Share on Social Media


Gold / Silver Rate Today: தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

சென்னையில் (Chennai) இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது. சென்னையில் நேற்று ரூ.4510 ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று ரூ.4520 ஆக உயர்ந்துள்ளது. நேற்று  ரூ.36080.00-க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை, இன்று சென்னையில் ரூ.36160 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ரூ.4874 ஆக விற்கப்பட்ட 24 காரட் ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.4884-க்கு விற்கப்படுகின்றது. நேற்று ரூ.38992-க்கு விற்கப்பட்ட 24 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.39072 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.72.10-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72100.00-க்கும் விற்கப்படுகின்றது.

ALSO READ: Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன

தேசிய அளவில் தங்கத்தின் விலை (Gold Rate) திங்களன்று ஓரளவு அதிகரித்தது. மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), காலை நிலவரப்படி ஆகஸ்ட் காண்டிராக்டுகள் 10 கிராமுக்கு 0.25 சதவீதம் உயர்ந்து ரூ .47,653 ஆக இருந்தது. வெள்ளியும் திங்களன்று உயர்ந்தது. வெள்ளியின் ஃப்யூச்சர்ஸ் இன்று காலை 0.04 சதவீதம் உயர்ந்து கிலோ 67,194 ரூபாயாக அதிகரித்தது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சரிந்தது. ராய்ட்டர்ஸ் படி, ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.1% குறைந்து 1,799.89 டாலராக இருந்தது. அமெரிக்க தங்க ஃப்யூச்சர்ஸ் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2% சரிந்து 1,798.90 டாலராக இருந்தது. டாலர் குறியீடு கடந்த வாரம் மூன்று மாத உச்சத்தை எட்டியது. இதன் விளைவாக, தங்கத்தின் மதிப்பில் மாற்றங்கள் காணப்பட வாய்ப்புள்ளது.

எனினும், தங்கத்தின் விலை குறைந்து வருவதாலும், உலகளாவிய சந்தைகளில் (International Markets) நேர்மறையான அணுகுமுறை உள்ளதாலும், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். 

ALSO READ:Gold Rate Today: சற்றே குறைந்தது தங்கத்தின் விலை, இன்றைய விலை நிலவரம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *