Share on Social Media

HBD Vijay Antony: இசையமைப்பாளர், நடிகர் என தனது திறமையை காட்டிய விஜய் ஆண்டனி, தற்போது “பிச்சைக்காரன் 2” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே விஜய் ஆண்டனி இசையமைத்து, நடித்திருந்த “பிச்சைக்காரன்” படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கி இருந்தார் மற்றும் இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

“பிச்சைக்காரன்” படத்தின் வெற்றியை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை விஜய் ஆண்டனி அறிவித்திருந்தார். மேலும் “பிச்சைக்காரன் 2” படத்தை தேசிய விருது பெற்ற படம் “பாரம்” படத்தின் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என்று அறிவித்தார். ஆனால் சில பிரச்சனை காரணமாக, பிரியா கிருஷ்ணசாமிக்கு பதிலாக “கோடியில் ஒருவன்” இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்குவார் எனவும் கூறப்பட்டது.

ஆனால் கொரோனா காரணமாக, இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. தற்போது மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளதால், “பிச்சைக்காரன் 2” படத்தைக் குறித்து விஜய் ஆண்டனி பிறந்த நாளை முன்னிட்டு, அந்த படத்தின் இயக்குநர் யார் என்பது வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்தது.

ALSO READ | பாலிவுட்டை மிஞ்சும் கோலிவுட்… 1000 கோடி வசூலில் தமிழ் சினிமா!

இந்தநிலையில், இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் பக்கத்தில்,  “பிச்சைக்காரன் 2” படத்தை  விஜய் ஆண்டனி இயக்குகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். 2022 ஆம் ஆண்டின் “பிளாக்பஸ்டர்” படம் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். 

 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்-க்கு நன்றி தெரிவித்த விஜய் ஆண்டனி தனது ட்விட்டரில், “நன்றி ஐயா” இயக்குனர் என்ற பாத்திரத்தை சரியாக செய்வேன் என்று என்று நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார். 

பிச்சைக்கரன் 2 படத்தின் ஸ்கிரிப்டை எழுதியுள்ள விஜய் ஆண்டனி, அதன் தொடர்ச்சியை இயக்க முடிவு செய்துள்ளார். 

ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *