Share on Social Mediaதேநீர் உலகின் ஆரோக்கியமான பானங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் காஃபி அல்லது டீ குடித்தால் தான் நாளே ஓடும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் பலவிதமான தேநீர் தயாரிக்கப்படுகிறது. இயற்கை பொருள்களை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் உடலுக்கு தரும் நன்மைகள் ஏராளம். அதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

​மூலிகை தேநீர்

மூலிகை தேநீர் குடிப்பதன் மூலம் உண்மையில் அதிக ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். வாழ்க்கை முறையில் சிறிய மாற்றம் மற்றும் தினமும் ஒரு கப் மூலிகை தேநீர் உடலில் உண்டாகும் வித்தியாசத்தை கவனிக்க முடியும்.

உலக நீரிழிவு தினம் 2021 : சர்க்கரை அதிகரித்தால் ஏற்படும் மோசமான பாதிப்புகள்! கண்டிப்பா தெரிஞ்சுக்கங்க, விழிப்புணர்வா இருங்க!

மூலிகை தேநீர் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இது செரிமானம், நச்சுத்தன்மை, எடை இழப்பு உட்பட குறிப்பிட்ட நன்மைகளை வழங்குகிறது. ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இது உங்கள் உடலை ஆரோக்கியமாக்குவதோடு மனதை அமைதிப்படுத்தவும் புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை விரும்பினால் 100% இயற்கையான மூலிகை தேநீர் குடிப்பது அவசியம். இது பல நன்மைகளை உடலுக்கு அளிக்கும். அதை தான் இப்போது பார்க்க போகிறோம்.

​வயதான செயல்முறையை மெதுவாக்குகிறது

samayam tamil Tamil News Spot

மூலிகை தேநீரில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் வயதான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது. இது ஃப்ரி ரேடிக்கல் சேதத்தை தடுக்கின்றன. மற்றும் உடலில் உள்ள செல்களின் வயதை மீட்டெடுக்கின்றன. இது உங்கள் சருமத்தை குறைபாடற்றதாகவும் இளமையாகவும் வைத்திருக்க செய்கிறது.

​நச்சு நீக்கம்

samayam tamil Tamil News Spot

ஹெர்பல் டீ என்பது உடலை நச்சுத்தன்மையாக்க செய்கிறது. உடலில் இருக்கும் நச்சை வெளியேற்ற செய்கிறது. உடல் கழிவுகள் உறுப்புகளில் தேங்காமல் இருந்தாலே உடல் ஆரோக்கியம் வளமாக இருக்கும். அதற்கு இந்த மூலிகை தேநீர் உதவக்கூடும். குறிப்பாக பண்டிகை காலங்கள், விருந்துகள், விழாக்களின் போது உடல் நச்சுநீக்கம் அவசியமானது.

​செரிமானத்துக்கு உதவுகிறது

samayam tamil Tamil News Spot

மூலிகை தேநீர் குடித்த பிறகு உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. மூலிகை தேநீரின் பண்புகள் செரிமான அமைப்பை சீராக்குகிறது. மேலும் பசியை அடக்கி அதிகமாக சாப்பிடும் ஆர்வத்தை குறைக்கிறது. செரிமானக்கோளாறுகள் இருப்பவர்கள் மூலிகை தேநீர் குடிப்பதன் மூலம் அஜீரணக்கோளாறு இல்லாமல் செய்யலாம்.

​அழற்சி எதிர்ப்பு கொண்டவை

samayam tamil Tamil News Spot

மூலிகை டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இரைப்பை, குடல், கீல்வாதம், தலைவலி மற்றும் மூலநோய் வரை அனைத்தையும் குணப்படுத்த செய்கிறது. புதினா, இஞ்சி, மஞ்சள் மற்றும் யூகலிப்டஸ் தேநீர் அழற்சி பிரச்சனைகளுக்கு கை கொடுக்கும்.

​எடை இழப்பு

samayam tamil Tamil News Spot

எடை சீரான அளவில் இருந்தாலும் எல்லோரும் எடையை கட்டுக்குள் வைக்கவே முயற்சிப்பார்கள். அதற்கு சிறந்த தேர்வாக மூலிகை தேநீர் இருக்கும்.

பெருஞ்சீரகம், சீரகம், தனியா, எலுமிச்சை போன்ற பொருள்கள் நிறைந்த மூலிகை தேநீர் உடலில் இருக்கும் கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

samayam tamil Tamil News Spot

மூலிகை தேநீரில் காணப்படும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நோய் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்து போராட செய்கிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும், நாள்பட்ட நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன.

இஞ்சி. அதிமதுரம் வேர், துளசி, புதினா, பெருஞ்சீரகம், தனியா விதைகள், சித்தரைத்தை, சுக்கு போன்றவை எல்லாம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீருக்கு உதாரணங்கள்.

​குமட்டலுக்கு எதிரானது

samayam tamil Tamil News Spot

தொடர்ந்து குமட்டல் மற்றும் வாந்தியால் அவதிப்படுபவர்களுக்கு, மூலிகை டீ ஆச்சரியப்படுத்தும் வகையில் உதவும். வாய் குமட்டலில் இருந்து உடனடியாக நிவாரணம் அளிக்கும். கர்ப்பகாலத்தில் தினசரி ஒரு கப் மூலிகை தேநீர் குடிப்பதன் மூலம் குமட்டல் உணர்வை தவிர்க்கலாம்.

​ மன அழுத்தத்தை போக்க

samayam tamil Tamil News Spot

சில வகையான மூலிகை தேநீர் மன அழுத்தத்தை போக்கவும் செய்கிறது. தூக்கமின்மைக்கும் மருந்தாகிறது. இது மனதை அமைதிப்படுத்துகிறது. மனசோர்வுக்கு எதிராக போராடுகிறது. மூளையில் உள்ள ரசாயனங்களை வெளியிடுவதன் மூலம் மனச்சோர்வினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆண்டி டிபிரசண்ட் ஆகவும் செயல்படுகிறது.

சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கும் சக்தி வாய்ந்த மூலிகைகள், ஆயுர்வேத மருத்துவர் சொல்வது என்ன?

இனி தினசரி ஒரு கப் மூலிகை தேநீர் தவிர்க்காமல் குடியுங்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *