Share on Social Media


புதுடெல்லி: கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையைப் போலல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகளையும் பாதிக்கிறது. இதனால் ஏற்பட்ட கவலைகளுக்கு மத்தியில் சிறிய நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது.

இதுவரை 18க்கும் அதிகமானவர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வந்த தடுப்பூசியை இனிமேல், 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் போடலாம் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் ( European Drug Body) வெள்ளிக்கிழமை பரிந்துரைத்துள்ளது. இந்தத் தகவலை மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு (drugs regulatory body) தெரிவித்துள்ளது

ஃபைசர் (Pfizer) மற்றும் பயோஎன்டெக் (BioNTech)  தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தலாம் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்ததாக மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.

Also Read | CM Stalin: சிங்கப்பூர் Oxygen Cylinders 8 மாவட்டங்களுக்கு விநியோகம்

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த கோவிட் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உள்ள 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு பயன்படுத்தலாம் என கடந்த டிசம்பர் மாதம்  அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதுவரை, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் சுமார் 173 மில்லியன் டோஸ் மருந்துகள் போடப்பட்டுள்ளன. இது ஒன்றியத்தின் மக்கள்த்தொகையில் நான்கில் மூன்று பங்காகும்.

தற்போது சிறார்களுக்கும் கோவிட் பாதுகாப்பு வழங்க வேண்டியது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான படி என்று கருதப்படுகிறது. ஏனென்றால், முதலில் சிறார்களுக்கு கொரோனா தொற்று அபாயம் இல்லை என்று கூறப்பட்டது. இரண்டாவது அலை அந்த சூழ்நிலையை மாற்றிவிட்டது.

இளம் வயதினருக்கான தடுப்பூசியை அங்கீகரிப்பதற்கு தேவையான அனைத்து கட்டுப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டு அமைப்பு (EU regulator) கூறுகிறது. தொற்றுநோய்க்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் இந்த அமைப்பு கூறுகிறது.

Also Read | ICG on Colombo Ship fire: தணிந்தது தீ, எண்ணெய் கசிவு இல்லை

2,000 இளைஞர்களைக் (adolescents) கொண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு ஆய்வில், தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்குமே COVID-19 பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்த வயதினருக்கு தடுப்பூசியால் ஏற்பட்ட  பக்க விளைவு இளைஞர்களுக்கு ஏற்பட்டதைப் போன்றே இருந்தது. வித்தியாசமாக ஏதும் இல்லை என்பதால், கவலையில்லை.

EMA ஒப்புதல் கொடுத்தாலும், இந்த முடிவுக்கு ஐரோப்பிய ஆணையம் அங்கீகாரம் கொடுக்க்க வேண்டும், மேலும் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுமா என்பதை அந்தந்த நாடுகளின் தனிப்பட்ட தேசிய கட்டுப்பாட்டு அமைப்புகள் (individual national regulators) தான் தீர்மானிக்கும்.  

Also Read | தமிழகத்தில் மேலும் 1 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது 

கனடாவிலும் அமெரிக்காவிலும் இதேபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. பணக்கார நாடுகள் பெரியவர்களுக்கான தடுப்பூசி இலக்குகளை பெருமளவில் பூர்த்தி செய்துவிட்டன. எனவே, குழந்தைகளுக்கும் தடுப்பூசி மூலம் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றன.

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

Also Read | Positive Angle of  Corona: லேசான கொரோனா பாதிப்பு நோயெதிர்ப்பை அதிகரிக்கும்   

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *