Share on Social Media

வைட்டமின் ஏ அல்லது ரெட்டினோல் ஒரு கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின். இது கண்கள் மற்றும் எலும்பு வளர்ச்சியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் குறைபாடு குழந்தைகளிடையே குருட்டுப்பார்வையை உண்டாக்கும் பொதுவான காரணங்களில் ஒன்றாகிறது.

மாலைக்கண் நோய் கண்களில் வறட்சி போன்றவற்றை தடுத்து கண்பார்வையை உறுதி செய்யும் இந்த வைட்டமின் ஏ நன்மை குறித்து பார்க்கலாம்.

​வைட்டமின் ஏ குறைபாடு அறிகுறிகள்

வைட்டமின் ஏ குறைபாடு அறிகுறிகள் கண்களில் எரியும் தன்மை , கண்களில் அவ்வபோது அரிப்பு, கண் இமைகளில் வீக்கம், இரவு நேரங்களில் பார்வைத்திறன் மங்கலாவது கண்களில் நீரில்லாமல் வறட்சி ஆவது, பொடுகு, நகங்கள் வேகமாக உடைவது.

புற்றுநோய் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சிவப்பு திராட்சை, வேறு நன்மைகளின் பட்டியலும் இருக்கு, தெரிஞ்சுக்கங்க!

பாலியல் கோளாறுகள், உடல் திசுக்களில் முன்கூட்டிய மாற்றங்கள், சோர்வு, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை பொதுவான அறிகுறிகளாக இருக்கலாம்.

​நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது

samayam tamil Tamil News Spot

வைட்டமின் ஏ நோய்களை உருவாக்கும் ஆண்டிஜென்களுக்கு எதிரான லிம்போசைடிக் அதிகரிப்பதன் மூலம் நோய்த்தொற்றுகளுக்கு எதிரான உடலில் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிபடுத்த சளி சவ்வுகளை ஈரப்பதமாக வைத்திருக்க செய்கிறது.

மேலும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் கிருமிகள் உடலில் நுழைவதை தடுப்பது மட்டுமல்லாமல் கிருமிகள் உடலில் நுழைந்தவுடன் தொற்றுநோய்களை எதிர்த்து போராடவும் செய்கிறது.

​பார்வையை மேம்படுத்துகிறது

samayam tamil Tamil News Spot

வைட்டமின் ஏ பார்வையை மேம்படுத்த உதவுகிறது.கண்களில் வறட்சியை தடுத்து கண்களை ஈரப்பதமாக வைத்திருக்கிறது. இரவு நேரத்தில் பார்வைத்திறனில் குறைபாட்டை உண்டாக்குகிறது. கண்களில் பார்வைத்திறனை அதிகரிப்பதன் மூலமாக உலர்ந்த கண்கள் மற்றும் இரவு நேரத்தில் பார்வைத்திறன் குறைபாடு உண்டாவதை தடுக்க செய்யலாம்.

கண்களில் காட்சி தெரிவதற்கு ரெட்டினோல் உதவுகிறது. இது கண்களை மேம்படுத்தவும் ஆரோக்கியமான விழித்திரையை உறுதி செய்யவும் வைட்டமின் ஏ உதவும். மேலும் கண்புரை மாகுலர் சிதைவு அபாயத்தையும் இந்த வைட்டமின் கணிசமாக குறைக்கும். கிளைகோமா பாதிப்பு கொண்டிருப்பவர்களுக்கு இந்த வைட்டமின் நிறைவாக இருந்தால் பாதிப்பு அதிகமாகாமல் தடுக்கலாம்.

​எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

samayam tamil Tamil News Spot

வைட்டமின் ஏ எலும்பு ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்பு நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. வைட்டமின் ஏ எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தப்படுகிறது என்று தேசிய வளமையம் தெரிவிக்கிறது.

