Share on Social Media


இரண்டு வருடத்திற்கு மேலாக உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பேரிடரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கொரோனா பரவலைக் குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பல நாடுகளிலும் கோவிட் – 19 வைரஸுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் தடுப்பூசி முகாம்கள் முதல் மருத்துவமனைகள் வரை தினமும் பல ஆயிரம் மக்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. சில மாநில அரசுகள், பொதுவிடங்களில் மக்கள் அனுமதிக்கப்பட, அவர்கள் கோவிட் – 19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை கட்டாயமாக்கிவருகின்றன.

Covid Vaccination

Covid Vaccination
AP Photo/Altaf Qadri

தற்போது கொரோனாவின் ஒமிக்ரான் வேரியன்ட் வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் பயணங்கள் முதல் மால்கள் வரை என பொது இடங்களுக்குச் செல்ல, மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழை மிக எளிதாக ஆரோக்கிய சேது செயலி, வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.

கோவிட் – 19 தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஸ்டெப் 1:

CoWIN இணையதளத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் உங்கள் பதிவு எண், உங்கள் WhatsApp எண்ணாக இருக்க வேண்டும். முதலில் +91 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, பிறகு உங்களுடைய வாட்ஸ்அப்பில் இருந்து அந்த எண்ணுக்கு `ஹாய்’ என்ற மெசேஜ் அனுப்ப வேண்டும். அதிகாரபூர்வ MyGov கொரோனா உதவி மையமான இது, 30 வினாடிகளுக்குள் சான்றிதழை பதிவிறக்க வழிகாட்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.