Share on Social Media


அமிழ்தவள்ளி மூலிகை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த அறியப்படுகிறது. இப்போது கொரோனா தொற்று நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த காலகட்டத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த தேர்வு. ஆனால் அதை அதிகப்படியாக உட்கொள்ளும் போது நமக்கு தீங்கு விளைவிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா. அதிகப்படியாக அமிழ்தவள்ளி மூலிகையை எடுத்துக் கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

​சீந்தில் எனும் அமிழ்தவள்ளி

இந்தியாவின் ஆயுர்வேத அமைப்பில் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த அமிழ்தவள்ளி மூலிகை இருந்து வருகிறது. ஆனால் தற்போது கொரோனா காலகட்டத்தில் தான் இந்த மூலிகை பற்றி மக்களுக்கு பெருமளவில் தெரியவந்தது. இதற்கு காரணம் இந்த அமிழ்தவள்ளி மூலிகையில் உள்ள மருத்துவ குணங்கள் ஆகும்.

​பக்க விளைவுகள்

samayam tamil Tamil News Spot

இது கிலோய் அல்லது அழியாத தேன் என்றும் குறிப்பிடப்படுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் இது குறிப்பாக பயன்படுகிறது. மேலும் நீரிழிவு போன்ற பிரச்சினைகளையும் சமாளிக்க இது உதவுகிறது. எனவே கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக இந்த அமிழ்தவள்ளி இலையை உட்கொள்கின்றனர். ஆனால் அதிகமாக உட்கொள்ளும் போது இதுவும் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

​சாதகமும் பாதகமும்

samayam tamil Tamil News Spot

மருத்துவ நிபுணர்கள், இந்த மூலிகையில் அதிகளவு வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது என்றும், மேலும் இதில் நோய்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் உள்ளதாகவும் கூறுகின்றனர். கொரோனா நோய்த்தொற்றின் பிந்தைய பராமரிப்புக்கு இது ஒரு சிறந்த மூலிகை என்றும் கூறுகின்றனர். சுயமாக இந்த மூலிகையை நீங்கள் உட்கொள்ளும் போது அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இதில் நன்மையை விட தீங்கு அதிகமாக இருக்கிறது . உங்களது தினசரி தேவை என்ன என்பதை புரிந்து, அதற்கேற்ப இந்த மூலிகையை எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த மூலிகையை எந்த அளவு உண்ண வேண்டும் மற்றும் எவ்வளவு காலகட்டத்திற்கு உண்ண வேண்டும் என்பதைப் பற்றி மருத்துவர்கள் உங்களுக்கு தெளிவாக கூற முடியும்.

​மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தலாம்

samayam tamil Tamil News Spot

இந்த மூலிகை செரிமான அமைப்பை மேம்படுத்துவதாக கூறப்பட்டாலும், இதை அதிகமாக உட்கொள்ளும் போது ஒரு சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. மூலிகையை உட்கொண்ட பிறகு உங்கள் குடல் இயக்கத்தில் மாற்றங்களை அறிந்தால், உங்களது மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்

​ரத்த சர்க்கரை அளவு குறைதல்

samayam tamil Tamil News Spot

இந்த அமிழ்தவள்ளி மூலிகை என்பது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இயற்கையாக பயன்படும் ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை ஆகும். மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளின் குளுக்கோஸ் அளவை குறைப்பதன் மூலம் இது திறம்பட செயல்பட உதவுகிறது. இருப்பினும் உங்கள் இரத்த சர்க்கரை நோய்க்கான மருந்துடன் இந்த மூலிகையை எடுத்துக் கொள்ளும் போது, அது உங்களது ரத்த சர்க்கரையின் அளவை மேலும் வெகுவாகக் குறைக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே எந்த ஒரு மருந்தையும் அல்லது இந்த மூலிகையையும் எடுத்துக் கொள்வதற்கு முன்பு நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.

தைராய்டு உள்ளவர்களுக்கான பழ டயட்… இதன்மூலம் எப்படி தைராய்டு ஹார்மோன் சுரப்பை முறைப்படுத்தலாம்…

​கர்ப்பிணி பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும்

samayam tamil Tamil News Spot

இந்த மூலிகை கர்ப்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு ஏற்றதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனுடைய பண்புகள் மற்றும் நன்மைகள் மக்களிடத்தில் ஆய்வு செய்யப்பட்டு இதுவரை ஆதாரபூர்வமாக அறியப்படவில்லை. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் இந்த மூலிகையை எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரை கேட்கலாம் அல்லது இதை முற்றிலும் தவிர்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த மூலிகை சிறந்ததுதான். ஆனால் அளவாக உட்கொள்ளும் போது மட்டுமே என்பது இந்த கட்டுரையின் வாயிலாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அதிகப்படியான நுகர்வு எப்பொழுதும் தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே நீங்கள் இந்த மூலிகையை உட்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று அதன் பிறகு உண்ணலாம்.

​உடல் தாக்க நோய்கள்

samayam tamil Tamil News Spot

இந்த மூலிகை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால் இதை அதிகமாக உட்கொள்ளும் போது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகமாக தூண்டி, பல சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா. இது லோபஸ் மற்றும் முடக்குவாதம் போன்ற தன்னுடல் தாக்கும் நோய்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டதால், இந்த மூலிகையை அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

தினமும் முட்டை சாப்பிட்டு ஆறே மாதத்தில் 36 கிலோ எடையை குறைத்த இளைஞர்…Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *