Share on Social Media

கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டில் முடங்கியிருக்கிறோம். வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அவ்வபோது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்னும் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். பெண்களுக்கும் கூட.

ஸ்நாக்ஸ் வெளியில் வாங்கினாலும் சரி வீட்டில் செய்தாலும் சரி அதன் ருசி எப்படி இருக்கு என்பதை மட்டுமே பார்க்கிறார்கள். அது எப்படி செய்யப்பட்டது அந்த பொருள் உடலுக்கு ஆரோக்கியம் தருகிறதா என்பதை யாருமே உன்னித்து பார்ப்பதில்லை.

இலேசான உடல் பருமனை கொண்டிருப்பவர்கள் இன்னும் அதிக உடல் பருமனாகவும், அதிகமான உடல் பருமனை கொண்டிருப்பவர்கள் இன்னும் அதிக உடல் பருமனாகவும் வருகிறார்கள். இதற்கு காரணம் ஆராய்ந்த போது அவர்கள் அடிக்கடி ஸ்நாக்ஸ் அதோடு உணவு முறையையும் மாற்றியது தெரியவந்தது.

உடம்புக்கு மாங்கனீசு கொஞ்சம் தான் தேவை. ஆனால் அது எவ்ளோ நன்மை தருதுன்னு பாருங்க!

பெரும்பாலும் மெஜாரிட்டியான ஸ்நாக்ஸ் வகைகள் என்றால் எண்ணெயில் பொரித்துகொடுக்க கூடிய ஸ்நாக்ஸ் வகைகள், மைதாவை கொண்டு செய்யப்படும் உணவுகள் தான்.

அதிலும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான முறையில் கலர் கலராய் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை நாம் செய்து தரலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பரிமளாதேவி குமாரசாம . அப்படி செய்ய வேண்டிய ரெசிபிகளை சுவாரஸ்யமாய் செய்வதற்கான குறிப்புகளையும் அவர் தருகிறார். தொடர்ந்து பார்க்கலாம்.

சிறுதானியங்களை கொண்டு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த வகையில் ஸ்நாக்ஸ் செய்யலாம். கேழ்வரகை முளைகட்டி காயவைத்து அரைத்து பால் எடுத்து அதில் முந்திரி, வெல்லம் சேர்த்து பாலாக்கி கொடுக்கலாம். கேழ்வரகு பக்கோடாவாக்கி கொடுக்கலாம். கேழ்வரகில் கீரைகள், காய்கறிகளை துருவி சேர்த்து அதை அடையாக செய்து கொடுக்கலாம். இனிப்பு அடையாக வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்தும் செய்து தரலாம். இது சத்தானது.

கார்ன் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. நமது ஊர் மக்காச்சோளம், வெளிநாடுகளில் இருந்து வரும் ஸ்வீட் கார்ன் இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மால்களில் குழந்தைகளுக்கு நாம் வாங்கித்தருவதுண்டு. இதை வீட்டிலேயே வேகவைத்து சாலட் ஆக கொடுக்கலாம். நார்ச்சத்து நிறைந்தது. செரிமானத்துக்கும் நன்மை தரும்.

வெளியில் செல்லும் போது பானி பூரி, பேல் பூரிகளை விரும்பி சாப்பிடுவோம். இதை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயாரித்து கொடுக்கலாம். பொரியை வைத்து பூரி மட்டும் கொடுக்காமல் காய்கறிகளை சிறுதுண்டுகளாக நறுக்கி, வெங்காயம் தக்காளி சேர்த்து கொடுக்கலாம். இதுவும் ஹெல்தியான ஸ்நாக்ஸ் தான். இதில் சிறிது இரும்புச்சத்து அதிகம்.

கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு வேக வைத்து கொடுப்பதுண்டு. மரவள்ளிக்கிழங்கை அரைத்து தோசையாக, அடையாக காய்கறிகள் சேர்த்து கொடுக்கலாம். கிழங்கில் வெல்லம் சேர்த்து உருண்டையாக்கி கொடுக்கலாம்.

சிறுதானிய அவல் ராகி, கம்பு, சோளம் கிடைக்கிறது. இதை பாலில் கலந்து இனிப்பாக கொடுக்கலாம். அல்லது காரம் சேர்த்தும் கொடுக்கலாம். பயறு வகைகளை முளைக்கட்டி சாலட் ஆக்கி கொடுக்கலாம். சுண்டல் ஆக்கி கொடுக்கலாம். அடை, தோசை போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்

முட்டையை வேகவைத்து சாலட் போன்று கொடுக்கலாம். பன்னீரை சப்பாத்தியில் வைத்து ஸ்டஃப்டு சப்பாத்தியாக்கி ,ஸ்டஃப்டு பராத்தா என கோதுமை மாவில் தயாரித்து கொடுக்கலாம். பனியாரத்தில் உள்ளே துருவி பயன்படுத்தலாம். தோசையின் மீது அலங்கரித்து கொடுக்கலாம். இவை எல்லாமே ஆரோக்கியமானது.

புற்றுநோய், நீரிழிவு வராம இருக்கணுமா? தினம் 4 அக்ரூட் பருப்பு சாப்பிடுங்க! வேறு மாற்றங்களும் தெரிஞ்சுக்கங்க!

குழந்தைகளுக்கு இட்லியாக தனித்து கொடுக்காமல் ட்ரை கலர் சேர்க்கலாம். புதினா, கேரட், பீட்ரூட் சேர்த்து இட்லியாக வார்த்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கலர் கலரான உணவுகள் மீது எப்போதும் ஆர்வம் உண்டு என்பதால் அழகாக சாப்பிடுவார்கள். எல்லா காய்கறிகளையும் கலந்து கொடுக்கலாம். கீரைகள் சேர்க்கலாம். தினமும் 50 கிராம் கால்சியம் குழந்தைகளுக்கு சேர ஒரு கைப்பிடி கீரையை உணவில் சேருங்கள். தினம் ஒரு கீரை என்று திட்டமிட்டு கொடுக்கலாம். மாற்றி மாற்றி கொடுத்தால் இட்லி, தோசையையும் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிடுவார்கள்.

உலர் பருப்புகள், விதைகள் போன்றவற்றை பொடியாக்கி உருண்டையாக்கி கொடுக்கலாம். நிலக்கடலையை வெல்லத்துடன் சேர்த்து உருண்டையாக்கி கொடுக்கலாம். ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இது. பேரீச்சம்பழத்தை அப்படியே சாப்பிடாத குழந்தைகளுக்கு நட்ஸ் பால், சாட் வகையில் பொடியாகி நறுக்கி கொடுக்கலாம். முந்திரி, பாதாமை பாலில் கலந்து குடிக்கலாம்.

தினசரி உணவை ஒரே மாதிரியாக கொடுக்காமல் கொஞ்சம் மெனக்கெட்டு அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல வீட்டில் அனைவருமே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மற்றும் உணவை எடுக்கலாம். இயன்றவரை பாக்கெட் உணவுகள் மற்றும் அதிகமாக எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிருங்கள்.

ஊட்டச்சத்து நிபுணர் பரிமளாதேவி குமாரசாமி சொன்னது போல் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை செய்து வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யுங்கள். உங்கள் வீட்டில் உடனடியாக உணவு முறையிலும் ஸ்நாக்ஸ் வகையிலும் இந்த மாற்றத்தை தொடங்குங்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *