Share on Social Media


தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு (TN Govt) அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கொரோனா இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் பார்வையாளர்களாக பங்கேற்பவர்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையின் போது ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு (Jallikattu) நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஜல்லிக்காட்டும், பிற இடங்களில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக மாடுகளை தயார் செய்யும் பணி தொடங்கிவிட்டது. ஆனால், கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பால் இந்த முறை ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்குமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ALSO READ | OMG..! ஜனவரி முதல் LPG சிலிண்டரின் விலை வாரம் வாரம் நிர்ணயிக்கப்படும்!

இது குறித்து தமிழக அரசு (Tamil Nadu Govt) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாது., நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக, 2021 ஆம் ஆண்டில் நிகழ்ச்சி நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.

> ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

> எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

> இந்த நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கு ஏற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

ALSO READ | TNPSC முக்கிய அறிவிப்பு: இனி தேர்வெழுத ஆதார் அட்டை கட்டாயம் -முழு விவரம்

> ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

> பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.

> இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்…

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *