Share on Social Media


​மூச்சுத்திணறல் அல்லது வீசிங்

மூச்சுக்குழாய் தடுக்கப்படும் போது வீக்கமடையும் போது மூச்சுத்திணறல் உண்டாகிறது. பொதுவான காரணங்களில் சளி, ஆஸ்துமா, ஒவ்வாமை அல்லது நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் போன்ற கடுமையான நிலைகள் அடங்கும்.

warts removing tips : மருக்கள் யாருக்கு அதிகமா வரும்? தொற்று நோயா? எப்படி, எப்போது நீக்குவது? நிபுணர் சொல்வது என்ன?

மூச்சுத்திணறலுக்கான வீட்டு வைத்தியம் சுவாசப்பாதைகளை திறப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. ஒரு நபர் சுவாசிக்கும் அல்லது மாசுபாட்டை குறைக்கின்றன. மூச்சுத்திணறலின் அடிப்படை காரணங்களை கையாளுகின்றன.

ஒருவருக்கு ஆஸ்துமா அல்லது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் நிலை இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து ஆஸ்துமா இன்ஹேலர் மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

​நீராவி முக்கியம்

samayam tamil Tamil News Spot

வெதுவெதுப்பான ஈரப்பதம் நிறைந்த காற்றை உள்ளிழுப்பது சைனஸ்களை அழிக்க செய்யும். காற்றுப்பாதைகளை திறக்கவும் பயனுள்ளதாக இருக்கும். பாதுகாப்பாக இதை செய்ய ஒரு பெரிய வாய் குறுகிய கிண்ணத்தில் சூடான நீரை ஊற்றி நீராவியை சுவாசிக்கவும். கூடுதல் ஈரப்பதத்தை பிடிக்க தலைக்கு மேல் ஒரு துண்டு வைக்கவும். நீராவி பிடிக்கும் போது தண்ணீரில் சில துளிகள் புதினா எண்ணெய் அல்லது யூகலிபடஸ் எண்ணெயை தண்ணீரில் சில துளிகள் சேர்க்கலாம்.

2013 ஆம ஆண்டு ஆராய்ச்சியின்படி, இது சுவாச மண்டலத்தின் தசைகளை தளர்த்தலாம். இது மூச்சுத்திணற்ல மற்றும் பிற சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். நீராவி குளியலுக்கு மாற்றாக சூடான நீரை மார்பிலும், முதுகிலும் விட்டு மென்மையாக தட்டி கொடுப்பது சிறப்பாக செயல்பட உதவும்.

​சூடான பானங்கள்

samayam tamil Tamil News Spot

சூடான பானங்கள் காற்றுப்பாதைகள் தளர்த்தவும் நெரிசலை போக்கவும் உதவும். தேன் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் ஆகும். ஒரு டீஸ்பூன் தேன் சூடான நீரில் சேர்த்து குடித்தால் அறிகுறிகள் குறையக்கூடும்.

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடுவது, மற்ற சிகிச்சைகளுடன் தொண்டை நெரிசலில் இருந்து விடுபட உதவும் என்பது கண்டறியப்பட்டது. மூலிகை தேநீரும் குடிக்கலாம்.

​சுவாச பயிற்சிகள்

samayam tamil Tamil News Spot

சுவாச பயிற்சிகள் சிஓபிடி, மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை மற்றும் மூச்சுத்திணறலின் பிற பொதுவான காரணங்களுக்கு உதவக்கூடும்.

மூச்சுக்குழாய் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உட்பட சில யோகாவால் தூண்டப்பட்ட சுவாச நுட்பங்கள் சுவாசிப்பதில் சிரமத்துக்கு உதவக்கூடும் என்று 2009 ஆம் ஆண்டின் நம்பகமான ஆய்வு கண்டறிந்துள்ளது.

சுவாச பயிற்சிகள் பெரும்பாலும் ஆழமான, வழக்கமான உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றங்களை உள்ளடக்கியது. மருத்துவ அல்லது சுவாச சிகிச்சை நிபுணர் பயனுள்ள சுவாச நுட்பங்களை உங்களுக்கு தீர்மானிக்கலாம்.

தாக்குதலின் போது சுவாசிப்பதில் சிரமம் இருக்கலாம். ஆழமான சுவாச பயிற்சிகளுக்கு இங்கே உதவும். மெதுவாக சுவாசிக்கவும். வயிற்றில் ஆழமாக சுவாசிப்பதில் கவனம் செலுத்தவும்.

​பச்சை வெங்காயம்

samayam tamil Tamil News Spot

வெங்காயத்தில் உள்ள உள்ளடக்கம் உடலில் நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவை கொண்டிருக்கிறது. இது தொற்றுநோய்களை திறம்பட எதிர்த்து போராட செய்கிறது. உணவில் சிறிது பச்சை வெங்காயத்தை சேர்க்கவும்.

தனியாகவும் சேர்க்கலாம். இது உங்கள் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதோடு அடைக்கப்பட்ட காற்றுப்பாதைகளை திறந்து மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்கும்.

​கடுகு எண்ணெய்

samayam tamil Tamil News Spot

கடுகு எண்ணெய் சுவாசத்தை தணிக்கிறது. மற்றும் மூச்சுத்திணறலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. சிறிது கடுகு எண்ணெயை சூடாக்கி அதில் ஒரு துண்டு கற்பூரத்தை சேர்க்கவும். கற்பூரம் கரைந்ததும் நாளைக்கு 3 முறை 15 நிமிடங்களுக்கு மார்பை மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது. மற்றும் சுவாசத்தை எளிதாக்குகிறது.

Piles : மலத்தில் ரத்தக்கசிவு, குதவாய் அரிப்பு, பைல்ஸ் போன்றவற்றிலிருந்து வெளியே வர மருத்துவர் தரும் பயனுள்ள குறிப்பு!

மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிவது பெரும்பாலும் கடினம், மேலும் இது தீவிரமாக இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக சுவாசிப்பதில் போராட்டம், திடீரென்று வரும் மூச்சுத்திணறல் மார்பு வலி போன்ற பிற அறிகுறிகள் , அனாபிலாக்ஸிஸ் அறிகுறிகள் மூச்சுத்திணறல் அனுபவிக்கும். சாதாரணமாக சுவாசிக்க கூடிய அளவில் இருந்தால் சில நாட்கள் வரை காத்திருக்கலாம். மூச்சுத்திணறல் மோசமாகி விட்டால் தாமதிக்கமால் மருத்துவரை அணுக வேண்டும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.