வைட்டமின் ஏ பற்களின் மேற்பரப்புக்கு கீழ் கடினமான டெண்டின் உருவாக காரணமாகிறது. இது அதன் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

​தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

samayam tamil Tamil News Spot

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் அதன் வடிவத்தை தக்கவைத்துகொள்வதன் மூலம் குழந்தைகள் வளரும் பருவத்தில் சரியான தசை வளர்ச்சியை பெறுவார்கள்.

குழந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் பதினம் வயதினரில் சரியான தசை வளர்ச்சியை உறுதி செய்வதில் வைட்டமின் ஏ முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தசை நார் டிஸ்டிராபி உருவாகும் வாய்ப்பை தடுக்கிறது.தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

​முகப்பரு அபாயத்தை குறைக்கிறது

samayam tamil Tamil News Spot

வைட்டமின் ஏ அதிகப்படியான முகப்பரு அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது சருமத்தின் பாதுகாப்பு திசுக்களை வலுப்படுத்துகிறது. இது சருமத்தின் மேற்பரப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

பித்தப்பையின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் உணவு முறைகள், எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியவை!

சருமத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றி அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளால் சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் முகப்பரு அபாயம் குறைகிறது. சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க செய்கிறது.

​தட்டம்மை அபாயத்தை குறைக்கிறது

samayam tamil Tamil News Spot

வைட்டமின் ஏ குறைபாடு குழந்தைகளுக்கு அம்மை நோயை உண்டாக்க வாய்ப்புண்டு. 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி வைட்டமின் ஏ குழந்தைகளுக்கு நிறைவாக இருந்தால் அது அம்மை நோயை தடுக்க உதவும் என்று கண்டறிந்துள்ளது.

இந்த வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை எடுத்துகொள்வது அம்மை நோயால் உண்டாகும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கை தடுக்கவும் உதவுகிறது. குழந்தைகளை அம்மை உண்டாக்கும் வைரஸிலிருந்து பாதுகாக்க செய்கிறது.

​கொழுப்பை குறைக்க உதவுகிறது

samayam tamil Tamil News Spot

உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க வைட்டமின் ஏ உதவுகிறது. வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அளவு குறைவதால் அது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

​வயதான தோற்றத்தை மெதுவாக்குகிறது

samayam tamil Tamil News Spot

மெக்ஸிகன் மருத்துவ பள்ளியின் சருமத்துறையின் ஆய்வின் படி ரெட்டினோலின் மேற்பூச்சு பயன்பாடு வயதான தோற்றத்தை மாற்றுவதில் நேர்மறை முடிவுகளை காட்டியது. சரும சுருக்கங்களை நீக்கும் குணங்களை வைட்டமின் ஏ கொண்டுள்ளது.

வயதான பிறகு புள்ளிகள், நேர்த்தியான கோடுகளை குறைக்கும். இது சருமத்தின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் வயதான செயல்முறையை குறைக்க செய்கிறது.

​வைட்டமின் ஏ எதில் இருக்கு?

samayam tamil Tamil News Spot

முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், பால், சீஸ்,மஞ்சள் ஆரஞ்சு நிற பழங்கள் காய்கறிகள் மஞ்சள் மக்காச்சோளம் போன்றவை, நிறமி கரோட்டின் கொண்டுள்ளது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ப்ரக்கோலி, கீரைகள், மா, பூசணி, தக்காளி, ஓட்மீல், ஆப்ரிகாட், பட்டாணி, பப்பாளி மற்றும் காலே கீரைகள் போன்றவற்றில் உள்ளது.

குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழங்களும் காய்கறிகளும் இதுதான்! தவிர்க்காம சாப்பிடுங்க!

குறிப்பு

வைட்டமின் ஏ தினசரி எடுக்க வேண்டிய அளவுக்கு மேல் அதிகமாக கூடாது. இதை அதிகமாக எடுத்துகொண்டால் மங்கலான பார்வை, குமட்டல் போன்ற தீங்கு விளைவிக்கும் அறிகுறிகளை உண்டாக்கலாம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *