Share on Social Media


மத அடிப்படைவாதத்தை விட்டுவிட்டு உலகத்தின் போக்கில் இணைய முயற்சிக்கும் நாடு சவூதி அரேபியா. அதற்கு அண்மை உதாரணமாக, அங்கு தற்போது இசை விழாக்கள் மற்றும் ரேவ் பார்ட்டிகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர் என்பது ஆச்சரியமான விஷயம்.

உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக கருதப்படும் சவுதி அரேபியா, தற்போது மாறி வருகிறது. கடும்போக்கு மதவாத சிந்தனையை விட்டுவிலகி, சவுதி இப்போது உலகத்துடன் ஒத்து வாழ விரும்புகிறது என்பதைக் காட்டுவதாக இந்த மாற்றங்கள் இருக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற ரேவ் பார்ட்டி (Rave Party) மற்றும் இசைவிழாவில் ஆண்களும் பெண்களும் மேற்கத்திய ஆடைகளில் கலந்து கொண்டது ஆதிசயமாக இருந்தது. அந்த நிகழ்ச்சிகள், சவுதி அரேபியாவில் தான் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு காரணம் பார்ட்டி அமெரிக்காவில் நடைபெறுவது போலவே இருந்தது. 

இருப்பினும், பார்ட்டியிலும் மத நம்பிக்கைகளை மதித்தனர். சிறிது நேரம் இசையை நிறுத்திவிட்டு, இஸ்லாமிய முறைப்படி தொழுகைகளை செய்தனர். பிறகு, மீண்டும் உரத்த இசை ஒலிக்க, நிகழ்ச்சி தொடர்ந்தது.

ALSO READ | சிரிக்க தடை விதித்த நாடு! மதுவுக்கும் தடா!

மாற்றத்திற்கான வித்திட்டவர் பட்டத்து இளவரசர் 
சவுதி அரேபியாவில் வார இறுதியில் நடைபெற்ற மின்னணு இசை விழா (Electronic Music Festival) உட்பட நாட்டில் ஏற்படும் மாற்றங்களுக்குக் காரணம் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் என்று ஊடகங்கள் கூறுகின்றன. 

நாடு பழமைவாத எண்ணப்போக்கில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறுகிறது. இதற்கு முன்னதாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கிய பட்டத்து இளவரசர், பாலின பாகுபாட்டைக் குறைக்கும் வேலையைத் தொடங்கினார்.

180,000-க்கும் அதிகமானோர் கலந்துக் கொண்ட இசை விழா
MLD Beast Soundstorm என்ற நான்கு நாள் இசை விழாவை சவுதி அரசே ஆதரித்தது.  இந்த விழாவில் Tiesto மற்றும் Armin van Buren போன்ற DJக்கள் இருந்தன. முதல்நாள் இரவிலேயே 180,000 க்கும் அதிகமான மக்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், தொழில்முனைவோருமான இளவரசர் ஃபஹத் அல் சவுத், ‘முன்னோக்கிச் செல்வோம், நாம் பொருத்தமாக இருக்கும் விதத்தில் முன்வைப்போம்’ என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ALSO READ | சீனாவின் சைபர் தாக்குதல் சதி

எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் முயற்சிகள்
சவுதி அரேபியா ஃபார்முலா ஒன் பந்தயங்கள், ஆர்ட் பைனியல்கள் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரானின் வருகை என சவுதி அரேபியா, தனது வழக்கத்திற்கு மாறான செயல்களில் ஈடுபடுகிறது. கடும்போக்கு இஸ்லாமிய நாடான சவூதி, தர்போது தனது வெறித்தனமான வரம்புகளை மெதுவாக பின்னுக்குத் தள்ளுவதையே காட்டுகிறது.

பட்டத்து இளவரசர், சவுதி அரேபியாவை எண்ணெய் வர்த்தகத்தைத் தவிர பிற துறைகளிலும் வலுப்படுத்த விரும்புகிறார். அதனால்தான் அவர்கள் தங்கள் நாட்டின் அடிப்படைவாத முகத்தை மாற்ற முயற்சிக்கின்றனர்.

பாலைவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இசை விழாவைப் பார்த்தால், சவுதி அரேபியாவில் தான் இதெல்லாம் நடக்கிறதா என்று நம்பமுடியவில்லை. பெண்கள் டிஜே இசைக்கு மேற்கத்திய ஆடைகளில் நடனமாடுவது நாட்டின் வித்தியாசமான வடிவத்தைக் காட்டியது.  இதுபோன்ற செயல்கள் குற்றமாக கருதப்பட்ட ஒரு நாட்டில் இந்த மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.  

READ ALSO | பாப் இசையை கேட்டதற்காக 7 பேருக்கு மரண தண்டனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.