Share on Social Media

ஹிப் ஹாப் தமிழா எனப்படும் ஹிப் ஹாப் ஆதி தமிழ் திரை உலகின் ஒரு மிகப்பிரபலமான நபராவார். அவர் ஒரு இசை அமைப்பாளராக இருப்பதோடு ஒரு நடிகராகவும் வெற்றி பெற்றுள்ளார். தனது வித்தியாசமான பாடல்கள் மற்றும் நடிப்பு மூலம் பல இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுள்ள அவர் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துள்ளார்.

ஹிப் ஹாப் தமிழாவின் (Hip Hop Tamizha) பாடல்களும் ஆல்பங்களும் மிகவும் பிரபலமாக பேசப்படுகின்றன. தமிழ் திரைத்துறையில் ஒரு இசை அமைப்பாளராக அறிமுகமான அவர், பின்னர் ஒரு நடிகராகவும் அவதாரம் எடுத்தார். ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம், அவர் முதல் முறையாக ஒரு ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றிப்படமானது.

ஆதி தனது நண்பர் ஜீவாவுடன் இணைந்து ‘ஹிப்ஹாப் தமிழா’ என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவரது சேனல் சமீபத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபரால் ஹேக் (Hacking) செய்யப்பட்டது. சேனலின் பெயர் ‘அல்கோரண்ட் சோஷியல் நியூஸ்’ என்று மாற்றப்பட்டது.

ALSO READ: யாஷிகாவின் தற்போதைய நிலை என்ன; எலும்பு முறிவா, நடந்தது என்ன

இந்த யூடியூப் சேனலில் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு சுமார் 2 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது அவர் இந்த சேனல் மூலம் தனிப்பட்ட மியூசிக் ஆல்பம்களையும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹேக் செய்யப்பட்ட அவரது சேனல் இன்னும் மீட்கப்படவில்லை.

அவரது படங்களைப் பொறுத்தவரையில், இதற்கு முன்னர் அவர் ‘நான் சிரித்தால்’ படத்தில் காணப்பட்டார். இவரது அடுத்த படமான ‘சிவகுமாரின் சபதம்’ போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் உள்ளது. தற்போது அவர் தனது அடுத்த படமான ‘அன்பறிவு’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.

சமீப காலங்களில் பல பிரபலங்களின் சமூக ஊடக கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருவதைப் பார்த்து வருகிறோம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையும், அரசியலிலும் பிரபலமாகவும் இருக்கும் குஷ்பு சுந்தரின் (Kushboo Sundar) ட்விட்டர் கணக்கு சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவரும் நடிகையுமான குஷ்பு சுந்தரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக அவர் தமிழக டிஜிபியை சந்தித்து ஹேக்கிங் குறித்து புகார் அளித்தார். 

ALSO READ: அசர வைத்த ஷிவானி; இணையத்தில் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *