Share on Social Media


பாம்புகளை விரட்ட முயற்சித்து சொந்த வீட்டையே கொளுத்தி நாசம் செய்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர்.

அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டில் அடைந்துள்ள பாம்புகளை புகையை வைத்து விரட்டுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால், புகை தீயாக மாறி அவரது வீட்டையே எரித்து நாசம் செய்துள்ளது.

இதனால், 1 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7.5 கோடி) மதிப்புள்ள வீடு எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 75 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்க போராடினர்.

பெண்களை கட்டாய திருமணம் செய்ய தடை – அரசு அதிரடி!
வீட்டின் உரிமையாளர் பாம்புகளை விரட்ட புகையை பயன்படுத்தியபோது அருகில் நிலக்கரி இருந்துள்ளது. இந்த நிலக்கரி தீப்பிடித்து எரிந்ததன் விளைவாக பெரும் தீவிபத்து ஏற்பட்டு வீடு சேதமடைந்துள்ளது.

7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு எரிந்து சேதமடைந்தாலும், உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடு தீப்பிடித்து எரியும் படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியுள்ளன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *