Share on Social Media

​குழந்தைகளுக்கு எப்போது ஆளி விதைகள்

குழந்தைகளுக்கு ஆறு மாத காலங்களில் இருந்து ஆளி விதை தூள்களை சேர்க்கலாம். கூழ். ஸ்மூத்தி கஞ்சி மற்றும் சூப் போன்றவற்றில் ஆளி விதைகளை சேர்க்கலாம். படிப்படியாக குழந்தைகளுக்கு ஆளி விதைகள் ரொட்டி போன்ற வெவ்வேறு உணவு தயாரிப்புகளிலும் சேர்க்கலாம்.

Infertility : குழந்தையின்மை பிரச்சனைக்கு மருத்துவ காரணங்கள், தீர்வுகள்! தம்பதியர் அறிவது அவசியம்!

ஆளி விதைகள் பொதுவாக குழந்தைகளுக்கு தீங்கு செய்யாது. குழந்தைகளுக்கு அரிதாகவே ஒவ்வாமையை தூண்டுகிறது. சில குழந்தைகளுக்கு அரிதாக பக்க விளைவுகளை உண்டாக்க செய்யலாம். அதனால் குழந்தைக்கு ஆளி விதைகள் கொடுப்பதற்கு முன்பு குழந்தை மருத்துவர் அல்லது குழந்தை ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது.

​ஆளிவிதைகளில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு

samayam tamil Tamil News Spot

ஆளி விதைகளில் ஏராளமான ஃபைபர், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் கே, சி, பி காம்பளக்ஸ், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஒரு டீஸ்பூன் ஆளி விதையில் குழந்தைக்கு அளிக்கும் ஊட்டச்சத்துக்கள்.

7 முதல் 12 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 13. 4 கிலோ கலோரி, 0.457 அளவு புரதம், கொழுப்பு -1.05 கிராம், 0.722 கிராம் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து 0.683 கிராம், 0.638 கால்சியம், 16 மில்லி கிராம் பாஸ்பரஸ்,20.3 மில்லி கிராம் பொட்டாசியம், 2.1 அலகு ஃபோலேட் உள்ளதாக கருதப்படுகிறது. இது யு.எஸ் வேளாண்மைத்துறை மற்றும் ஒரிகான் மாநில பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தவிர ஆளி விதைகளில் லிக்னான்கள் போன்ற சில பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. இது நீண்ட கால ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குழந்தைகளுக்கு ஆளி விதை தருவதால் கிடைக்கும் நன்மைகள் பார்க்கலாம்.

​ஒட்டு மொத்த ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்

samayam tamil Tamil News Spot

ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் ஆளி விதை தூள் உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு பங்களிக்க கூடும். இது குழந்தைக்கு தேவையான நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் பயோ ஆக்டிவ் சேர்மங்களை வழங்கும்.

​ மூளை வளர்ச்சிக்கு உதவும்

samayam tamil Tamil News Spot

ஆளி விதைகள் அதிக அளவு ஆல்ஃபா லினோயிக் அமிலம் வழங்குகின்றன. இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகும். இது உடலில் டி.ஹெச்.ஏ என்னும் டோகோசாஹெக்ஸெனோயில் அமிலம் உடன் ஒருங்கிணைக்கிறது. குழந்தை குறுநடை போடும் போது தேவையான குழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு இந்த டி.ஹெச்.ஏ ஒரு முக்கிய அங்கமாகும்.

​குடல் ஆரோக்கியம் பராமரிக்கிறது

samayam tamil Tamil News Spot

ஆளி விதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத இழைகள் உள்ளன. கரையாத நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி மொத்தமாக அதிகரிக்கிறது. இதனால் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் பாதுகாக்கிறது.

மனித உடலில் புரோபயாடிக் எனப்படும் ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் உள்ளன. இது ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பொருள்களை உற்பத்தி செய்யும் ப்ரிபயாடிக் எனப்படும் சேர்மங்களை நொதிக்கின்றன.

ஆளிவிதை நார் மற்றும் பாலிசாக்கரைடுகள் ஃப்ரீபயாடிக்குகளாக செயல்படுகின்றன. இது புரோபயாடிக்குகளை மேம்படுத்துகிறது. வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு ஆரோக்கியமான குடல் அவசியம்.

ஆளி விதைகள் கூடுதலாக லிக்னோன்கள், பினோலிக் அமிலங்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் போன்ற சேர்மங்களையும் வழங்குகின்றன. இந்த கலவைகள் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளன. இது நீண்ட கால ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.

​ஆளி விதை குழந்தைகளுக்கு

samayam tamil Tamil News Spot

குழந்தைகளுக்கு ஆளி விதை கொடுக்கும் போது முழுமையாக கொடுக்க வேண்டாம். உணவுகளில் சேர்த்து கொடுக்க வேண்டும். முழு ஆளி விதைகள் குடலில் செரிக்கப்படாமல் அப்படியே கடந்து செல்லும். இதனால் ஆளி விதை நன்மைகளும் பெற முடியாமல் போகலாம்.

ஆறு மாச குழந்தைக்கு இந்த ரெசிபி கொடுங்க, கொழு கொழுன்னு ஆரோக்கியமா இருப்பாங்க!

குழந்தைக்கு முதலில் ஆளி விதை தொடங்கும் போது கால் டீஸ்பூன் அளவு கொடுத்து தொடங்குங்கள். குழந்தையின் சகிப்புத்தன்மை அல்லது உணர்திறன் அறிகுறிகளையும் காட்டினால் உணவளிப்பதை நிறுத்திய பிறகு முயற்சி செய்யுங்கள். குழந்தை மருத்துவரை அணுகி ஆலோசனை செய்த பிறகு அளவை அதிகரியுங்கள்.

ஆளிவிதை ஒவ்வாமை உண்டாக்காது ஆனால் குடும்ப வரலாறில் ஒவ்வாமையை எதிர்கொண்டவர்கள் குழந்தையிடம் ஆளி விதை கொடுப்பதன் மூலம் அரிப்பு, வீக்கம், மூச்சுத்திணறல், சிவப்பு தடிப்புகள், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுபோக்கை உண்டாக்கும். இவர்கள் குழந்தைக்கு ஆளி விதைகளை தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு குடல் இரைப்பை பிரச்சனை இருந்தால் ஆளிவிதை உட்கொள்வது நல்லதல்ல. எனினும் ஆளி விதையின் ஊட்டச்சத்துகள் முழுமையாக குழந்தைக்கு கிடைக்க மருத்துவரை அணுகுங்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *