Share on Social Mediaமூலிகை குடிநீர் பாரம்பரியமாகவே கேரளாவில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் நீர் மூலம் பரவும் பல நோய்களுக்கு மூலிகை குடிநீர் அருமருந்தாக இருக்கும். இந்த மூலிகைகள் தமிழகத்திலும் எளிதாக கிடைக்க கூடியவை. மூலிகை குடிநீர் தயாரிக்கும் முறைகள், பயன்படுத்தும் முறை, அதன் நன்மைகள் அனைத்தும் பார்க்கலாம்.

மூலிகை குடிநீர்

மூலிகை குடிநீர் ஏன் அவசியம், அதை தயாரிக்கும் முறைகள் என்னென்ன? அதன் நன்மைகள் என்னென்ன என்பதை சித்த மருத்துவ நிபுணர் டாக்டர். வி.விக்ரம்குமார் MD(S) சொல்வதை இதில் பார்க்கலாம்.

கேரள மாநிலத்தில் கிடைக்கும் மூலிகை குடிநீர்கள் பலரும் ருசித்திருப்பீர்கள்.

பதிமுகம் (சாயமரம்) கலந்த நீர்:

கேரள மாநிலத்தின் சில இடங்களில் கொடுக்கப்படும் குடிநீரில் வெளிர் ரோஜா நிறம் இருப்பதை பார்க்கலாம். பதிமுக சக்கைகளை கொதிக்க வைத்து கொடுப்பதன் மூலம் இந்த நீருக்கு நிறமும் மணமும் கிடைக்கும்.

siruneeraga kal: சிறுநீரக கல் : கிட்னி ஸ்டோன் வெளியேற்றும் மூலிகைகள், பயன்படுத்தும் முறை, மருத்துவர் தரும் குறிப்புகள்!

இந்த நீர் மாதவிடாய்க்காலங்களில் அதிக குருதிபோக்கை கட்டுப்படுத்தி வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும். இது உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும் பண்புகளை கொண்டது. இதில் இருக்கும் ‘Juglone’ என்னும் வேதிப்பொருள் இருப்பதால் கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது இரத்தஓட்டத்தை சீராக்குகிறது. இது மூட்டுவலிக்காக தாய்லாந்து மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

​லட்சுமி தரு

samayam tamil Tamil News Spot

சில வகை மூலிகை குடிநீர் பொடிகளில் லட்சுமி தருவின் இலைகள் 50% சேர்க்கப்படுகிறது. இதற்கு புற்றுநோயின் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

வலி நிவாரணி, கிருமி நாசினி, புழுக்கொல்லி, சுரமகற்றி என பன்முகத்தன்மை கொண்டது. இதில் இருக்கும் வேதிப்பொருள்கள் முக்கிய காரணமாகிறது.

​சர்வசுகந்தி

samayam tamil Tamil News Spot

சர்வ சுகந்தி நீரில் கொதிக்க வைத்து குடிப்பதும் உண்டு. இந்த இலைகளில் இருக்கும் வாசனை எண்ணெய் காரணமாக இலைகள் கலந்த நீரினை அருந்தும் போது நல்ல வாசனை உண்டாகிறது. இந்த இலைகளை உணவிலும் சேர்க்கலாம்.

​தாகமுக்தி குடிநீர்

samayam tamil Tamil News Spot

வெட்டிவேர் பதிமுகம், கருங்காலி, நன்னாரி, சுக்கு, ஏலம், தனியா போன்ற மூலிகைகள் தாகமுக்தி குடிநீர் கலவையில் சேர்கின்றன.

ஐந்து லிட்டர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடியை கலந்து கொதிக்க வைத்து பயன்படுத்தலாம். நன்னாரி கலந்திருப்பதால் இது குடிக்க சர்பத் போல் மணமும் சுவையும் இருக்கலாம்.

சிறுநீர் எரிச்சலுக்கும், தலைவலி, வயிற்றுவலி போன்ற குறிகுணங்களும் தாகமுக்தி குடிநீரை உபயோகிக்கலாம்.

தாகசமணி குடிநீர்:

லட்சுமி தரு இலை, பதிமுகம், கருங்காலி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, நன்னாரி, ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம், அதிமதுரம் போன்ற மூலிகைகள் கலந்த கலவை தாகசமணி குடிநீர்.

உடலில் தேங்கிய கழிவுகளை அகற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உணவு செரிமானத்தை அதிகரிக்கிறது. பித்தம் சார்ந்த நோய்கள் குறைகிறது.

இவை எல்லாம் தயாரிக்க நேரம் எடுக்கும் என்று நினைப்பவர்களுக்கு மூலிகை பொட்டணங்கள் கிடைக்கிறது. இதை சூடான நீரில் போட்டு டிப் செய்து குடிக்கலாம்.

​சீரக நீர்

samayam tamil Tamil News Spot

தமிழகத்தில் காலங்காலமாக சீரக நீர், வெந்தய நீர், தேற்றான் கொட்டை நீர், நெல்லி நீர் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குடிக்கலாம். சீரகத்தை நீரில் முதல்நாள் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் இந்த நீரை குடிக்கலாம்.

நன்மைகள்:

சீரகத்திலுள்ள தைமால் என்னும் வேதிப்பொருள் செரிமான பொருள்களை தூண்டி நல்ல பசியை உண்டாக்குகிறது. உடலில் உள்ள வாயுக்களை வெளியேற்றுகிறது. இது கர்ப்பிணி பெண்களுக்கு செரிமான கோளாறுகளுக்கு பக்க விளைவில்லாத மருந்து.

அசைவ உணவுகள் எடுத்துகொள்ளும் போது இதை பயன்படுத்தலாம். இது மந்தம், உப்பிசம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. வயிறு சார்ந்த நோய்களை போக்குவதுடன் கூடுதல் பலனாக இரும்பு சத்தினை சீரகம் நமக்கு அளிக்கிறது.

​வெந்தய ஊறல் நீர்

samayam tamil Tamil News Spot

இரவில் வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்து குடித்து வந்தால் பித்தம் சார்ந்த நோய்கள் குறையும். சிறுநீர் எரிச்சல், சிறுநீர்ப்பாதை தொற்று, வயிற்றுப் புண், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி போன்ற தொந்தரவுகளுக்கு வெந்தய ஊறல் நீர் பயன்படுத்தலாம்.

வெந்தயத்தில் உள்ள 4 – hydroxyisoluecine எனும் அமினோ அமிலம், கணைய செல்களைத் தூண்டி, இன்சுலின் சுரப்பினை முறைபடுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் வெந்தய நீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

kosu varamal iruka : கொசுவை ஓட ஓட விரட்டும் ஐந்து குறிப்புகள், செலவில்லாதது, பாதுகாப்பானது! சீக்கிரம் ட்ரை பண்ணுங்க!

இந்த மூலிகை நீர் மழை மற்றும் குளிர் காலங்களில் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் குடிக்கலாம். வெயில் காலங்களில் மூலிகைகளை நீரில் கொதிக்க வைத்து பின் ஆறிய நீரினை மண் பானைகளில் சேமித்து, வெயிலுக்கு இதமாக குளிர்ந்த நீராக பயன்படுத்தலாம்.

இந்த நீர் மூலம் பரவும் நோய்களை முற்றிலுமாகத் தவிர்க்க இந்த மூலிகை நீர் உதவலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *