Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்
  • தமிழில் வாழ்த்திய ஹர்பஜன் சிங்

கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த நாளில் இருந்து தமிழில் ட்வீட் செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளுக்கும் அவரை வாழ்த்தை தமிழில் ட்வீட் செய்துள்ளார் ஹர்பஜன். அவர் தன் ட்வீட்டில் கூறியிருப்பதாவது,
“என் மாருமேல சூப்பர் ஸ்டார்”
80’s பில்லாவும் நீங்கள் தான்
90’s பாட்ஷாவும் நீங்கள் தான்
2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா
@rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDSuperstarRajinikanth #SuperstarRajinikanth #ரஜினிகாந்த் என தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் அட்மின் யாருப்பா, அவரை பார்க்கணும்னு எங்களுக்கே ரொம்ப ஆசையாக இருக்கிறது என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

ஹர்பஜன் சிங் ரஜினி ரசிகர் என்று இத்தனை நாட்கள் தெரியாமல் போய்விட்டதே என கோலிவுட் ரசிகர்கள் கூறியுள்ளனர். ஹர்பஜன் சிங்கிடம் இருந்து இப்படி ஒரு வாழ்த்தை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

ரஜினிக்கு எத்தனையோ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தாலும் ஹர்பஜனின் வாழ்த்து தான் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
நீங்க நல்லா இருக்கணும்: ரஜினிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *