவு சீக்கிரம் இளநரை என்று நினைப்பார்கள். ஏனெனில் அப்போது 55 அல்லது 60 வயதில் தான் நரைமுடியே உருவாகும். ஆனால் தற்போது 10 வயது குழந்தைகளுக்கு கூட ஆண், பெண் அனைவருக்கும் இளநரை பார்க்க முடிகிறது. கவலைத்தரக்கூடிய இது எதனால் உண்டாகிறது இதற்கான தீர்வுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

​இளநரை பிரச்சனை

இளநரை பிரச்சனை அதிகரித்து வருகிறது. முடியின் நிறத்துக்கு காரணமான மெலனின் தயாரிப்பு குறைவதால் தான் இந்த நிலை உண்டாகிறது என்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. பல ஆண்டு காலம் இத்துறையில் அனுபவிக்க இவர் இளநரையை எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்பதை விளக்குகிறார்.

ஏன் முடியின் நிறம் குறைகிறது?

நமது உணவு முறையில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் இளநரை உண்டாகலாம். குறிப்பாக வைட்டமின் பி ஜிங்க், காப்பர் போன்ற சத்து குறைபாடு முடியின் நிறத்தை குறைக்கலாம்.

மரபு வழியாக பெற்றோர்களுக்கு இளநரை விரைவில் வந்திருந்தாலும் பிள்ளைகளுக்கும் வேகமாக வரலாம். குறிப்பாக பெற்றோர்கள் நடுத்தர வயதில் இளநரை பிரச்சனை எதிர்கொண்டால் குழந்தைகள் இளவயதில் இதை எதிர்கொள்வார்கள்.

சிலர் புகைப்பழக்கம் கொண்டிருந்தால் அவர்களுக்கு முன்கூட்டிய இளநரைக்கு தொடர்பில் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

warts removing tips : மருக்கள் யாருக்கு அதிகமா வரும்? தொற்று நோயா? எப்படி, எப்போது நீக்குவது? நிபுணர் சொல்வது என்ன?

மன அழுத்தம் ஒவ்வொருவரும் அவ்வபோது மன அழுத்தத்தை சமாளிக்கிறார்கள். நாள்பட்ட மன அழுத்தம் தூக்க பிரச்சனை, கவலை , உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட நோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது, எப்போதும் பதட்டம் போன்றவையும் கூட இளநரைக்கு காரணமாகிறது.

அதிகமாக வெயிலில் செல்லும் போது முடிக்கு பாதிப்பு உண்டாகிறது. இது முடியின் நிறங்களை வெளுக்க செய்கிறது.

மேற்கண்ட காரணங்களில் ஒன்று உங்கள் இளநரைக்கு காரணமாக இருந்தால் நீங்கள் அதை தவிர்க்க முயற்சியுங்கள். பலன் கிடைக்கும்.

​வெள்ளை முடி சந்தோஷமா? துக்கமா?

samayam tamil Tamil News Spot

வெகு அரிதாக வெகு சிலர் மட்டுமே வெள்ளை முடியை பார்த்து இப்போது தான் மெச்சூரியிட்டியாக இருக்கிறோம் என்று நினைக்கலாம். ஆனால் பெரும்பாலும் வெள்ளை முடி ஒன்றை தலையில் பார்த்தாலும் கவலையும் அதிர்ச்சியும் தான் அதிகமாக எதிர்கொள்கிறார்கள்.

இவ்வளவு சீக்கிரம் வயதான தோற்றத்தை அடைந்துவிட்டோமா என்னும் மன உளைச்சல் வரை உண்டாக்கும். பார்க்கும் மற்றவர்களும் ஏன் இவ்வளவு சீக்கிரம் வெள்ளை முடி என்று கேட்கும் போது இன்னும் கவலை அதிகரிக்கவே செய்யும்.

நிபுணர்கள் பொறுத்தவரை முன்பெல்லாம் வெள்ளை முடி என்பது அதிர்ச்சியாக இருந்தது. இப்போது அடுத்தது எப்படி சரி செய்வது என்பதையே எல்லாரும் விரும்புவதாக கூறுகிறார்கள். இந்த வெள்ளை முடியை சரி செய்ய என்ன செய்யலாம் என்னும் போது கறிவேப்பிலை பெரிதும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

​இளநரைக்கு சிறந்தது எது?

samayam tamil Tamil News Spot

கறிவேப்பிலை முடிக்கு நல்ல கருப்பு நிறத்தை அளிக்கிறது. கறிவேப்பிலையை உணவில் இருந்து வெளியேற்றாமல் சாப்பிட வேண்டும். மேலும் கூந்தலுக்கு நன்மை செய்வதில் கறிவேப்பிலை முதலிடத்தில் உள்ளது. இதில் உள்ள வைட்டமின், நார்ச்சத்து, இரும்புச்சத்து எல்லாமே கூந்தலுக்கு நன்மை கொடுக்கிறது.

100 கிராம் தேங்காயெண்ணியில் 50 கிராம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். இதை பாட்டிலில் வைத்து வெயிலில் வைத்து எடுக்கவும். பிறகு இதை வடிகட்டி வைக்கவும். தினமும் இதை காலையில் உச்சந்தலையில் மென்மையாக மசாஜ் செய்யலாம்.

இரண்டு மணி நேரம் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். இரவு நேரத்திலும் சில துளிகள் உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம் இது கூந்தலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அளிக்கிறது. இது கூந்தலுக்கு சத்து கொடுக்கிறது. நுனி முடி பிளவு பிரச்சனையையும் சரி செய்கிறது.

​இளநரைக்கு உணவு முறை

samayam tamil Tamil News Spot

இளநரை வராமல் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க அஸ்வகந்தா பொடியை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுக்கலாம். ஆயுர்வேதத்தில் இது முக்கியமானது. இதில் உள்ள அமினோ அமிலங்கள் கூந்தலுக்கு நல்ல வலிமை கிடைக்கும். இது கூந்தலுக்குள் இருக்கும் மயிர்க்கால்களில் வேர்பகுதியில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இது மாத்திரைகளாகவும் கிடைக்கிறது. மருத்துவரின் ஆலோசனையுடன் இதை எடுக்க வேண்டும்.

eyebrow shapes: வில் போன்ற புருவம் அடர்த்தியா கருகருன்னு இருக்க என்ன செய்யணும்? அழகு கலை நிபுணர் சொல்வது என்ன?

நல்லெண்ணெய்

கருப்பு எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெய் உள்ளுக்கும் கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். சமையலில் இதை பயன்படுத்தும் போது கூந்தலுக்கு வேண்டிய சத்துகள் கிடைக்கும். கருப்பு எள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகள் சேர்க்கலாம்.

பழங்கள்

வயதாவதை தவிர்க்க முடியாது. ஆனால் வயதாவதற்கு முன்பு வரக்கூடிய இளநரையை தடுக்க உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். பச்சை நிற காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், உலர் பருப்புகள் என திட்டமிட்டு உணவை எடுக்கும் போது உடலில் இருக்கும் செல்களுக்கு நிறைவான சத்து கிடைக்கும். வெள்ளை முடியை தவிர்க்க பயன்படுத்த வேண்டிய ஹேர் பேக் மற்றும் எண்ணெய் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.