Share on Social Media


பொதுவாகவே கவலை இல்லாத மனிதர்களை காண்பது எவ்வளவு அரிதோ அதைவிட முடி உதிர்தல் பிரச்சனை இல்லாத மனிதர்களை காண்பது மிகவும் எளிது. காரணம் இது ஆண், பெண், இளம் வயது, முதிர் வயது என எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒன்று.இந்த பிரச்சனை இரண்டு வகையாக உள்ளது. ஒன்று முடி உதிர்வு,இன்னொன்று இழப்பு. இவை இரண்டுக்கும் இடையேயான வேறுபாடுகளை சரியாக கணித்தால் இப்பிரச்சனைகளில் இருந்து நாம் தப்பிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

​இருவகை நிலைகள்

உண்மையில் முடி உதிர்தல் பிரச்சனை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது.நீங்கள் சீப்பைக் கொண்டு சீவும் போது,தலையை துவட்டும் போது, கைவிரல்களால் தலையை கோதும் போது, தூங்கி எழும் போது என அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்தால் அது அசாதாரணமானது மட்டுமல்லாது சிக்கலானதும் கூட. அதேசமயம் தினமும் 50 முதல் 100 முடிகள் வரை முடி உதிர்ந்தால் அது சாதாரணமானது. இது காலப்போக்கில் சரியாகிவிடும்.

​காரணங்கள்

samayam tamil Tamil News Spot

முடி உதிர்தலுக்கு பொதுவான காரணம் ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா எனப்படும் பரம்பரை நிலையாகும். இது வயதான நிலையில் தான்ன் வரும். அதேபோல் உங்கள் முடியின் உறுதித்தன்மை விரைவில் வலுவிழந்து போவதற்கு பல பொதுவான காரணங்கள் இருக்கலாம்.

எனவே உங்கள் முடி உதிர்தலுக்குப் பின்னால் என்ன காரணம் உண்டு என்பதை முதலில் கண்டறிந்து தேவையான சிகிச்சைகளைப் பெறுங்கள். இதன்மூலம் உங்கள் தலைமுடிக்கு ஏற்படவிருந்த தடுக்க/ தடுக்க முடியாத சேதத்தைத் தவிர்க்கலாம். நாம் இக்கட்டுரையில் முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கும் 5 நிகழ்வுகள் குறித்து காணலாம். நிச்சயம் இவை உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கலாம்.

குளிர்காலத்தில் பப்பாளி பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்…

​சரியாக சாப்பிடுவதில்லை

samayam tamil Tamil News Spot

நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் எப்படி உணவின் மூலம் கிடைக்கிறதோ அதே மாதிரி தான் முடிகளுக்கும் கிடைக்கும். டயட் மூலம் உடல் எடையை குறைக்க நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் தலைமுடியையும் இழக்க நேரிடும்.

அதிகப்படியான உணவுகள் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி12, டி, சி மற்றும் துத்தநாகம், இரும்புச்சத்து, புரதங்கள் போன்றவற்றின் குறைபாடுகள் அதிகப்படியான முடி உதிர்வை ஏற்படுத்தும்.

புதிய கொழுப்பு நிறைந்த உணவுகள் சில சமயங்களில் உங்கள் உடலின் சீரான செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய மற்றும் மிக அடிப்படையான ஊட்டச்சத்துக்களை இழக்க அனுமதிக்கிறது மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கெட்ட கொழுப்பை கரைக்க எலுமிச்சை சாறுடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிங்க…

​உச்சந்தலையில் தொற்று

samayam tamil Tamil News Spot

உச்சந்தலையில் உண்டாகும் அதீத வலிக்கு பல காரணம் இருக்கலாம். அதில் ஒன்று பாக்டீரியா, ஈஸ்ட் அல்லது பூஞ்சைகள் அதிகமாக வளர்ந்து முடியின் வேர்க்கால்களை ஆக்கிரமிக்கும்போது தொற்று ஏற்படுவது ஆகும்.

இதனால் பூஞ்சை தொற்று, சொரியாசிஸ், பொடுகு, தோல் நோய், புற்றுநோய்கள், உச்சந்தலையில் செதில்களாக உதிர்வது, அலோபீசியா, அரேட்டா, முடி உதிர்தல் ஆகியவை ஏற்படுவதைக் காணலாம்.

பெரும்பாலான உச்சந்தலை நோய்த்தொற்றுகள் சரியான நுண்ணுயிர் எதிர்ப்புகள் அல்லது பூஞ்சை காளான் மருந்துகளால் குணப்படுத்தப்படுகின்றன.

எடையும் ஊளைச்சதையும் குறையணுமா? வாரத்துல ரெண்டு நாள் இந்த சுரைக்காய் சூப் குடிங்க… ரெசிபி இதோ…

​மிக அதிகமாக பராமரிப்பது

samayam tamil Tamil News Spot

நாம் அனைவரும் நம் தலைமுடியை அழகான மற்றும் ஸ்டைலான தலைமுடியை பெற விரும்புகிறோம். ஆனால் அதற்காக அதிகம் மெனக்கெடும் போது அது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காரணம் நாம் ஹேர்டை உள்ளிட்ட இரசாயனங்கள் கலந்த பொருட்கள் மற்றும் பிற முடி தொடர்பான சிகிச்சைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் அதிகமாக வாய்ப்புண்டு. எனவே இவைகளை உபயோகிக்கும் முன் சிந்தித்து செயல்படுங்கள்.

​ஹார்மோன் சமநிலையின்மை

samayam tamil Tamil News Spot

மோசமான உணவு, பிசிஓஎஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் தைராய்டு நிலை, மெனோபாஸ், நீரிழிவு, உடல் பருமன், மாத விடாய், உடல் எடை குறைத்தல், மனஅழுத்தம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்களால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை முடி உதிர்தலை ஏற்படுத்தும்.

இந்த பழங்களை எல்லாம் சாப்பிடும்முன் தோல் சீவக்கூடாது… ஏன் தெரியுமா?

​குறிப்பிட்ட சில மருந்துகள்

samayam tamil Tamil News Spot

நம் உடலுக்கு எப்படி குறிப்பிட்ட சில மருந்து, மாத்திரைகள், சிகிச்சை முறைகள் ஒவ்வாமையை ஏற்படுத்துமோ, அதேபோல் இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் போன்றவை முடி உதிர்தலில் பங்களிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முடி உதிர்தலுக்கான அடிப்படை காரணங்களில் ஒன்று சரியான உணவு பழக்கவழக்கம் இல்லாமல் இருப்பது தான். சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவு எப்போதும் உடலிலும் மனதிலும் ஆரோக்கிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்பதால் சரியான அளவில், ஊட்டச்சத்துக்களை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் முடி உதிர்தல் பிரச்சனையை நாம் ஆரம்ப நிலையிலேயே தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.